குரோமியம் அறுபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரோமியம் அறுபுளோரைடு (Chromium hexafluoride or chromium(VI) fluoride) என்பது CrF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கருத்தியலான கனிம வேதியியல் சேர்மமாகும். முன்னதாக இச்சேர்மம் -100 0 செ வெப்பநிலையில் [1] சிதைவடையக்கூடிய ஒரு மஞ்சள் நிறமான திண்மம் எனக் கருதப்பட்டது. ஆனால் , பின்னர் இது குரோமியம் ஐம்புளோரைடு (CrF5) .[2] என அறியப்பட்டது.

தோல்வியில் முடிந்த தொகுப்பு முறைகள்[தொகு]

குரோமியம் உலோகத்தை 4000 செ வெப்பநிலையில் 20 மில்லியன் பாஸ்கல் அழுத்தத்தில் செயலறு நிலை புளோரினேற்றம் செய்து உடனடியாக வினைகலனில் இருந்து நீக்கி உறைய வைத்தால் சிதைவடைவைத் தடுத்து இதைத் தயாரிக்க முடியும் எனக் கருதப்பட்டது.

Cr + 3 F2 → CrF6

ஆனாலும், குரோமியம் அறுபுளோரைடுக்குப் பதிலாக குரோமியம் ஐம்புளோரைடுதான் உருவானது.

2 Cr + 5 F2 → 2 CrF5

குரோமியம் அறுபுளோரைடு இன்றுவரை தயாரிக்கப்படவில்லை...

மேற்கோள்கள்[தொகு]

  1. Hope, Eric G.; Levason, William.; Ogden, J. Steven. (1991). "Is chromium hexafluoride octahedral? Experiment still suggests "yes!"". Inorganic Chemistry 30 (26): 4873. doi:10.1021/ic00026a002. 
  2. Riedel, Sebastian; Kaupp, Martin (2009). "The highest oxidation states of the transition metal elements". Coordination Chemistry Reviews 253 (5–6): 606–624. doi:10.1016/j.ccr.2008.07.014. http://144.206.159.178/ft/243/588116/14862785.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்_அறுபுளோரைடு&oldid=2629321" இலிருந்து மீள்விக்கப்பட்டது