அலைன் ஆசுபெக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலைன் ஆசுபெக்ட்
Alain Aspect
பிறப்பு15 சூன் 1947 (1947-06-15) (அகவை 76)[1]
ஆகென், பிரான்சு[1]
துறைஇயற்பியலறிஞர்
பணியிடங்கள்ஒளியியல் நிறுவனம் (பார்சு-சாக்ளே பல்கலைக்கழகம்)[2]
பாரிசு பல்தொழிநுட்பக் கழகம்[2]
அறிவியல் ஆய்வு தேசிய மையம்
கல்விகச்சான் உயர் பள்ளி[2]
ஓர்சே பல்கலைக்கழகம்[2]
அறியப்படுவதுஆசுபெக்டின் பரிசோதனை
விருதுகள்
இணையதளம்
www.lcf.institutoptique.fr/Groupes-de-recherche/Optique-atomique/Membres/Permanents/Alain-Aspect

அலைன் ஆசுபெக்ட் (Alain Aspect; பிறப்பு: 15 சூன் 1947[1]) பிரான்சிய இயற்பியலறிஞர் ஆவார். இவர் குவாண்டம் பின்னல் தொடர்பான தனது செய்ம்முறைப் பணிகளுக்காகப் பெயர்பெற்றவர்.[3][4][5] "சிக்கலான போட்டான்கள் பற்றிய சோதனைகள் மூலம், பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியலுக்கு ஆற்றிய பங்களிப்பு" ஆகியவற்றுக்காக இவருக்கும் சான் கிளவுசர் அன்டன் சைலிங்கர் ஆகியோருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.[6]:{{{3}}}

வாழ்க்கை[தொகு]

ஆசுபெக்ட் கச்சான் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றார். இவர் 1969இல் இயற்பியலில் பட்டம் பெற்றார். முதுவர் பட்டத்தை ஓர்சே பல்கலைக்கழகத்தில் பெற்றார். பிறகு இவர் காமரூனில் மூன்றாண்டுகள் தன் தேசியப் பணியாகக் கல்வி கற்பித்தார்.

இவர் 1980களில் முனைவர் பட்ட ஆய்வின் தொடக்கத்திலேயே[7] விரிவுரையாளராகப் பணிபுரிந்தபோது, மிகவும் நழுவுதலான "பெல் சோதனைச் செய்முறைகளைச்" செய்து குவைய இயக்கவியலின்படி தற்போக்கில் நெடுந்தொலைவு பிரிந்த இரு அடிப்படைத் துகள்கள் தம்முள் செயல்படும் என்பதை உண்மையெனக் காட்டினார். ஆல்பர்ட் ஐன்சுட்டீனும், போரிசு பொடோல்சுகியும், நேத்தன் உரோசனும் பிழைபடு கொணர்வு எனக் கூறியதைப் பொய்ப்பித்துக் காட்டினார். சேய்த்துகள்களில் ஒன்றை அளப்பதற்கு முன்பு அவை முன்னிருந்த குலைவுறாத அலைச்சார்பில் உள்ளபோது அவற்றின் அலைச்சார்புகளுக்கிடையில் ஒட்டுறவு நிலவியது.

குவையக் கோட்பாடு சரியென்றால், ஓர் ஒளியன் முனைவுறலின் ஒரச்சை (திசையச்சைத்) தீர்மானிக்க அளக்கும்போது அந்த அச்சில் அலைச்சார்பக் குலையவைப்பதால் அதனுடைய இணையின்அளவீட்டில் இது தாக்கம் அல்லது விளைவைஏஎற்படுத்தும். இது, ஓரிடச் செய்முறையாளர்கள் தம்மோடு இணைந்து செயல்படும் தொலைவில் உள்ளவர் எந்த அச்சை தெரிவு செய்தார் என்று அறியாவிட்டாலும் இரு ஒளியன்களின் தொலைவு விளைவே தர இயலாத தொலைவில் இருந்தாலும் இவ்விளைவு தவிர்க்கவியலாமல் ஒளிவேகத்திலும் கூட ஏற்படும்.

சுடூவார்டு ஃபிரீட்மேனும் ஜான் கிளாசரும் 1972இல் செய்த முன்னோடிச் செய்முறைகளுக்குப் பிறகு ஆசுபெக்ட்டின் செய்முறைகள், நிறுவப்படாத பெல் சமனின்மைகள் ஆய்கோளுக்கு நல்ல மெய்ப்பையும் ஆதரவையும் நல்கின. குறிப்பாக, களக் குறைகளைக் களைந்தது. என்றாலும், இவரது முடிவுகள் முற்றமுடிந்தவை அல்ல. ஏனெனில், களக் குறைகளை விளக்கவல்ல கள நிலவலுடன் பொருந்திய மாற்றுவிளக்கம் ஒன்றும் உருவாகியுள்ளது.

எளிதாக விளக்கவேண்டுமென்றால், இவரது செய்முறை ஓரிடக் குவைய நிகழ்வு ஈரிடங்களுக்கும் இடையில் புறநிலையான தொடர்பு ஏற்படுத்தும் இயங்கமைப்பு ஏதும் இல்லாவிட்டாலும் மற்றோரிடக் குவைய நிகழ்வின்பால் விளைவை ஏற்படுத்தும்என நிறுவியது. இதை அய்ன்சுடைன் தொலைவிட மாயச் செயல்பாடு என்றார். மேலும் அவர் இந்த விளைவின் புற நிலவலையே ஐயப்பட்டார். ஆனாலும் இச்செய்முறையை ஒளியினும் விரைந்த வேகத்தில் ஆற்றமுடியாது. ஏனென்றால், இந்த நிகழ்வுகள் தற்போக்கு நிகழ்தகவில் ஏற்படுவனவாகும்.

பெல் சமனின்மைகளின் ஆய்விற்குப் பிறகு இவர் நொதுமல் அணுக்களின் ஒருங்கொளிக் குளிர்தல் பற்றிய செய்முறைகளில் ஈடுபட்டார். இவை பெரிதும் போசு-அய்ன்சுட்டீன் செறிமம் சார்ந்த செய்முறைகளாகும்.

Picture of Alain Aspect
பல்தொழில்நுட்பப் பள்ளியில் அலைன் ஆசுபெக்ட்.

இவர் 1994 வரை "grande école" SupOptique ஆகிய நிறுவனங்களின் இணை இயக்குநராக இருந்தார். இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்திலும் பிரெஞ்சுத் தொழில்நுட்பக் கல்விக்கழகத்திலும் உறுப்பினராகவும் பல்தொழில்நுட்பப் பள்ளியில் பேராசிரியராகவும் இருந்தார். இவர் 2005இல் அறிவியல் ஆய்வு தேசிய மையத்தின் நிறுவனப் பொற்பதக்கத்தைப் பெற்றார்.இப்போது அதன் இயக்குநராகப் பணிபுரிகிறார். இவருக்கு 2010இல் இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசு வழங்கப் பட்டது. இவருக்கு 2013 அக்தோபர் 7-இல் டேனிய நீல்சு போர் பன்னாட்டுப் பொற்பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு 2013இல் பல்சான் பரிசு குவையத் தகவல் நுட்பச் செயல்பாட்டிற்கும் தொடர்பியலுக்கும் வழங்கப் பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "The Nobel Prize in Physics 2022". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
  2. 2.0 2.1 2.2 2.3 "Alain Aspect". Université Paris-Saclay (in ஆங்கிலம்). 2020-02-17. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
  3. Aspect, Alain; Grangier, Philippe; Roger, Gérard (1982-07-12). "Experimental Realization of Einstein-Podolsky-Rosen-BohmGedankenexperiment: A New Violation of Bell's Inequalities". Physical Review Letters (American Physical Society (APS)) 49 (2): 91–94. doi:10.1103/physrevlett.49.91. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9007. 
  4. Aspect, Alain; Dalibard, Jean; Roger, Gérard (1982-12-20). "Experimental Test of Bell's Inequalities Using Time- Varying Analyzers". Physical Review Letters (American Physical Society (APS)) 49 (25): 1804–1807. doi:10.1103/physrevlett.49.1804. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9007. 
  5. Aspect, Alain (2007). "Quantum mechanics: To be or not to be local". Nature 446 (7138): 866–867. doi:10.1038/446866a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:17443174. Bibcode: 2007Natur.446..866A. 
  6. https://www.nobelprize.org/prizes/physics/2022/press-release/
  7. "CV". Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2015-08-10.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைன்_ஆசுபெக்ட்&oldid=3586004" இலிருந்து மீள்விக்கப்பட்டது