சிறுமலை பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுமலை பாறை ஓவியங்கள் என்பன, திண்டுக்கல் மாவட்டத்தில், அருவிமலை என்னும் இடத்தில் அமைந்துள்ள சிறிய மலைப்பகுதியில் காணப்படும் பாறைகளில் வரையப்பட்டுள்ள பழங்கால ஓவியங்களைக் குறிக்கும். இவற்றுள் தொன்மையானவையும், பிற்காலத்தனவுமான ஓவியங்கள் கலந்து காணப்படுகின்றன.[1]

விலங்குகளினதும், மனிதரதும் உருவங்கள் இவ்வோவியங்களில் காணப்படுகின்றன. விலங்குகள் தம்மிடையே சண்டையிடும் காட்சிகளும், வேட்டைக் காட்சிகளும் இவ்வோவியங்களில் காணக்கிடக்கின்றன.[2] இங்குள்ள ஓவியங்களில் காணப்படும் மனித உருவங்கள் கோட்டுருவங்களாக அன்றி, பட்டையாக நிறம் தீட்டப்பட்டுக் காணப்படுகின்றன. இவற்றுட் சில வெள்ளை நிறமும், வேறு சில சிவப்பு, வெள்ளை ஆகிய இரு நிறங்களிலும் வரையப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 83
  2. பவுன்துரை, இராசு., 2001, பக். 75, 76.
  3. பவுன்துரை, இராசு., 2001, பக். 76.

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமலை_பாறை_ஓவியங்கள்&oldid=1905890" இலிருந்து மீள்விக்கப்பட்டது