பெள்ளந்தூர் ஏரி

ஆள்கூறுகள்: 12°56′3″N 77°39′46″E / 12.93417°N 77.66278°E / 12.93417; 77.66278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெள்ளந்தூர் ஏரி
அமைவிடம்பெங்களூருவின் தென்கிழக்குப்பகுதி
ஆள்கூறுகள்12°56′3″N 77°39′46″E / 12.93417°N 77.66278°E / 12.93417; 77.66278
முதன்மை வெளியேற்றம்வரத்தூர் ஏரி
வடிநிலப் பரப்பு148 சதுர கிமீ
அதிகபட்ச நீளம்3.6 கிமீ
அதிகபட்ச அகலம்1.4 கிமீ
மேற்பரப்பளவு3.61 சதுர கிமீ
கடல்மட்டத்திலிருந்து உயரம்921 மீ
உறைவுஇல்லை
குடியேற்றங்கள்பெங்களூரு

பெள்ளந்தூர் ஏரி (கன்னடம்: ಬೆಳ್ಳಂದೂರು ಕೆರೆ/ಕೊಳ/ಹಳ್ಳ), தென்கிழக்கு பெங்களூரில் உள்ள ஏரியாகும். இது பெள்ளந்தூர் சாக்கடைத் திட்டத்தின் தெற்குப் பகுதிகளையும் தென்கிழக்குப் பகுதிகளையும் சார்ந்த பகுதியாகும். பெள்ளந்தூர் ஏரி சுமார் 148 சதுர கிமீ (37,000 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. 

இந்த ஏரி நீரானது கிழக்கே வரத்தூர் ஏரிக்கும், அங்கிருந்து பிங்கானி ஆற்று பாசனத்திற்கும் செல்கிறது[1]. தற்போது இந்த ஏரியானது கழிவுநீரால் மாசடைந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த ஏரியின் நுரையினால் தீப்பிடித்து பல மணிநேரம் எரிந்தது குறிப்பிடத்தக்கது.

புவியியல்[தொகு]

பெள்ளந்தூர் ஏரி, பெங்களூரில் அமைந்துள்ள நீர்நிலைகளில் முக்கியமான ஒன்றாகும். தென்பெண்ணை ஆற்றின் பகுதியையும், வரத்தூர் ஏரியையும் சார்ந்துள்ளது இந்த ஏரி. இப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களாலும், குடியிருப்புப் பகுதிகளாலும், இப்பகுதி மாசடைந்து நிலத்தடி நீர் குறைந்து காணப்படுகிறது[2]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெள்ளந்தூர்_ஏரி&oldid=1908140" இலிருந்து மீள்விக்கப்பட்டது