அல்லாடினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்லாடினோ (Allahdino), பாக்கிசுத்தானின் கராச்சிக்குக் கிழக்கே 40 கி.மீ தொலைவில் உள்ள அரப்பா காலத்தைச் சேர்ந்த ஒரு ஊர். இது 1.4 ஹெக்டேர் பரப்பளவுடன் கூடிய அரண் செய்யப்படாத ஒரு குடியிருப்பு. இது பாக்கிசுத்தானின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்தச் சிறிய ஆனால் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட இக்குடியிருப்பு கி.மு 2000 ஆண்டளவில் கைவிடப்பட்டது.[2]

அகழ்வாய்வு[தொகு]

குழைமண் கற்களாலானவையும், சில சமயங்களில் கல் மேடைகளின்மீது அமைந்தனவுமான பல வீடுகள் இவ்விடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் வெளிப்பட்டுள்ளன. பல அறைகளைக் கொண்டதும் குழைமண் மேடைமீது அமைக்கப்பட்டதுமான பெரிய வீடொன்றும் அகழப்பட்டுள்ளது. ஒரு கட்டிடத்தில் 60 தொடக்கம் 90 சதமமீட்டர் வரை விட்டங்களைக்கொண்ட மூன்று கிணறுகள் காணப்பட்டன. இவ்விடத்தில் காணப்பட்ட எல்லாக் கிணறுகளுமே இதுபோல் குறைவான விட்டங்களைக் கொண்டவையே.[1]இக்குடியிருப்பின் தளவமைவும், கட்டிடங்களும், அல்லாடினோ நிர்வாகத் தேவைக்கான குடியிருப்பாக இருந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லாடினோ&oldid=3325963" இலிருந்து மீள்விக்கப்பட்டது