எருதுக்கண் (அஞ்சல்தலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருதுக்கண்
(Olho-de-Boi)
உற்பத்தியான நாடுபிரேசில்
உற்பத்தி அமைவிடம்ரியோ டி ஜெனிரோ
உற்பத்தியான தேதி1 ஆகத்து 1843
எப்படி அருமைகுறைவான எண்ணிக்கை
இருப்பு எண்ணிக்கைதெரியவில்லை
முகப் பெறுமானம்30, 60, 90 ரெயிசு
மதிப்பீடுஐக்கிய அமெரிக்க $ 5,000.00 க்கும்
ஐக்கிய அமெரிக்க $ 400.00 (RHM – 2004)

எருதுக்கண் எனப் பெயர் கொண்ட அஞ்சல்தலைகள் பிரேசில் நாட்டினால் 1 ஆகத்து 1843ல் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல்தலைகள் ஆகும். இவற்றின் முகப்பெறுமானம் 30, 60, 90 ரெயிசுகள் ஆகும். பெரிய பிரித்தானியாவுக்கு அடுத்தபடியாக நாடு முழுவதற்குமான அஞ்சல்தலைகளை வெளியிட்ட இரண்டாவது நாடு பிரேசில் ஆகும்.[1] பெரிய பிரித்தானியாவின் அஞ்சல்தலைகளைப் போலவே இவற்றிலும் நாட்டுப் பெயர் இல்லை.

அலங்காரமான பெறுமானத்தைக் குறிக்கும் எண்கள் அஞ்சல்தலையில் எருதுக்கண் போன்ற நீள்வட்டச் சூழமைவிலே அமைந்திருப்பதால் இந்த வழமைக்கு மாறான பெயர் அதற்கு ஏற்பட்டது. அத்துடன் அஞ்சல்தலைத் தாளில் முரண் இணைகளாக அமைந்த இவற்றின் ஒழுங்கமைவு இரண்டு எருதுக்கண்கள் ஒன்றாக இருப்பதுபோல் காணப்படுகிறது. இவ்வாறான வழமைக்கு மாறான பெயர்கள் பிரேசிலின் பிந்திய வெளியீடுகளுக்கும் தொடர்ந்தது. பாம்பின் கண்கள், ஆட்டுக் கண்கள், பூனைக் கண்கள் போன்றவை இத்தகைய பெயர்கள்.

30 ரெயிசு அஞ்சல்தலைகள் 1,148,994களும், 60 ரெயிசு அஞ்சல்தலைகள் 1,502,142களும், 90 ரெயிசு அஞ்சல்தலைகள் 349,182களும் அச்சிடப்பட்டன. 90 ரெயிசு அஞ்சல்தலைகள் பன்னாட்டு அஞ்சல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.

மிக அண்மையில் விற்பனைக்கு வந்த எருதுக்கண்கள் அஞ்சல்தலைத் தொகுதி இயூகோ கொயெக்கெல் என்பவருடையது ஆகும். இது 2013ல் விற்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Brazil Bulls Eyes". Philatelic Articles Archive. Sandafayre (Holdings) Ltd. 2012. Archived from the original on 27 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. The Dr. Hugo Goeggel Collections "South America" Corinphila Auktionen, 2014. Retrieved 15 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருதுக்கண்_(அஞ்சல்தலை)&oldid=3928210" இலிருந்து மீள்விக்கப்பட்டது