லலிதா குமாரமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லலிதா குமாரமங்கலம் (Lalitha Kumaramangalam) (பிறப்பு: 1957/58), அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளராக இருந்தவர்.

குடும்பம்[தொகு]

லலிதா குமாரமங்கலம் மறைந்த பொதுவுடமைக் கட்சியின் தலைவரும், தொழிற்சங்கத் தலைவருமான மோகன் குமாரமங்கலத்தின் மகள் ஆவார். இவரது தாயார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கல்யாணி முகர்ஜி ஆவார். இவரது சகோதரர் ரங்கராஜன் குமாரமங்கலம். இவரது தந்தை வழி தாத்தா பி. சுப்பராயன் முன்னாள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். இந்திய இராணுவத்தின் தரைப்படைத் தலைமைத் தளபதியாக இருந்த பி. பி. குமாரமங்கலம் இவரது பெரியப்பா ஆவார்.[2]

கல்வி & அரசியல்[தொகு]

லலிதா குமாரமங்கலம் புதுதில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளநிலை பொருளாதர பட்டமும், சென்னைப் பல்கலைகழகத்தில் வணிக நிர்வாகவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். தன் சகோதரர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவுக்குப்பின் 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர். பிரகிருதி என்ற அறக்கட்டளையை நடத்தி வருபவர். 17 செப்டம்பர் 2014இல் இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 PTI (17 September 2014). "Lalitha Kumarmangalam Appointed NCW Chairperson". www.outlookindia.com. New Delhi: அவுட்லுக் (இதழ்). பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  2. Warrier, Shobha (27 April 2001). "rediff.com: The Rediff Interview/BJP Candidate Lalitha Kumaramangalam". www.rediff.com. ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 28 September 2014. Note: Used as source of birth year 1957/58 based on age of 43 in 2001.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதா_குமாரமங்கலம்&oldid=2711369" இலிருந்து மீள்விக்கப்பட்டது