ஆஃபினியம் கார்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஃபினியம்(IV) கார்பைடு
Hafnium(IV) carbide
Hafnium(IV) carbide
இனங்காட்டிகள்
12069-85-1 Y
ChemSpider 17340381 Y
InChI
  • InChI=1S/C.Hf/q-1;+1 Y
    Key: NVDNLVYQHRUYJA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C.Hf/q-1;+1/rCHf/c1-2
    Key: NVDNLVYQHRUYJA-GLWNXBRTAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16212551
SMILES
  • [Hf+]#[C-]
பண்புகள்
HfC
வாய்ப்பாட்டு எடை 190.50 கி/மோல்
தோற்றம் மணமற்ற கருப்புத் துகள்
அடர்த்தி 12.2 கி/செ.மி3[1]
உருகுநிலை 3,900 °C (7,050 °F; 4,170 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ஆஃபினியம் கார்பைடு அல்லது ஆஃபினியம்(IV)கார்பைடு (Hafnium carbide) என்பது HfC என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய உருகுநிலை சுமார் 0 செ வெப்பநிலையாகும். இச்சேர்மமே மிகவதிக அனல் எதிர்ப்பு இருமச் சேர்மம்|இருமச் சேர்மமாக]] அறியப்படுகிறது[2]. இருந்தபோதிலும் ஆஃபினியம் கார்பைடு குறைவான ஆக்சிசனேற்ற எதிர்ப்பையே கொண்டுள்ளது. 430 0 செ வெப்பநிலையில் இது ஆக்சிசனேற்றம் அடையத் தொடங்குகிறது[3] .

பொதுவாகவே ஆஃபினியம் கார்பைடு குறைவுக் கார்பன்களையே கொண்டிருக்கும். எனவே அதன் உட்கூறுகளை அல்லது பொதிவைக் குறிப்பிடுகையில் HfCx (x = 0.5 to 1.0) என்றே குறிப்பிடுவர். மேலும், கார்பனின் அளவு எதுவாக இருந்தாலும் இதன் படிக அமைப்பு கனசதுர பாறை உப்பு படிக அமைப்பிலேயே காணப்படுகிறது[4].

ஆஃபினியம்(IV) ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து 1800 முதல் 2000 0 செ வெப்பநிலைக்கு சூடாக்குவதால் அது ஒடுக்கமடைந்து ஆஃபினியம் கார்பைடு தூள் உருவாகிறது. ஆஃபினியம்(IV) ஆக்சைடில் உள்ள ஆக்சிசன் முழுவதையும் நீக்குவதற்கு மிகநீண்ட நேரம்வரை வினை செயல்முறை நிகழ்கிறது. தொழில் நுட்ப சிக்கல் மற்றும் அதிகமான பொருட்செலவு போன்ற காரணங்களால் , இம்முறைக்கு மாறாக மீத்தூய்மை ஆஃபினியம் கார்பைடு பூச்சு முறையும் பின்பற்றப்படுகிறது. இதற்காக மீத்தேன், ஐதரசன் மற்றும் ஆஃபினியம்(IV) குளோரைடு வாயுக்களின் வாயுக்கலவை படியவைத்தல் முறையில் பூசப்படுகிறது. ஆஃபினியம் கார்பைடின் அதிக உருகுநிலை மற்றும் அதிகக் கடினத்தன்மைகளின் காரணமாக இது குறைந்த அளவான பயன்களையே கொண்டுள்ளது.[2]

ஆஃபினியம் கார்பைடின் இணைக்காந்தப் பண்புகள் x ≤ 0.8 முதல் x இன் அதிக மதிப்புக்கு ஏற்ப எதிர்காந்தப் பண்புக்கு மாறுகின்றன. ஆஃபினியம் கார்பைடின் படிக அமைப்பை ஒத்த TaCx இன் காந்தப் பண்புகள் இதற்கு நேர் எதிரான பண்புகளைக் கொண்டுள்ளது. அதாவது எதிர்காந்தப் பண்பிலிருந்து இணைக்காந்தப் பண்பிற்கு மாறுகிறது[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Physical Constants of Inorganic Compounds in Lide, D. R., தொகுப்பாசிரியர் (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ). Boca Raton (FL): CRC Press. பக். 4–44 ff.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0486-5. 
  2. 2.0 2.1 Harry Julius Emeléus (1968). Advances in Inorganic Chemistry and Radiochemistry. Academic Press. பக். 169–170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-023611-4. http://books.google.com/books?id=-SnCsg5jM_kC&pg=PA169. பார்த்த நாள்: 3 May 2011. 
  3. Shimada, Shiro (1992). "Oxidation Kinetics of Hafnium Carbide in the Temperature Range of 480o to 600oC". Journal of the American Ceramic Society 75 (10): 2671–2678. doi:10.1111/j.1151-2916.1992.tb05487.x. 
  4. Lavrentyev, A; Gabrelian, B; Vorzhev, V; Nikiforov, I; Khyzhun, O; Rehr, J (2008). "Electronic structure of cubic HfxTa1–xCy carbides from X-ray spectroscopy studies and cluster self-consistent calculations". Journal of Alloys and Compounds 462 (1-2): 4–10. doi:10.1016/j.jallcom.2007.08.018. 
  5. Aleksandr Ivanovich Gusev; Andreĭ Andreevich Rempel; Andreas J. Magerl (2001). Disorder and order in strongly nonstoichiometric compounds: transition metal carbides, nitrides, and oxides. Springer. பக். 513–516. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-41817-7. http://books.google.com/books?id=jc2D7TGZcyUC&pg=PA513. பார்த்த நாள்: 3 May 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃபினியம்_கார்பைடு&oldid=3204459" இலிருந்து மீள்விக்கப்பட்டது