நீலகிரி பொந்து பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகிரி பொந்து பாம்பு
நீலகிரி பொந்து பாம்பு அல்லது பெராடெட் தட்டைவால் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
யூரோபெல்டிடே
பேரினம்:
பெலிக்டுரரசு
இனம்:
பெ. பெரோடெடி
இருசொற் பெயரீடு
பெலிக்டுரரசு பெரோடெடி
துமெரில், பைப்ரன், துமெரில், 1854
வேறு பெயர்கள்
  • பெலிக்டுரரசு பெரோடெடி துமெரில், பைப்ரன், துமெரில், 1854
  • பெலிக்டுரரசு பெரோடெட்டி மெக்டையர்மிட், கேம்பெல், தெள்ரி, 1999

நீலகிரி பொந்து பாம்பு (Plectrurus perrotetii-பெலிக்டுரரசு பெரோடெட்டி) என்பது பெரோடெட்சு தட்டைவால் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது[1][2]. இது இந்தியாவில் உள்ள ஓர் விசமற்ற மிகச்சிறிய பாம்பு சிற்றினமாகும். இந்த பாம்பு இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய ஓர் அகணிய உயிரியாகும்.

பெயரிடல்[தொகு]

பிரெஞ்சு இயற்கையியலாளர் ஜார்ஜ் சாமுவேல் பெரோட்டெட்டின் (1793-1867) நினைவாக இந்த பாம்பின் சிற்றினப் பெயரான பெரோடெட்டி இடப்பட்டது.[3]

பரவல்[தொகு]

இது இந்தியாவின் தெற்கு பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களிலும் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பாம்புகள் அளவில் சிறியதாக இருக்கும். இதன் நீளம் அதிகபச்சமாக 44 செமீ வரை (17.5 அங்குலம்) வளரக்கூடியது. பழுப்பு நிறத்தில் இருக்கும், கூரான தலை மற்றும் மழுங்கிய வால்கொண்டிருக்கும். இதன் உடலிலில் மென்மையான, பெரிய பளபளப்பான செதில்கள் இருக்கும். உடல் உருளையாக, செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை தன் பெரும்பாலான நேரத்தை மண்ணுக்கு அடியில் கழிக்கிறது. இரவாடியான இவற்றை பார்ப்பது அரிது. இப்பாம்பிற்கே உரிய கூம்பிய தலையில், கரிய நிற கண்கள் இருக்கும்.[1]

உயிரியல்[தொகு]

இப்பாம்புகள் பொதுவான புழுப்பாம்பு போல இருக்கும். சிலர் இதை மண்புழு என தவறாக கருதவும் இடம் உள்ளது. மலைக்காடுகளில் இதன் வாழிடம் அழிக்கப்படுவதால் இது அருகிவரும் இனமாகிவிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "நல்ல பாம்பு - 20: மேற்கு மலைத் தொடரின் தனித்துவப் பாம்புகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  2. வார்ப்புரு:EMBL species. www.reptile-database.org
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. ISBN 978-1-4214-0135-5. (Plectrurus perroteti, p. 203).

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

  • Boulenger GA (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families ...Uropeltidæ ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I-XXVIII. (Plectrurus perroteti, p. 161).
  • Duméril A-M-C, Bibron G, Duméril A[-H-A] (1854). Erpétologie générale ou histoire naturelle complète des reptiles. Tome septième.—Première partie. Comprenant l'histoire des serpents non venimeux [= General Herpetology or Complete Natural History of the Reptiles. Volume 7, Part I. Containing the Natural History of the Nonvenomous Snakes]. Paris: Roret. xvi + 780 pp. (Plectrurus perroteti, new species, pp. 167–168). (in French).
  • Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Plectrurus perroteti, p. 71).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_பொந்து_பாம்பு&oldid=3650911" இலிருந்து மீள்விக்கப்பட்டது