ஆடவர் 100 மீ ஓட்டப்பந்தய சாதனை மேம்பாட்டு போக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ.ஏ.ஏ.எஃபால் அங்கீகரிக்கப்பட்ட ஆடவர் 100 மீ ஓட்டப்பந்தய சாதனை மேம்பாடுகள்

தடகள விளையாட்டுகளில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் சாதனை 1912 ஆம் ஆண்டில் பன்னாட்டு தொழில்முறையற்ற தடகளக் கூட்டமைப்பினால் (இன்றைய தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம்) அங்கீகரிக்கப்பட்டது. இன்றைய சாதனை 9.58 நொடிகளாக உசேன் போல்ட்டினால் நிகழ்த்தப்பட்டது.

As of 21 சூன் 2011 வரை, ஐ.ஏ.ஏ.எஃப், திரும்பப் பெற்றவை தவிர்த்து, 67 சாதனைகளை அங்கீகரித்துள்ளது.[1]

ஐ.ஏ.ஏ.எஃபிற்கு முந்தைய போக்குகள்[தொகு]

நேரம் வீரர் நாடு இடம் தேதி
10.8 லூதர் கேரி (Luther Cary)  ஐக்கிய அமெரிக்கா பாரிஸ், பிரான்சு ஜூலை 4, 1891
செசில் லீ (Cecil Lee)  ஐக்கிய இராச்சியம் பிரசெல்சு, பெல்ஜியம் செப்டம்பர் 25, 1892
எடியென் டெ ரே (Etienne De Re)  பெல்ஜியம் பிரசெல்சு, பெல்ஜியம் ஆகஸ்ட் 4, 1893
எல். அட்சர்லே (L. Atcherley)  ஐக்கிய இராச்சியம் பிராங்க்ஃபுர்ட், ஜெர்மனி ஏப்ரல் 13, 1895
ஹாரி பீட்டன் (Harry Beaton)  ஐக்கிய இராச்சியம் ராட்டர்டேம், நெதர்லாந்து ஆகஸ்ட் 28, 1895
ஹரால்டு ஆன்டர்ஸன்-அர்பின் (Harald Anderson-Arbin)  சுவீடன் ஹெல்சிங்போர்க், சுவீடன் ஆகஸ்ட் 9, 1896
ஐசாக் வெஸ்டர்க்ரென் (Isaac Westergren)  சுவீடன் யாவ்லா (Gävle), சுவீடன் செப்டம்பர் 11, 1898
 சுவீடன் யாவ்லா (Gävle), சுவீடன் செப்டம்பர் 10, 1899
ஃப்ராங்க் ஜார்விஸ் (Frank Jarvis)  ஐக்கிய அமெரிக்கா பாரிஸ், பிரான்சு ஜூலை 14, 1900
வால்டர் டெக்ஸ்பரி (Walter Tewksbury)  ஐக்கிய அமெரிக்கா பாரிஸ், பிரான்சு ஜூலை 14, 1900
கார்ல் லுயங் (Carl Ljung)  சுவீடன் ஸ்டாக்ஹோம், சுவீடன் செப்டம்பர் 23, 1900
வால்டர் டெக்ஸ்பரி (Walter Tewksbury)  ஐக்கிய அமெரிக்கா பிலடெல்பியா, அமெரிக்கா அக்டோபர் 6, 1900
ஆன்ட்ரே பஸ்ஸாட் (André Passat)  பிரான்சு பொர்தோ, பிரான்சு ஜூன் 14, 1903
லூயி கஹ்ன் (Louis Kuhn)  சுவிட்சர்லாந்து பொர்தோ, பிரான்சு ஜூன் 14, 1903
ஹரால்டு கிரன்ஃபெல்டு (Harald Grønfeldt)  டென்மார்க் ஆர்கஸ் (Aarhus), டென்மார்க் ஜூலை 5, 1903
எரிக் ஃப்ரிக் (Eric Frick)  சுவீடன் யான்காபிங் (Jönköping), சுவீடன் ஆகஸ்ட் 9, 1903
10.6 நட் லின்ட்பர்க் (Knut Lindberg)  சுவீடன் கோதன்பர்க் (Gothenburg), சுவீடன் ஆகஸ்ட் 26, 1906
10.5 எமில் கெட்டரர் (Emil Ketterer)  ஜெர்மனி கார்ல்ஸ்ருஷே (Karlsruhe), ஜெர்மனி ஜூலை 9, 1911
ரிச்சர்டு ரா (Richard Rau)  ஜெர்மனி பிரான்ஸ்சுவேக் (Braunschweig), ஜெர்மனி ஆகஸ்ட் 13, 1911
ரிச்சர்டு ரா (Richard Rau)  ஜெர்மனி மியூனிக், ஜெர்மனி மே 12, 1912
எர்வின் கெர்ன் (Erwin Kern)  ஜெர்மனி மியூனிக், ஜெர்மனி மே 26, 1912

பிந்தைய கால சாதனைபோக்குகள்[தொகு]

அங்கீகரிக்கப்பட்டவை
அங்கீகரிக்கப்படாதவை
அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டவை

1912–1976 இடையிலான சாதனைகள்[தொகு]

நேரம் காற்றுவிசை தா.நே வீரர் நாடு இடம் தேதி குறிப்புகள்
10.6 டொனால்டு லிப்பின்காட் (Donald Lippincott)  ஐக்கிய அமெரிக்கா ஸ்டாக்ஹோம், சுவீடன் ஜூலை 6, 1912 [1]
ஜாக்ஸன் ஷோல்ஜ் (Jackson Scholz)  ஐக்கிய அமெரிக்கா செப்டம்பர் 16, 1920 [1]
10.4 சார்லீ பேட்டாக் (Charlie Paddock)  ஐக்கிய அமெரிக்கா ரெட்லாண்ட்ஸ் (Redlands), ஐக்கிய அமெரிக்கா ஏப்ரல் 23, 1921 [1]
0.0 எட்டீ டோலன் (Eddie Tolan)  ஐக்கிய அமெரிக்கா ஸ்டாக்ஹோம், சுவீடன் ஆகஸ்ட் 8, 1929 [1]
கோபனாவன், டென்மார்க் ஆகஸ்ட் 25, 1929 [1]
10.3 பெர்சி வில்லியம்ஸ் (Percy Williams)  கனடா ரொறன்ரோ, கனடா ஆகஸ்ட் 9, 1930 [1]
ஆர்தர் ஜோனாத் (Arthur Jonath)  செருமனி போக்கம் (Bochum), ஜெர்மனி ஜூலை 5, 1932 [2]
0.4 10.38 எட்டீ டோலன் (Eddie Tolan)  ஐக்கிய அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா ஆகஸ்ட் 1, 1932 [1]
0.4 10.38 ரால்ஃப் மெட்கால்ஃப் (Ralph Metcalfe)  ஐக்கிய அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா ஆகஸ்ட் 1, 1932 [2]
ரால்ஃப் மெட்கால்ஃப் (Ralph Metcalfe)  ஐக்கிய அமெரிக்கா புடாபெஸ்ட், அங்கேரி ஆகஸ்ட் 12, 1933 [1]
இயூலேஸ் பீகாக் (Eulace Peacock)  ஐக்கிய அமெரிக்கா ஒஸ்லோ, நோர்வே ஆகஸ்ட் 6, 1934 [1][3]
கிறிஸ் பெர்கர் (Chris Berger)  நெதர்லாந்து ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து ஆகஸ்ட் 26, 1934 [1]
ரால்ஃப் மெட்கால்ஃப் (Ralph Metcalfe)  ஐக்கிய அமெரிக்கா ஒசாக்கா, ஜப்பான் செப்டம்பர் 15, 1934 [1]
2.0 தைரன் (Dairen), சீனா செப்டம்பர் 23, 1934 [1]
2.5 தகயோஷி யோஷியோகா (Takayoshi Yoshioka)  சப்பான் தோக்கியோ, ஜப்பான் ஜூன் 15, 1935 [1]
10.2 1.2 ஜெசி ஓவென்ஸ்  ஐக்கிய அமெரிக்கா சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா ஜூன் 20, 1936 [1]
-0.9 ஹரால்ட் டேவிஸ் (Harold Davis)  ஐக்கிய அமெரிக்கா காம்ப்டன், ஐக்கிய அமெரிக்கா ஜூன் 6, 1941 [1]
0.7 லோய்ட் லபீச் (Lloyd LaBeach)  பனாமா ஃப்ரெஸ்னோ, ஐக்கிய அமெரிக்கா மே 15, 1948 [1]
10.35 பார்னே எவெல் (Barney Ewell)  ஐக்கிய அமெரிக்கா எவான்ஸ்டன், அமெரிக்க ஐக்கிய நாடு ஜூலை 9, 1948 [1]
0.0 மெக்டொனால்டு பெய்லி (McDonald Bailey)  பெரிய பிரித்தானியா பெல்கிரேடு, யுகோசுலேவியா ஆகஸ்ட் 25, 1951 [1]
1.1 ஹெய்ன்சு ஃபூட்டரர் (Heinz Fütterer)  மேற்கு செருமனி யோக்கோகாமா, ஜப்பான் அக்டோபர் 31, 1954 [1]
0.9 பாபி மாரோ (Bobby Morrow)  ஐக்கிய அமெரிக்கா ஹியூஸ்டன், ஐக்கிய அமெரிக்கா மே 19, 1956 [1]
-1.0 ஐரா மர்ச்சிசன் (Ira Murchison)  ஐக்கிய அமெரிக்கா காம்ப்டன், ஐக்கிய அமெரிக்கா ஜூன் 1, 1956 [1]
0.0 பாபி மாரோ (Bobby Morrow)  ஐக்கிய அமெரிக்கா பேகர்ஸ்ஃபீல்டு, ஐக்கிய அமெரிக்கா ஜூன் 22, 1956 [1]
-1.3 ஐரா மர்ச்சிசன் (Ira Murchison)  ஐக்கிய அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா ஜூன் 29, 1956 [1]
-0.4 பாபி மாரோ (Bobby Morrow)  ஐக்கிய அமெரிக்கா
10.1 0.7 வில்லீ வில்லியம்ஸ் (Willie Williams)  ஐக்கிய அமெரிக்கா பெர்லின், ஜெர்மனி ஆகஸ்ட் 3, 1956 [1]
1.0 ஐரா மர்ச்சிசன் (Ira Murchison)  ஐக்கிய அமெரிக்கா பெர்லின், ஜெர்மனி ஆகஸ்ட் 4, 1956 [1]
1.5 லேமன் கிங் (Leamon King)  ஐக்கிய அமெரிக்கா ஒன்டாரியோ, ஐக்கிய அமெரிக்கா அக்டோபர் 20, 1956 [1]
0.9 சான்டா ஆனா, ஐக்கிய அமெரிக்கா அக்டோபர் 27, 1956 [1]
1.3 ரே நார்டன் (Ray Norton)  ஐக்கிய அமெரிக்கா சான் ஹொசே, ஐக்கிய அமெரிக்கா ஏப்ரல் 18, 1959 [1]
10.0 0.9 10.25 ஆர்மின் ஹாரி (Armin Hary)  மேற்கு செருமனி சூரிக்கு, சுவிட்சர்லாந்து ஜூன் 21, 1960 [1]
1.8 ஹார்ரி ஜெரோம் (Harry Jerome)  கனடா சாஸ்கடூன், கனடா ஜூலை 15, 1960 [1]
0.0 ஹொராசியோ எஸ்தவஸ் (Horacio Esteves)  வெனிசுவேலா கரகஸ், வெனிசுவேலா ஆகஸ்ட் 15, 1964 [1]
1.3 10.06 பாப் ஹேயஸ் (Bob Hayes)  ஐக்கிய அமெரிக்கா டோக்கியோ, ஜப்பான் அக்டோபர் 15, 1964 [1]
2.0 10.17 ஜிம் ஹைன்ஸ் (Jim Hines)  ஐக்கிய அமெரிக்கா மாடெஸ்டோ, ஐக்கிய அமெரிக்கா மே 27, 1967 [1]
1.8 என்ரிக் ஃபிகுவெரோலா (Enrique Figuerola)  கியூபா புடாபெஸ்ட், அங்கேரி ஜூன் 17, 1967 [1]
0.0 பால் நாஷ் (Paul Nash)  தென்னாப்பிரிக்கா குரூகர்ஸ்டோர்ப், தென்னாப்பிரிக்கா ஏப்ரல் 2, 1968 [1]
1.1 ஆலிவர் ஃபோர்டு (Oliver Ford)  ஐக்கிய அமெரிக்கா ஆல்புகெர்க்கி, ஐக்கிய அமெரிக்கா மே 31, 1968 [1]
2.0 10.20 சார்லஸ் கிரீன் (Charles Greene)  ஐக்கிய அமெரிக்கா சேக்ரமெண்டோ, ஐக்கிய அமெரிக்கா ஜூன் 20, 1968 [1]
2.0 10.28 ரோஜர் பாம்பக் (Roger Bambuck)  பிரான்சு
9.9 0.8 10.03 ஜிம் ஹைன்ஸ் (Jim Hines)  ஐக்கிய அமெரிக்கா சேக்ரமெண்டோ, ஐக்கிய அமெரிக்கா ஜூன் 20, 1968 [1]
0.9 10.14 ரோன்னீ ரே ஸ்மித் (Ronnie Ray Smith)  ஐக்கிய அமெரிக்கா
0.9 10.10 சார்லஸ் கிரீன் (Charles Greene)  ஐக்கிய அமெரிக்கா
0.3 9.95 ஜிம் ஹைன்ஸ் (Jim Hines)  ஐக்கிய அமெரிக்கா மெக்சிகோ நகரம், மெக்சிகோ அக்டோபர் 14, 1968 [1]
0.0 எட்டீ ஹார்ட் (Eddie Hart)  ஐக்கிய அமெரிக்கா இயூஜீன், ஐக்கிய அமெரிக்கா ஜூலை 1, 1972 [1]
0.0 ரே ராபின்சன் (Rey Robinson)  ஐக்கிய அமெரிக்கா
1.3 ஸ்டீவ் வில்லியம்ஸ் (Steve Williams)  ஐக்கிய அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா ஜூன் 21, 1974 [1]
1.7 சில்வியோ லியோனார்டு (Silvio Leonard)  கியூபா ஓஸ்த்ராவா, செக்கோசிலோவாக்கியா ஜூன் 5, 1975 [1]
0.0 ஸ்டீவ் வில்லியம்ஸ் (Steve Williams)  ஐக்கிய அமெரிக்கா சியென்னா, இத்தாலி ஜூலை 16, 1975 [1]
-0.2 பெர்லின், ஜெர்மனி ஆகஸ்ட் 22, 1975 [1]
0.7 கெய்ன்ஸ்வில்லெ, ஐக்கிய அமெரிக்கா மார்ச் 27, 1976 [1]
0.7 ஹார்வீ கிலான்ஸ் (Harvey Glance)  ஐக்கிய அமெரிக்கா கொலம்பியா, ஐக்கிய அமெரிக்கா ஏப்ரல் 3, 1976 [1]
பேடன் ரோக், ஐக்கிய அமெரிக்கா மே 1, 1976 [1]
1.7 டான் குவார்ரீ (Don Quarrie)  ஜமேக்கா மாடெஸ்டோ, ஐக்கிய அமெரிக்கா மே 22, 1976 [1]

கையால் பதிவு செய்யப்பட்ட முதல் 9.9 நொடி நேரம் பாப் ஹேயஸின் 1964 ஒலிம்பிக் போட்டியின் 100 மீ இறுதியின் ஓட்டத்தைப் பதிவு செய்ததாகும். கைப்பதிப்பின் தோற்றத்தைக் கொடுக்க வேண்டி, ஹேயஸின் 10.0 நொடிகள் என்ற அதிகாரப்பூர்வ நேரம், மின்னணு பதிவான 10.06 நொடிகளில் இருந்து பெறப்பட்டு அருகுள்ள பத்தில் ஒரு பங்கு நொடிக்கு கீழ் நோக்கி வட்டப்படுத்தப் பட்டப்பின் கிடைத்தது. இம்முறையிலான நேரப்பதிப்புகள் 1964 மற்றும் 1968 ஒலிம்பிக் விளையாட்டுகளின் தனிச் சிறப்பம்சமாகும்.[4]

1977-க்குப் பிந்தைய சாதனைகள்[தொகு]

1975-இல் இருந்து, ஐ.ஏ.ஏ.எஃப் 400 மீ வரையிலான போட்டிகளுக்கு தனித் தனி மின்னனு தானியக்க நேரப் பதிவுகளை சாதனை பதிவிற்கு ஏற்றுக் கொண்டது. ஜனவரி 1, 1977 முதல் இப்போட்டிகளுக்கு நூறில் ஒரு பங்கு துள்ளியம் வாய்ந்த முழு தானியக்க நேரப் பதிப்பு தேவைப்பட்டது.[1]

அது வரையில் ஜிம் ஹைன்ஸின் அக்டோபர் 1968 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற 9.95 நொடி ஓட்டமே முழு மின்னனு பதிவில் கணக்கிடப்பட்ட மிகத் துரித ஓட்டம்.[1] தடகளச் செய்திகள் தானியக்க நேரப்பதிப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்ட, 1964 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாப் ஹேயஸின் தங்கப் பதக்க ஓட்டத்தில் துவங்கிய அதிகாரப்பூர்வமற்ற சாதனைகளின் பட்டியலைத் தொகுத்துள்ளது. அவையும் இங்கு, சாதனை மேம்பாட்டு போக்கு ஆய்வில், கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

நேரம் காற்றுவிசை தா.நே வீரர் நாடு இடம் தேதி குறிப்புகள்[குறிப்பு 1]
10.06 1.3 பாப் ஹேயஸ் (Bob Hayes)  ஐக்கிய அமெரிக்கா டோக்கியோ, ஜப்பான் அக்டோபர் 15, 1964 [5]
10.03 0.8 ஜிம் ஹைன்ஸ் (Jim Hines)  ஐக்கிய அமெரிக்கா சேக்ரமெண்டோ, ஐக்கிய அமெரிக்கா ஜூன் 20, 1968 [5]
10.02 2.0 சார்லஸ் கிரீன் (Charles Greene)  ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ அக்டோபர் 13, 1968 [5]
9.95 0.3 ஜிம் ஹைன்ஸ் (Jim Hines)  ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ அக்டோபர் 14, 1968 ஒ.சா, ஆ [1]
9.93 1.4 கால்வின் ஸ்மித் (Calvin Smith)  ஐக்கிய அமெரிக்கா கொலொராடோ ஊற்றுகள், ஐக்கிய அமெரிக்கா ஜூலை 3, 1983 [1]
9.83 1.0 பென் ஜான்சன் (Ben Johnson)  கனடா ரோம், இத்தாலி ஆகஸ்ட் 30, 1987 [குறிப்பு 2]
9.93 1.1 கார்ல் லூயிஸ் (Carl Lewis)  ஐக்கிய அமெரிக்கா ரோம், இத்தாலி ஆகஸ்ட் 30, 1987 [5][6][குறிப்பு 3]
1.1 சூரிக்கு, சுவிட்சர்லாந்து ஆகஸ்ட் 17, 1988 [1]
9.92 1.1 கார்ல் லூயிஸ் (Carl Lewis)  ஐக்கிய அமெரிக்கா சியோல், தென் கொரியா செப்டம்பர் 24, 1988 ஒ.சா[1]
9.90 1.9 லீராய் பர்ரல் (Leroy Burrell)  ஐக்கிய அமெரிக்கா நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா ஜூன் 14, 1991 [1]
9.86 1.0 கார்ல் லூயிஸ் (Carl Lewis)  ஐக்கிய அமெரிக்கா டோக்கியோ, ஜப்பான் ஆகஸ்ட் 25, 1991 [1]
9.85 1.2 லீராய் பர்ரல் (Leroy Burrell)  ஐக்கிய அமெரிக்கா லோசான், சுவிட்சர்லாந்து ஜூலை 6, 1994 [1]
9.84 0.7 9.835 டொனோவன் பெய்லீ (Donovan Bailey)  கனடா அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா ஜூலை 27, 1996 ஒ.சா[1][7]
9.79 0.1 மௌரைஸ் கிரீன் (Maurice Greene)  ஐக்கிய அமெரிக்கா ஏதென்ஸ், கிரேக்கம் ஜூன் 16, 1999 [1]
9.78 2.0 டிம் மான்ட்கோமெரி (Tim Montgomery)  ஐக்கிய அமெரிக்கா பாரிஸ், பிரான்சு செப்டம்பர் 14, 2002 [8][குறிப்பு 4]
9.77 1.6 9.768 அசாஃபா பவல் (Asafa Powell)  ஜமேக்கா ஏதென்ஸ், கிரேக்கம் ஜூன் 14, 2005 [1]
1.7 9.766 ஜஸ்டின் காட்லின் (Justin Gatlin)  ஐக்கிய அமெரிக்கா தோகா, கத்தார் மே 12, 2006 [5][9][குறிப்பு 5]
1.5 9.763 அசாஃபா பவல் (Asafa Powell)  ஜமேக்கா கேட்ஸ்ஹெட், இங்கிலாந்து ஜூன் 11, 2006 [1]
1.0 9.762 சூரிக்கு, சுவிட்சர்லாந்து ஆகஸ்ட் 18, 2006 [1]
9.74 1.7 அசாஃபா பவல் (Asafa Powell)  ஜமேக்கா ரெய்தி, இத்தாலி செப்டம்பர் 9, 2007 [1]
9.72 1.7 உசேன் போல்ட் (Usain Bolt)  ஜமேக்கா நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா மே 31, 2008 [1]
9.69 0.0 9.683 பெய்ஜிங், சீனா ஆகஸ்ட் 16, 2008 ஒ.சா[1]
9.58 0.9 9.572 பெர்லின், ஜெர்மனி ஆகஸ்ட் 16, 2009 [1][10][11]

1968–87 இடைக்கால தாழ்நிலை களங்களில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் போக்கு[தொகு]

நேரம் வீரர் நாடு இடம் தேதி
10.03 ஜிம் ஹைன்ஸ் (Jim Hines) [5]  ஐக்கிய அமெரிக்கா சாக்ரமென்டோ, ஐக்கிய அமெரிக்கா ஜூன் 20, 1968
10.03 சில்வியோ லியோநார்டு (Silvio Leonard)[5]  கியூபா அவானா, கியூபா செப்டம்பர் 13, 1977
10.02 ஜேம்ஸ் சான்ஃபோர்டு (James Sanford)[5]  ஐக்கிய அமெரிக்கா வெஸ்ட்வூட், ஐக்கிய அமெரிக்கா மே 11, 1980
10.00 கார்ல் லூயிஸ் (Carl Lewis)[5]  ஐக்கிய அமெரிக்கா டாலஸ், ஐக்கிய அமெரிக்கா மே 16, 1981
10.00 கார்ல் லூயிஸ் (Carl Lewis)[5]  ஐக்கிய அமெரிக்கா மாடெஸ்டோ, ஐக்கிய அமெரிக்கா மே 15, 1982
9.97 கார்ல் லூயிஸ் (Carl Lewis)[5]  ஐக்கிய அமெரிக்கா மாடெஸ்டோ, ஐக்கிய அமெரிக்கா மே 14, 1983
9.97 கால்வின் ஸ்மித் (Calvin Smith) [5]  ஐக்கிய அமெரிக்கா சூரிக்கு, சுவிட்சர்லாந்து ஆகஸ்ட் 24, 1983
9.96 மெல் லாட்டனி (Mel Lattany)[5]  ஐக்கிய அமெரிக்கா ஏதன்சு, ஐக்கிய அமெரிக்கா மே 5, 1984
9.93 கார்ல் லூயிஸ் (Carl Lewis)[5]  ஐக்கிய அமெரிக்கா ரோம், இத்தாலி ஆகஸ்ட் 30, 1987

உயர்நிலை களங்களில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பதிப்புக்குத் தகுதியானவைகளாக ஐ.ஏ.ஏ.எஃப் கருதியது. எனினும் உயர்தளங்கள் விரைவோட்டத்திற்குப் பெரிதும் துணை செய்யும்[12] - அதிகபட்ச காற்றுவிசை(நொடிக்கு 2.0 மீ) பின்னுந்தல் 0.09-0.14 நொடிகள் வரையும், ஒவ்வொரு 2000 மீ தளமட்ட உயர்வும் 0.3 நொடிகள் வரையும் ஓட்ட நேரத்தை குறைக்க துணை செய்யும் என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது.[13] இது போன்ற காரணங்களால் அதிகாரப்பூர்வமற்ற தாழ்மட்ட சாதனைகளின் பட்டியல் தனியே தொகுக்கப்பட்டுள்ளன.

ஐ.ஏ.ஏ.எஃப் 1977-க்குப் பிறகு மின்னணு நேரப்பதிப்பை மட்டும் அங்கீகரிக்கத் துவங்கியது முதல் நிகழ்த்தப்பட்ட இரண்டு சாதனைகளுமே உயர் மட்டத்தில் நிகழ்த்தப்பட்டவை. 1987 வரை இவ்வுலக சாதனைகள் தாழ்மட்ட சாதனையால் சமன் செய்யப்படாமலும் முறியடிக்கப்படாமலும் இருந்தன. எனவே இங்கு தொகுக்கப்பட்டுள்ள தாழ்மட்ட சாதனைகள் 1977 முதல் ஐ.ஏ.ஏ.எஃப் மின்னணு நேரப்பதிப்பை ஏற்கத் துவங்கிய பின்னர் ஹெய்ன்ஸின் தாழ்மட்ட ஓட்ட சாதனையில் தொடங்கி லூயிஸ் 1987-இல் உயர்மட்ட சாதனையை சமன் செய்தது வரையிலானவை ஆகும். பென் ஜான்சன் 1986-இல் நிகழ்த்திய 9.95 நொடி ஓட்டமும், 1987-இல் நிகழ்த்திய 9.83 நொடி ஓட்டமும் இங்கு விலக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "ஆ" - கடல் மட்டத்திலிருந்து 1000 மீ-க்கு மேலான உயரத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளைக் குறிக்கும், "ஒ.சா" - ஒலிம்பிக் சாதனைகளைக் குறிக்கும்
  2. பென் ஜான்சன், ஸ்டானோசோலால் எனும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியது சோதனையில் தெரிய வந்ததால், அவர் செப்டம்பர் 24, 1988 அன்று நிகழ்த்திய 9.79 நொடி ஓட்டத்திற்கு சாதனை பட்டியலில் அனுமதி மறுக்கப்பட்டது.
  3. பென் ஜான்சனது 9.83 நொடி ஓட்டம் சாதனைப் பட்டியலிலிருந்து திரும்பப் பெறப்பட்டதால், கார்ல் லூயிஸின் இரண்டு 9.93 நொடி ஓட்டங்களும் உலக சாதனையை சமன் செய்தவையாக ஐ.ஏ.ஏ.எஃப் அறிவித்தது, எனினும் அவை உலக சாதனைகள் என்று ஆங்கீகரிக்கப் படவில்லை; சியோல் ஒலிம்பிக்ஸில் பென் ஜான்சனது தகுதியிழப்பால், லூயிஸிற்கு தங்கப் பதக்கம் பெற்று தந்த 9.92 நொடி ஓட்டம் ஜனவரி 1, 1990 முதல் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
  4. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு டிம் மான்ட்கோமெரி தகுதியிழந்ததால், செப்டம்பர் 14, 2002 அன்று நிகழ்த்திய 9.78 நொடி ஓட்டச் சாதனை நிராகரிக்கப்பட்டது; பால்கோ ஊழலில் ஈடுபட்டதாக 2005-இல் வெளியான ஓர் தீர்ப்பையடுத்து 2001-இற்கு பிந்தைய சாதனைகளும், பதக்கங்களும் திரும்பப்பெறப்பட்டன.
  5. குறுகிய காலத்திற்கு ஜஸ்டின் காட்லின் 9.76 நொடி புதிய உலக சாதனை ஓட்டத்திற்கு உரிமையாளராக அங்கீகரிக்கப்பட்டார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, போட்டியின் அதிகாரப்பூர்வ நேரப் பதிவாளரான டிஸ்ஸாட் டைமிங், காட்லினின் ஓட்ட நேரம் 9.76 நொடி என்று தவறாகப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தனர்; 9.766 நொடி என்பது மேல் நோக்கியல்லாமல், 9.76 நொடிகள் என்று கீழ் நோக்கி வட்டப்படுத்தப்பட்டது. இது காட்லினை, அசாஃபா பவலோடு உலக சாதனையைப் பகிரச்செய்தது. .[1] எனினும் 2007-இல் காட்லின் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இச்சாதனை பரிக்கப்பட்டது..[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 1.39 1.40 1.41 1.42 1.43 1.44 1.45 1.46 1.47 1.48 1.49 1.50 1.51 1.52 1.53 1.54 1.55 1.56 1.57 1.58 1.59 1.60 1.61 1.62 1.63 1.64 1.65 1.66 "(ஆங்கிலம்) ஐ.ஏ.ஏ.எஃப் உலகத் தடகளப் போட்டிகள்: ஐ.ஏ.ஏ.எஃப் புள்ளிவிவரக் கையேடு. தேகு 2011" (PDF). மான்டே கார்லோ: ஐ.ஏ.ஏ.எஃப் ஊடக மற்றும் பொதுமக்கள் உறவு மேம்பாட்டுத் துறை. 2011. pp. பக்கங்கள் 595, 596. Archived (PDF) from the original on 2012-10-01. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 3, 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "விளயாட்டு வீரர்களின் சித்திரங்களும் புகைப்படங்களும்". விளையாட்டு வீரர்கள். பார்க்கப்பட்ட நாள் 2010-06-07.
  3. http://www.si.com/longform/peacock/index.html (ஆங்கிலம்) இந்தத் தகவல் பீகாக் 1935-இல் நிகழ்த்திய சாதனையின் காலச்சுவட்டையும், பேசல், சுவிட்சர்லாந்து நிகழ்வையும் விவரமாக வழங்குகிறது.
  4. (ஆங்கிலம்) திருத்த வரலாறு: ஆடவர் 100 மீ உலக சாதனை. (ஆங்கிலம்) தடகளச் செய்திகள் (Track and Field News). நவம்பர் 1, 2013
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 "(ஆங்கிலம்) புள்ளிவிவர மூலை: 100 WR மேம்பாட்டு போக்கு". தடகளச் செய்திகள் (Track & Field News) 61 (7): 55. ஜூலை 2008. 
  6. (ஆங்கிலம்) தடகளச் செய்திகள் (Track and Field News), நவம்பர் 1989, தொ. 42, #11, ப. 37
  7. http://myweb.lmu.edu/jmureika/track/splits/splits.html#96og
  8. "(ஆங்கிலம்)மான்ட்கோமெரிக்கு 100மீ உலக சாதனை - 9.78!". ஐ.ஏ.ஏ.எஃப். 14 செப்டம்பர் 2002. Archived from the original on 2008-09-12. பார்க்கப்பட்ட நாள் 2008-09-03. {{cite web}}: Check date values in: |date= (help)
  9. ஃப்ரான்க் லிட்ஸ்கி (மே 18, 2006). "(ஆங்கிலம்) 100 மீ சாதனையை காட்லின் பகிர்ந்து கொள்ள வேண்டும்". நியூ யார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2006/05/18/sports/othersports/18track.html. பார்த்த நாள்: 2008-09-03. 
  10. "(ஆங்கிலம்) 12-ஆவது ஐ.ஏ.ஏ.எஃப் உலகத் தடகளப் போட்டிகள் - பெர்லின் 2009 - மீண்டும் போல்ட்! 9.58 பெர்லினில் உலக சாதனை!". Berlin.iaaf.org. 2009-08-16. Archived from the original on 2010-06-12. பார்க்கப்பட்ட நாள் 2010-06-07.
  11. "பெர்லின் உலகத் தடகளப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டன". iaaf.org. 2009-09-30. பார்க்கப்பட்ட நாள் 2010-06-07.
  12. "(ஆங்கிலம்) விரைவோட்ட நேரங்களின்மீது காற்று விசை மற்றும் உயர்மட்டங்களின் விளைவுகள்". www.brianmac.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-04-28.
  13. "(ஆங்கிலம்) 200 மீ விரைவோட்டத்தின் மீது காற்று மற்றும் உயர் மட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளின் மாதிரியாக்கம்". www.ingentaconnect.com. பார்க்கப்பட்ட நாள் 2010-05-28.