பகிர்வுரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படைப்பாக்கப் பொதுமங்களின் பகிர்வுரிமைச் சின்னம், அளிப்புரிமைச் சின்னத்தின் ஒரு வகை

பகிர்வுரிமம் (Share-alike) என்பது ஒரு காப்புரிமைக் கலைச்சொல். இது பெரும்பாலும் படைப்பாக்கப் பொதுமங்கள் திட்டத்தால் பயன்படுத்தப்படுகிறது. இவ்வுரிமத்தின் கீழ் வெளியாகும் ஆக்கங்களின் படிகளையோ மாற்றங்களையோ பகிரும்போது முதன்மை ஆக்கம் பகிரப்பட்ட அதே உரிமம் அல்லது அதை ஒத்த உரிமத்தின் கீழ் வெளியிட வேண்டும்.[1] அளிப்புரிமை தரும் உரிமங்கள் யாவும் பகிர்வுரிமை அளிக்கும் கட்டற்ற மென்பொருள் அல்லது கட்டற்ற ஆக்கங்கள் ஆகும்.

தற்பொழுது, இரண்டு படைப்பாக்கப் பொதும உரிமங்கள் பகிர்வுரிமை அளிக்கின்றன:

  1. படைப்பாக்கப் பொதுமம் ஆக்குநர்சுட்டு-பகிர்வுரிமை (இது ஒரு அளிப்புரிமை கொண்ட கட்டற்ற ஆக்க உரிமம்)
  2. படைப்பாக்கப் பொதுமம் ஆக்குநர்சுட்டு-வணிகம்தவிர்-பகிர்வுரிமை (இது ஒரு தனியுடைமை உரிமம்)

இச்சொல் காப்புரிமைச் சட்டம் தொடர்பாக மட்டுமின்றி காப்புரிமம் தொடர்பான உரையாடல்களிலும் இடம்பெறுகிறது.[2]

சூன் 2009 இல், விக்கிப்பீடியர் சமூகமும் விக்கிமீடியா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவும் விக்கிப்பீடியா மற்றும் அதன் உறவுத் திட்டங்களுக்கான முதன்மை ஆக்க உரிமமாக படைப்பாகப் பொதுமம் ஆக்குநர்சுட்டு-பகிர்வுரிமை உரிமத்தை அறிவித்தனர். இம்முடிவு கட்டற்ற பண்பாட்டுக்கும் தொலைநோக்கு கொண்ட தலைமைக்கும் கிடைத்த வெற்றி என்று படைப்பாக்கப் பொதுமங்கள் நிறுவனம் பாராட்டியது.[3]

உசாத்துணை[தொகு]

  1. "Glossary". பார்க்கப்பட்ட நாள் 2012-03-05.
  2. "Share-Alike Patents". Archived from the original on 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2012-03-05.
  3. "Wikipedia + CC BY-SA = Free Culture Win!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகிர்வுரிமை&oldid=3589348" இலிருந்து மீள்விக்கப்பட்டது