அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2005 இல் அலுமினா வெளியீடு

அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (list of countries by aluminium oxide production) பிரித்தானிய நில அளவைத் துறை 2006 ஆம் ஆண்டின் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினாவின் தரவுகள் அடிப்படையில் யூன் 2008 இல் தயாரிக்கப்பட்டது.

அலுமினியம் ஆக்சைடு என்பது Al2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள அலுமினியத்தின் ஓர் ஈரியல்பு ஆக்சைடு ஆகும். சுரங்க, பீங்கான தொழில்துறைகள் மற்றும் பொருளறிவியல் துறையினர் பொதுவாக இதை அலுமினா என்றும் அலாக்சைட்டு[1] என்றும் குறிப்பிடுவார்கள். பாக்சைட்டு தாதுவில் இருந்து பேயர் முறையில் அலுமினா தயாரிக்கப்படுகிறது. அலுமினாவின் மிகமுக்கியமான உப்யோகம் அலுமினியம் தயாரிப்பது ஆகும். இதனுடைய கடினத்தன்மை காரணமாக உராய்வுப் பொருளாகவும், உயர் உருகுநிலை காரணமாக ஒளிவிலகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது[2].

தரம் நாடு/பகுதி அலுமினியம் ஆக்சைடு
உற்பத்தி (டன்கள்)
  உலகம் 72,200,000
1 ஆத்திரேலியா ஆத்திரேலியா 18,312,000
2 சீனா சீனா 13,696,000
3 பிரேசில் பிரேசில் 6,720,200
4 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா 5,012,000
5 ஜமேக்கா ஜமைக்கா 4,099,548
6 உருசியா உருசியா 3,265,250
7 இந்தியா இந்தியா 3,080,000
8 சுரிநாம் சுரிநாம் 2,151,148
9 வெனிசுவேலா வெனிசுவேலா 1,920,000
10 அயர்லாந்து குடியரசு அயர்லாந்து 1,800,000
11 உக்ரைன் உக்ரைன் 1,671,620
12 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 1,514,509
13 கனடா கனடா 1,476,959
14 எசுப்பானியா எசுப்பானியா 1,400,000
15 இத்தாலி இத்தாலி 1,090,000
16 செருமனி செருமனி 830,000
17 சப்பான் சப்பான் 780,000
18 உருமேனியா ருமேனியா 621,973
19 கினியா கினியா 555,000
20 கிரேக்க நாடு கிரீசு 510,000
21 பிரான்சு பிரான்சு 500,000
22 அசர்பைஜான் அசர்பைஜான் 352,665
23 அங்கேரி அங்கேரி 300,000
24 மொண்டெனேகுரோ மொண்டெனேகுரோ 236,740
25 துருக்கி துருக்கி 140,089
26 ஈரான் ஈரான் 130,000

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aloxite" பரணிடப்பட்டது 2007-06-25 at the வந்தவழி இயந்திரம், ChemIndustry.com database, retrieved 24 February 2007
  2. "Alumina (Aluminium Oxide) – The Different Types of Commercially Available Grades". The A to Z of Materials. பார்க்கப்பட்ட நாள் 2007-10-27.

வெளி இணைப்புகள்[தொகு]