கல்லுக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதர்ச்சிட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கல்லுக்குருவி
S. c. nilgiriensis ஆண்
நீலமலை
S. c. bicolor, பெண்
பெஞ்ச் தேசியப் பூங்கா, மத்தியப் பிரதேசம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: பழைய உலக ஈப்பிடிப்பான்
பேரினம்: Saxicola
இனம்: S. caprata
இருசொற் பெயரீடு
Saxicola caprata
L., 1766
வேறு பெயர்கள்

Pratincola caprata

கல்லுக்குருவி (pied bush chat) என்பது குருவியளவு உள்ள ஒரு பறவையாகும். இது மேற்காசியா, நடு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை இணை இணையாகச் கிராமப் புறங்களில் சுற்றக்கூடியது.

விளக்கம்[தொகு]

இப்பறவைகளில் ஆண்பறவை நல்ல கறுப்பு நிறம் உடையதாகவும், அடித்தொண்டை, அடிவயிறு, இறக்கைப் பகுதிகளில் ஒளிரும் வெண் பட்டை உடையதாகவும் இருக்கும. பெண்பறவை மண் நிறம் கொண்டதாகவும், தொடைப் பகுதி துரு நிறம் கொண்டதாகவும் உள்ளது.

வாழ்க்கை[தொகு]

இப்பறவையின் இனப்பெருக்கக் காலம் பெரும்பாலும் பிப்பிரவரி முதல் ஆகத்து மாதம் வரையிருக்கும், ஆனால் மார்ச்சு சூன் மாதங்களுக்கிடையே உச்ச காலமாக இருக்கும். ஆண்பறவைகள் கிளை உச்சிகளில் இருந்துகொண்டு கீச்சென்ற குரலில் குயின்றுகொண்டு இருக்கும். இதன் குரலை இணைத்துள்ள ஒலிக்கோப்பின்வழி கேட்கலாம்.

கல்லுக்குருவியின் குரல்

இதன் கூடு பொந்துகளில் காய்ந்த புல் முதலானவற்றால் கட்டப்பெற்றிருக்கும். கூட்டில் 2-5 முட்டைகள் இடும்[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. (2016). Saxicola caprata. The IUCN Red List of Threatened Species 2016.எஆசு:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22710209A94238854.en
  2. Rasmussen PC & JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Smithsonian Institution and Lynx Edicions. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saxicola caprata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லுக்குருவி&oldid=3817867" இலிருந்து மீள்விக்கப்பட்டது