சியரீசின் மீதுள்ள பிரகாசமான ஒளிர்புள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருளுக்குள் மங்கித் தெரியும் ஒளிர்புள்ளிகள்
ஆக்கேட்டார் (கிண்ணக்குழி)யில் இருளை வெற்றி கொண்டுள்ள பல ஒளிர்புள்ளிகள்

சியரீசின் மீதுள்ள பிரகாசமான ஒளிர்புள்ளிகள் (Bright surface features on ceres) என்பவை மிளிரிகள் என்றழைக்கப்படும் சியரீசின் மேற்பரப்பில் காணப்படும் பிரகாசமான ஒளிர்புள்ளிகளைக் குறிக்கிறது. டோன் விண்கலம் 2015 ஆம் ஆண்டில் சியரீசின் மீதுள்ள இவ்வொளிர் புள்ளிகளை கண்டறிந்தது.

மிகப்பிரகாசமான ஒளிர்புள்ளியான மிளிரி 5, பல கொத்துகள் அடங்கிய ஒரு புள்ளியாக 80 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஆக்கேட்டார் கிண்ணக்குழியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது[1][2] . பெரியதும் பிரகாசமானதுமான இக்கொத்தின் ஒளிர்ப்புள்ளி கிண்ணக்குழியின் மையத்திலும் ஒளி தாழ்ந்த மங்கலான பகுதி கிண்ணக்குழியின் கிழக்கு விளிம்பிலும் காணப்படுகிறது. டோன் விண்கலத்தின் ஆரம்பப் பயணத்தின் சுற்றுப்பாதை கட்டத்தில் உணரப்பட்ட அதிகமான எதிரொளிப்புத் திறன், வாயு வெளிப்படுத்தலின் காரணமாகத் தோன்றியதாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டது[3]. இப்பிரகாசமானது அதிக எதிரொளிப்புத் திறன் கொண்ட ஒரு பொருளினால் திருப்பப்பட்ட சூரிய ஒளியின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்ற முடிவுக்கு நாசா வந்தது. எதிரொளிக்கும் அப்பொருள் பனிக்கட்டி மறும் உப்புகளால் ஆகியிருக்கலாம் எனவும் கருதப்பட்டது[4] . மிளிரிகளின் எதிரொளிப்பு ஒளி சியரீசின் மேற்பரப்பு ஒளிர்வைக் காட்டிலும் 40 சதவீதம் அதாவது நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும் கருதப்படுகிறது[5]

மிளிரி 5[தொகு]

மிகப்பிரகாசமான ஒளிர்புள்ளியான மிளிரி 5, பல கொத்துகள் அடங்கிய ஒரு புள்ளியாக[1][2]. 19.86° வடக்கு அட்சரேகை: 238.85 கி தீர்க்கரேகை ஆள்கூறுகளில் உள்ள 80 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஆக்கேட்டார் கிண்ணக்குழியில் அமைந்திருக்கிறது[1][2]

சியரீசின் மேற்பரப்பைச் சூழ்ந்திருந்த பனிக்கட்டி போன்ற உப்புப் பொருள் விண்கல்லால் ஒரு நீரதர்ச்சிக்கோ அல்லது வெப்பமூட்டலுக்கோ உட்பட்டு அதிலுள்ள உப்புநீர் மேற்பரப்பில் இருந்து வெந்நீரூற்றாக மேல் உயர்ந்திருக்கலாம் என சுவின்பேர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலன் டஃபி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்[6]. தண்ணீர் முழுவதும் விண்வெளிக்குள் வெளியேறி தற்பொழுது வெறும் உப்புமட்டும் அங்கு எஞ்சியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இப்பனிமூட்டம் ஆக்கேட்டார் கிண்ணக்குழியின் பாதியளவிற்கு நிரம்பி மேலும் விளிம்புவரை பரவாமல் ஒளிபுள்ளி மிளிரி 5 ஐச் சுற்றிலும் சூழ்ந்திருப்பது போன்ற தோற்றத்தை இது வழங்குகிறது[7]. வாயு வெளிப்படுதல் அல்லது எரிமலை வெளியாதல் என்ற இலக்குக்கு சில ஆதாரங்களை வழங்குவதாகவும் இக்கருத்து இருக்கிறது[8][9]

வானியல் இதழ்கள்[10], அறிவியல் பத்திரிகைகள்[11] , செய்தி மூலங்கள்[12] முதலான ஊடகங்களுக்கு டோன் வின்கலத்தின் புகைப்படங்கள் மிகவிரிவான அறிக்கைகள் வெளியிட வழிவகுத்தன:[13]. பனிக்கட்டி, எரிமலைகள், வெந்நீருற்றுகள், உப்புப் படிவுகள், பாறைகள் அல்லது இவைபோல ஏதோவொரு பொருள்[14] இப்பிரகாசமான ஒளிர்புள்ளிக்கு காரணமாக இருக்கலாம் என்று நாசாவும் கணித்துக் கூறியுள்ளது.

கிண்ணக்குழியின் தாழ் கோணங்களில் தெரிகின்ற இம்மூட்டம் கிண்ணக்குழியின் வெளிப்புறத்தில் தெரியவில்லை, மற்றும் இம்மூட்டமானது பனிக்கட்டியின் பதங்கமான ஆவியாக ஒளிர்புள்ளிகளுடன் இணைந்திருக்கலாம் என்று குறுங்கோள் வல்லுநர் ஏ.இரிவிக்கின் வானம் மற்றும் தொலைநோக்கி என்ற செய்தி இதழில் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் [15]

"மிளிரி 5" ஆக்கேட்டார் கிண்ணக்குழி (விரிவாக்கப்பட்டது; மே 2015).

திட்டமிடப்பட்ட உற்று நோக்கல்கள்[தொகு]

டோன் விண்கலம் டிசம்பர் 2015 இல் சியரீசுக்கு 375 கிலோமீடார் அருகில் செல்ல இருப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு இவ்விண்கலம் சியரீசின் இவ்வருகாமையில் இருந்து டோன் விண்கலத்தின் அண்டக்கதிர் மற்றும் நியூட்ரான் உணர்த்திகள் சியரீசின் ஈர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பு வேதிப்பொருட்கள் போன்ற தரவுகளை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது[4][16].

படக்காட்சியகம்[தொகு]

டோன் விண்கலனுக்கு முன்பு ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் காணப்பட்ட சியரீசின் ஒளிர்புள்ளிகள்
(2003)
(12 பிப்ரவரி 2015) இல் டோன் விண்கலம் வெளியிட்ட ஒளிர்புள்ளிகள்
டோன் விண்கலம் எடுத்த பிரகாசமான ஒளிர் புள்ளிகள்
Dawn
images (cropped) of bright spots on Ceres
Bright " மிளிரி 1" அவாலானி கிண்ணக்குழியில் இல்
இருந்து 4,400 km (2,700 mi)
(17 யூன் 2015)
தொகாரு கிண்ணக்குழியின் வடகிழக்கு சுவரில் (PIA19628-Ceres-DwarfPlanet-Dawn-2ndMappingOrbit-image51-20150606.jpg)
(6 யூன் 2015)
ஒளிர்புள்ளி சியரீசின் பட்டைக்கூம்பு வடிவ மலைத்தொடர் அருகில்
(6 யூன் 2015)
ஒளிர்புள்ளி "மிளிரி 5" ஆக்கேட்டார் கிண்ணக்குழி இல்
: சிவப்பு=உயரம்; பச்சை=தாழ்வு
(28 யூலை 2015)[17]
பிரகாசமான " மிளிரி 5" இலிருந்து 13,600 km (8,500 mi)
(4 மே 2015)
சியரீசு – குறுங்கோள்
சியரீசின் மீதுள்ள பிரகாசமான ஒளிர்புள்ளிகள்:
" மிளிரி 1" (மேல் வரிசை) (சுற்றுப்புறத்தை விட குளிர்ந்தது);
" மிளிரி 5" (அடியில்) (சுற்றுப்புறத்தை விட வெப்பமானது) (ஏப்ரல் 2015).

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Staff (13 July 2015). "USGS: Ceres nomenclature" (பி.டி.எவ்). USGS. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
  2. 2.0 2.1 2.2 Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Occator on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
  3. LPSC 2015: First results from Dawn at Ceres: provisional place names and possible plumes
  4. 4.0 4.1 Feltman, Rachel (July 10, 2015). "The weird white spots on Ceres might not be ice after all". The Washington Pot. http://www.washingtonpost.com/news/speaking-of-science/wp/2015/07/10/the-weird-white-spots-on-ceres-might-not-be-ice-after-all/. பார்த்த நாள்: 2015-07-24. 
  5. Rayman, Marc. "Now Appearing At a Dwarf Planet Near You: NASA's Dawn Mission to the Asteroid Belt" Foothill College, Los Altos, CA (8 April 2015).
  6. "A. Duffy – Cosmos – What on Ceres are those bright spots?". Archived from the original on 2015-10-15. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
  7. "Chris Russel at". Archived from the original on 2015-07-24. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. Rivkin, Andrew (21 July 2015). "Dawn at Ceres: A haze in Occator crater?". The Planetary Society. http://www.planetary.org/blogs/guest-blogs/2015/0721-dawn-at-ceres-a-haze-in-occator-rivkin.html. பார்த்த நாள்: 2015-07-24. 
  9. Dawn at Ceres: A haze in Occator crater? Posted by Andrew Rivkin
  10. Beatty, Kelly (3 March 2015). "Bright Spots on Ceres Intrigue Scientists". Sky & Telescope. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  11. Witze, Alexandra (18 March 2015). "Bright Spots on Ceres Could Be Active Ice". Scientific American. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
  12. Amos, Jonathan (2 March 2015). "Bright spotlight on Dawn mission to Ceres". BBC News. http://www.bbc.com/news/science-environment-31702639. பார்த்த நாள்: 2 June 2015. 
  13. Staff (25 May 2015). "What's the spot on World Ceres?". நாசா. Archived from the original on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
  14. Cofield, Calla (22 May 2015). "What Are Those Bright Spots on Ceres? Go Vote!". Space.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
  15. Sky and Telescope magazine - Dawn Sees Ceres Bright Spots and More By Emily Poore July 30, 2015
  16. "NASA's Dawn Fills out its Ceres Dance Card". NASA. December 3, 2013. பார்க்கப்பட்ட நாள் July 24, 2015.
  17. Landau, Elizabeth (28 July 2015). "New Names and Insights at Ceres". நாசா. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ceres (dwarf planet)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.