கறுப்பு, வெள்ளை பங்களா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கறுப்பு, வெள்ளை பங்களா என்பது, வெப்பமண்டலக் காலநிலை கொண்ட குடியேற்ற நாடுகளில், ஐரோப்பாவில் இருந்து குடியேறிய குடும்பங்கள் பொதுவாகப் பயன்படுத்திய வெண்ணிறம் பூசப்பட்ட பங்களாக்களைக் குறிக்கும். பொதுவாக இவ்வகை வீடுகள் 19 ஆம் நூற்றாண்டில், தென்கிழக்காசியாவில் இருந்த பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் காணப்பட்டன.

வரலாறு[தொகு]

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், 19ம் நூற்றாண்டு முதல் இரண்டாம் உலகப் போர் வரையான காலப்பகுதியில் இவ்வகையான வீடுகள் கட்டப்பட்டன. இவ்வீடுகள் அக்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தில் நடைமுறையில் இருந்த ஆர்ட்சு அன்டு கிறாஃப்ட்டு, ஆர்ட்டு டெக்கோ இயக்கங்களின் பாணிகளின் கூறுகளைக் கொண்டிருந்ததுடன், அக்காலத்துச் செல்வந்த ஐரோப்பியர்களின் தேவைகளுக்கு ஏற்ப காற்றோட்டம் உள்ளவையாகவும், நல்ல இடவசதி கொண்டவையாகவும் இருந்தன. கறுப்பு, வெள்ளை பங்களாக்கள் பெரும்பாலும், பணம் படைத்த குடும்பங்களாலும், முன்னணி வணிக நிறுவனங்களாலும், பொது வேலைகள் திணைக்களத்தாலும், பிரித்தானியப் படைத்துறையாலும் கட்டப்பட்டன.[1]

இவற்றுட் சில தற்காலத்திலும், வீடுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேறுசில உணவுச்சாலைகள் போன்ற வணிக நிறுவனங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Black and White: The Singapore House 1898-1941
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-26. பார்க்கப்பட்ட நாள் 2015-08-09.

வெளியிணைப்புக்கள்[தொகு]

பிளிக்கரில் இருந்து எடுத்துக்காட்டு ஒளிப்படங்கள் பரணிடப்பட்டது 2017-05-16 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பு,_வெள்ளை_பங்களா&oldid=3623476" இலிருந்து மீள்விக்கப்பட்டது