அண்டியோக்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசுகலானின் அண்டியோக்கசு (Antiochus of Ascalon, பண்டைக் கிரேக்கம்Άντίοχος ὁ Ἀσκαλώνιος; அண். கிமு 125 – அண். கிமு 68)[1] ஒரு கல்விக்கழக மெய்யியலாளர். இவர் பிளாட்டோனியக் கல்விக்கழகத்தின் பிலோவின் மாணவர். ஆனால் பிலோ, தன் முன்னவர்களின் ஐயுறவுவாதப் போக்கில் இருந்து விலகியவர். இவர் சிசெரோவின் ஆசிரியர். பிளாட்டோனியப் புதுவகை பல்கூற்று (ஒருங்கியைபிலாத) அறிவுவாதத்தின் (eclecticism) முதல் முன்னோடியாவார்; இவர் சுதாயிக்குகளின் நெறிமுறைகளையும் பெரிபேடெட்டிக்கியத்தையும் பிளாட்டோனியத்திற்குள் மீட்க முயன்றார். இவர் பிலோவுக்கு எதிராக மனம் உண்மையையும் பொய்யையும் பிரித்தறிய வல்லது என்றார். அதன் வழியாக பழங்கல்விக்கழக நெறிமுறைகளைப் புத்துயிர்க்கச் செய்தார். இவருடன் இடைக்காலப் பிளாட்டோனிய மெய்யியல் கட்டம் தொடங்குகிறது.

வாழ்க்கை[தொகு]

இவர் அசுகலானில் பிறந்தார். இவர் மித்ரிடேடெசு எதிர்ப்பளரான இலூசியசுவின் நண்பர். கிமு 9இல் ஏதென்சில் பயின்றபோது சிசெரோவின் ஆசிரியர்; ஆனால் இவர் அலெக்சாந்திரியாவிலும் சிரியாவிலும் பள்ளிகளை நடத்தினார். இவர் அங்கு இறந்துவிட்ட்தாகத் தெரிகிறது.[2] இவர் தனது காலத்தில் கணிசமான புகழ்வாய்ந்த மெய்யியலாளராக விளங்கியுள்ளார். இவர் பிறப்பால் அசுகலான் நகரமே சிறப்பு பெற்றதாக சுத்ராபோ கூறுவதால் தெரிய வருகிறது.[3] புலமையாளர்களிலேயே மிக மதிநுட்பமும் வாய்ந்தவரும் நல்லவருமாகவும் தன்கால்த்தின் கூர்மையும் நயமும் வாய்ந்தவராகவும் சிசெரோ இவரைப் பற்றி அடிக்கடி பெருமதிப்புடனும் அன்புடனும் கூறுவதில் இருந்தும் இது விளங்குகிறது.[4]

இவர் ஏதென்சின் மினெசார்க்கசிடம் கல்வி கற்றாலும் இவரது முதன்மையான ஆசிரியர், கிளிட்டோமாக்கசுவுக்குப் பின் பிளாட்டோனியக் கல்விக்கழகத் தலைமைப் புலவராகிய இலாரிசாவின் பிலோவே எனலாம் ஆனால் இவர் பிலோவின் மாணவராக விளங்கியதைவிட எதிரியாக இருந்துள்ளார்; இவர் பிலோவை எதிர்த்து எழுதியSosusஎனும் நூலைப் பற்றி சிசெரோ குறிப்பிடுகிறார்.[5] இதில் இவர் கல்விக்கழக் ஐயுறவுவாதத்தை எதிர்க்கிறார்.மற்றுமொரு நூலான Canonica' பற்றிச் செக்சுடசு எம்பிரிக்கசு' குறிப்பிடுகிறார். இது ஏரணவியல் (அளவையியல்) நூலாகும்.[6]

நான்காம் கல்விக்கழகத்தைப் பிலோ நிறுவியதைப் போலவே அண்டியோக்கசு ஐந்தாம் கல்விக்கழகத்தை நிறுவினார். இந்தப் பிளவு கிமு86இல் கல்விக்கழகம் அழிக்கப்படக் காரணமான கிமு88இல் ஏற்பட்ட மித்ரிடேடிகப் போர் தொடங்கியபோதே ஏற்பட்டுவிட்டது. இக்காலத்தில் இவர் அலெக்சாந்திரியாவில் இருந்தார். சிசெரோ ஏதென்சில் கிமு79இல் படிக்க வந்தபோதே இவர் ஏதென்சுக்கு மீண்டும் வந்தார். இவர் அங்கே கிமு68இல் இறந்துள்ளார்.

மெய்யியல்[தொகு]

அண்டியோக்கசுக்கு முந்தைய கல்விக்கழக ஐயுறவுவாதம் பிளாட்டோ வெற்றிகரமாக தன் மாணாக்கர்களுக்குக் கற்பித்த உண்மையைக் காண்பதற்கான சரியான முறை நுண்ணியற் சிந்தனைமுறையே என்றும் புலன்களின் பெரும்பாலான உளப்பதிவுகளை நம்பக்கூடாது என்றும் வற்புறுத்திய முயற்சிகளில் தோன்றியது எனலாம். சிசெரோ எந்தவகை அறிவிலும் உறுதிபாடு போன்ற ஏதும் நிலவ வாய்ப்பில்லை எனக் கருதும் மெய்யியலாளர் வரிசையில் பிளாட்டோவை வகைப்படுத்துகிறார்;[7] இம்முடிபு பிளாட்டோ ஐம்பொறிகள், புலன்காட்சிக்கான நம்பத்தகுந்த வாயிகள் அல்லவென்று கூறுவதும் அவை புலப்படுத்தும் அறிவுவகையையும் எனவே அவ்வழியிலான அறிதல் சிந்தனை முடிவுகளையும் நம்பவியலாததாகப் பிளாட்டோ கருதுவதுபோல் எண்ணித் துணிந்ததாகவே தோன்றுகிறது.

இத்தகைய வாதங்களில் இருந்து ஒன்று தெளிவாகப் புலனாகிறது. இதே வினவல்கள் முன்பே அறிவியலின் தன்மையையும் பல்வேறுவகை உண்மைகளையும் பற்றிப் பேசும்போது இவை அறிதிறனின் அல்லது நுண்மதியின் விளைபொருள்கள்;வாய்ப்புள்ள நிகழத்தகும் அதேநேரம் உறுதிப்படுத்தவியலாத அறிவாகுமென ஆழமாக பிளாட்டோவாலும் அரிசுடாட்டிலாலும் அலசப்பட்டுள்ளன. இதன் விளைவு கல்விக்கழகத்தினர் புறக்கணித்த இணைமுரண்வாதக் கலைக்கு இவர் புத்துயிர்ப்பூட்டினார். எனவே ஆண்டியோக்கசுவின் அறப்பயில்விப்பு குறித்து நிலவும் தகவல்கள் இதைத் தான் காட்டுகின்றன. சுதாயிக்குகளின் முரண்புதிகளுக்கோ கல்விக்கழகத்தினரின் ஐயுறவுவாதத்துக்கோ விட்டுகொடுக்காமல் இவர் அரிசுடாட்டிலுக்கு இணையாண முதன்மை நெறிமுறைகளைக் கடைப்பிடித்தார்: மகிழ்ச்சி நேரிய வாழ்க்கையில் தான் கிடைக்கும். என்றாலும் அது புறநிலைப் பொருள்களைச் சாராத தற்குறிப்பல்ல அல்லது தனித்த விளைவல்ல என்றார்.[8] எனவே இவர் அனைத்துக் குற்றங்களூம் சமமே எனும் சுதாயிக்குகளின் நெறிமுறையை ஏற்க மறுத்தாலும்,[9] அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிவைக்க வேண்டும் என்பதில் அவர்களோடு ஒத்துப்போனார். மொத்தத்தில் சிசெரோ இவரைச் சுதாயிக்குகளுக்குகளின் தரத்தில் வைக்க முயன்றாலும்,[9] இவர் தன்னைப் பன்கூறுவாத/கலப்புவாத மெய்யியலாளராக்க் கருதி, பழங்கல்விக்கழக நடைமுறையை மீட்க இவர் சுதாயிக்கியத்தையும் பெரிபேடெடிக்கியத்தையும் ஒருங்கிணைக்க முயன்றார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tiziano Dorandi, Chapter 2: Chronology, in Algra et al. (1999) The Cambridge History of Hellenistic Philosophy, page 49. Cambridge.
  2. Plutarch, Cicero, c. 4; Lucullus, c. 4; Cicero, Academica, ii. 19.
  3. Strabo, xiv.
  4. Cicero, Academica, ii. 35; Brutus, 91.
  5. Cicero, Academica, iv. 4.
  6. Sextus Empiricus, vii. 201.
  7. Cicero, Academica, ii. 23.
  8. Cicero, Academica, ii. 42; de Finibus, v. 25; Tusculanae Quaestiones, v. 8.
  9. 9.0 9.1 Cicero, Academica, ii. 43
  10. Sextus Empiricus, i. 235.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டியோக்கசு&oldid=3522265" இலிருந்து மீள்விக்கப்பட்டது