பேச்சு:ஜெய்சல்மேர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்சல்மேர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து[தொகு]

1. //It lies in the heart of the Thar Desert //

என்பது

//தார் பலைவனத்தின் இதயத்தில் உள்ளது//

என்று நேரடியாக (literal) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் இப்படி இதயத்தில் உள்ளது என்று பொதுவாக எழுதுவதில்லை. மையத்தில், நடுவில் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

2. //ஜெய்சால்மர் Sound pronunciationஇந்தி: जैसलमेर, (உருது மற்றும் பஞ்சாபி:جيسلمير) (சிந்தி:جيسلمير) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் "தங்க நகரம்" என்ற செல்லப் பெயர் கொண்ட நகரம் ஜெய்சால்மர் மாநிலம் என்றும் முன்பு அறியப்பட்டு இருந்தது. //

இடையில் முற்றுப் புள்ளியைக் காணோம். இது கவனக்குறைவால் கூட நேர்ந்திருக்கக்கூடிய சிறு பிழை தான். ஆனால், கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் இது போல் எண்ணற்ற பிழைகள் வருவது கவலை அளிக்கிறது. குறைந்தபட்சம், கட்டுரையைப் பதிவேற்றிய பின் அதை எழுதியவர் கட்டுரையை ஒரு முறையாவது படித்துப் பார்த்து பிழை திருத்தினால் நன்றாக இருக்கும்.

3. //இதன் நிறுவனர், ராவ் ஜெய்சால்[1] நினைவாக ஜெய்சால்மர் எனப் பெயரிடப்பட்டது (வரலாறு பிரிவை பார்க்க)//

வரலாறு என்ற சொல்லில் உள்ள இணைப்பு கட்டுரையின் துணைப்பகுதிக்கு இட்டுச் செல்ல வேண்டும். ஆனால், வரலாறு என்ற இன்னொரு கட்டுரைக்கு இட்டுச் செல்கிறது. இது மென்பொருள் பிழையா?

4. //Some Bhatti's migrated to Talwandi, now Nankana Sahib in Distt//

என்பது

//சில பாட்டிகள் தால்வாண்டிக்கு இடம் பெயர்ந்தனர், தற்போது நன்கான சாஹிப் மாவட்டம்//

என ஆங்கிலச் சொற்றொடர் அமைப்பு மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தமிழ்ச் சொற்றொடர் அமைப்புக்கு முரணானது.

5. //இவரது ஆட்சிக் காலத்தில் பாட்டி வரலாறு உறையுள்ளதாக முகலாய பேரரசர் சாஜஹானின் மேலாத்திக்கத்தில் இருந்ததாக ஒப்புக் கொண்டார்.//

உறையுள்ளதாக என்றால் என்ன? ஒருவேளை உறைந்து இருந்தது என்று கூற வருகிறாரா?

6. //The Jaisalmer princes had now arrived at the height of their power,//

-->

//ஜெய்சால்மரின் இளவரன் தற்போது ஆட்சிக்கு வந்துவிட்டார், //

Junoon தமிழாக்கம் :( இளவரசர்கள் என்று மொழிபெயர்த்திருக்க வேண்டிய இடத்தில் பன்மை மயக்கம், எழுத்துப் பிழை.

7. //ஜெய்சால்மரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பாட்டி ராஜ்புட் இனத்தவர், பாட்டி என்ற முன்னோர்களின் பெயர்களிலிருந்து தங்கள் பெயரை எடுத்துக் கொண்டவர்கள், பஞ்சாப்பில் பழங்குடியினராக இருந்த போது போர் வீரராக புகழ் பெற்றவர்கள்.//

தவறான இடங்களில் காற்புள்ளிகள்.

8. //The route linked India to Central Asia, Egypt, Arabia, Persia, Africa and the West.//

-->

//இந்த வழியானது இந்தியா மற்றும் மத்திய ஆசியாவை இணைத்தது, எகிப்து, அரபியா, பெரிசியா, ஆப்ரிக்கா மற்றும் வடக்கு//

என்ன கொடுமை இது? west = வடக்கு ?? :( சொற்றொடர் முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

9. //During the Islamic invasion of India, Jaisalmer escaped direct Muslim conquest due to its geographical situation in the desert region. //

-->

//பாலைவனத்தில் புவியியலுக்குரிய பகுதியில் அமைந்திருந்ததால், இந்தியாவில் இஸ்லாமிய தாக்கம் இருந்த காலத்தில் ஜெய்சால்மர் நேரடியாக இஸ்லாமிய வெற்றிப்பேறுலிருந்து தப்பித்தது. //

புவியியலுக்குரிய பகுதி என்றால் என்ன? பாலைவனத்தில் இருந்ததால் இசுலாமியர் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பியது என்றே எளிமையாக எழுதி இருக்கலாம்.

வெற்றிபேறுலிருந்து -> புணர்ச்சிப் பிழை

சொற்றொடர் அமைப்பும் முன் பின்னாக குழம்பியுள்ளது. பெரும்பாலான இடங்களில் subject முதலில் வரக் காணோம்.

10. //Jaitsimha's son Duda perished in the attack.//

-->>

//இந்த தாக்குதலின் போது ஜெய்ட்சிம்ஹாவின் மகன் துதா அழுதார்//

மாண்டார் / இறந்தார் என்றே குறிப்பிட்டிருக்கலாம். அவர் ஏனடா சிரிக்காமல் அழுதார் என்று யோசித்து, ஆங்கிலக் கட்டுரையைப் பார்த்த பிறகே புரிந்து கொள்ள முடிந்தது.

11. //Princely Jaisalmer//

என்ற துணைத் தலைப்பு

//பிரின்சிலி ஜெய்சல்மர்//

என்று அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது போன்ற எளிய சொற்களுக்கும் ( அதுவும் தலைப்புகளில் ) ஆங்கிலம் பயன்படுத்துவது சரி அன்று.

12. //ஜெய்சால்மர் சராசரியான முன்புறத்தோற்றம் கொண்டுள்ளது229 metres //

elevation என்பதை முன்புறத் தோற்றம் என்று தவறாக மொழிபெயர்த்துள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 229 மீட்டர் உயரத்தில் உள்ளது என்று எழுதுவது வழமை.

13. //கோடைகால வெப்பநிலையின் உச்ச அளவுவார்ப்புரு:Convert/C குறைந்த அளவுவார்ப்புரு:Convert/C. குளிர்கால வெப்பநிலையின் உச்ச அளவு எப்போதும்வார்ப்புரு:Convert/C மற்றும் குறைந்த அளவுவார்ப்புரு:Convert/C.//

என்பதில் எங்கேயும் அளவு குறித்த எண்களே இல்லை. வெற்று வார்ப்புருக்கள் இருப்பதால் இந்தப் பிரச்சினை. விக்கிப்பீடியர்கள் கட்டுரைகளை உருவாக்கும் போது இந்த வார்ப்புருக்களைத் தாமே உருவாக்குவர். கூகுள் திட்டத்தில் இதை எப்படிச் செய்வது?

14. //கிணறுகளின் சராசரி ஆழம் இந்த அளவு 250 feet (76 m) இருக்கும்.//

இதில் "இந்த" என்ற சொல் எதற்கு வந்தது?

15. //இளவேனில் பருவ தாவரங்களான கோதுமை, பார்லிபோன்றவற்றை அரிதாக உள்ளன//

போன்றவற்றை என்பது தவறு. போன்றவை என எழுதி இருக்க வேண்டும்.

16. //The main part of the population lead a wandering life, grazing their flocks and herds.//

-->

//கால்நடைக் கூட்டங்களை மேய்க்கும் நிலையற்ற வாழ்க்கைக்கு மக்கள் தொகைப் பெருக்கத்தின் பகுதிகள் வழிவகுக்கிறது.//

ஒன்றும் சொல்வதற்கில்லை :( பல இடங்களில் ஆங்கிலக் கட்டுரையைப் படித்தே தமிழ்க் கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது :(

17. //2001 இல் இந்தியாவின் மக்கள் தொகைக்கணக்கின் படி,[6]ஜெய்சால்மரில் 58,286 மக்கள் தொகைஉள்ளது.//

என்பதை,

ஜெய்சல்மரின் மக்கள் தொகை 58,286 ஆகும்.

ஜெய்சல்மரில் 58,286 பேர் உள்ளனர்.

என்றும் எழுதி இருக்கலாம். எல்லா வேளையிலும் ஆங்கிலச் சொற்றொடரை ஒத்தே தமிழாக்கத் தேவை இல்லை. சற்று தமிழ் முறைகளை ஒத்தும் தமிழாக்கலாம்.


18. //competition for business is fierce//

-->

//வியாபாரத்தில் போட்டி கொடூரமானதாகும்//

கொடூரம் என்பதை விட கடுமை என்ற சொல் பொருந்தும். கொடூரம் என்பது பொருளைத் திரிக்கிறது.

19. //scheming prime minister//

-->

//சதி செய்கிற பிரதம மந்திரி//

)


இது முழுமையான மதிப்பீடு அல்ல. சில சிறிய குறைகள், ஒரே மாதிரியான குறைகளை விட்டு விட்டேன். இதற்கு மேல் எழுத அயர்ச்சியாக உள்ளது.--ரவி 11:16, 7 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜெய்சல்மேர்&oldid=3820180" இலிருந்து மீள்விக்கப்பட்டது