செக் வான்சேவை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செக் ஏர்லைன்ஸ் (Czech Airlines) எனும் இந்த விமானச் சேவை நிறுவனம், செக் குடியரசின் தேசிய விமானச் சேவையாகும். ப்ராக் பகுதியில் உள்ள வாக்லவ் ஹவேல் விமான நிலையத்தினை தலைமையகமாகக் கொண்டு இது செயல்படுகிறது. ஜெட் ஏர்லைனர் ரக விமானங்களை வெற்றிகரமாக தொடங்கிய விமானச் சேவைகளில் இரண்டாவது இடம் இந்த செக் ஏர்லைன்சுக்கு உண்டு. (1975 இல் டியு – 104 ஐப் பயன்படுத்தி இதனைச் செய்தது). அத்துடன் ப்ராக் மற்றும் மாஸ்கோ வழித்தடத்தினில் தொடர்ச்சியாக ஜெட் ரக விமானங்களை அறிமுகப்படுத்தி முதன்முறையாக ஜெட் ரக விமானங்களை தொடர்ச்சியாக பயன்படுத்திய விமானச் சேவை என்ற பெயரினைப் பெற்றது [1]

தற்போது செக் ஏர்லைன்ஸ் உலகின் 48 நாடுகளுக்கு, 92 இலக்குகளைக் கொண்டு செயல்படுகிறது. இதில் முக்கியப் பகுதிகளாக ஐரோப்பாவின் பகுதிகள், மத்திய கிழக்குப் பகுதிகள் மற்றும் ஆசியா ஆகிய பகுதிகள் அடங்கும். இவை தவிர சரக்கு விமானச் சேவைகளையும் செக் ஏர்லைன்ஸ் வழங்குகிறது.[2]

வரலாறு[தொகு]

செக் ஏர்லைன்ஸ் அக்டோபர் 6, 1923 இல் செக்கோஸ்லோவாகியா அரசால் நிறுவப்பட்டது. 23 நாட்களுக்குப் பிறகு இதன் முதல் விமானம் ப்ராக் மற்றும் ப்ராடிஸ்லாவா ஆகிய இடங்களுக்கு இடையே பறக்கத் தொடங்கியது.[3] இதன் முதல் சர்வதேச பயணமான ப்ராக் – பிராடிஸ்லாவா மற்றும் ஸாக்ரெப் ஆகியவற்றில் பறக்கும் வரை உள்நாட்டு விமானச் சேவைக்கு மட்டுமே செக் ஏர்லைன்ஸ் பயன்படுத்தப்பட்டது. இந்த முதல் சர்வதேச பயணம் 1930 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. 1939 ஆம் ஆண்டில் செக்கோஸ்லோவாகியா நாடு மூன்றாகப் பிரிந்ததால் செக் ஏர்லைன்ஸின் விமானச் சேவை நிறுத்தப்பட்டது.

1957 ஆம் ஆண்டில் ஜெட் ரக விமானச் சேவையினை புரிவதில் செக் ஏர்லைன்ஸ் மூன்றாவது இடத்தில் இருந்தது. டியு – 104 எனும் விமானம் வெற்றிகரமான ஜெட் ரக விமானம் ஆகும், இதனை ஏரோஃப்ளோட் விமான நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இயங்கி வெற்றிகண்டது செக் ஏர்லைன்ஸ் ஆகும்.

உயர்தர வழித்தடங்கள்[தொகு]

செக் ஏர்லைன்ஸ் ப்ராக் – மாஸ்கோ, மாஸ்கோ – ப்ராக், ஆம்ஸ்டெர்டேம் – ப்ராக் மற்றும் ப்ராக் – பாரிஸ் ஆகிய வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 46, 46, 33 மற்றும் 28 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் விமானங்களை டெட்ரியோட் – நியூயார்க் மற்றும் பீட்டர்ஸ்பெர்க் – கார்லோவி வேரி ஆகிய வழித்தடங்களில் செயல்படுத்துகின்றன.[4]

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்[தொகு]

ஜூலை 2014 இன் படி, செக் ஏர்லைன்ஸ் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.[5]

விமானக் குழு[தொகு]

ஜூலை 2015 இன் படி, செக் ஏர்லைன்ஸ் பின்வரும் விமானங்களை தனது விமானக் குழுவில் கொண்டுள்ளது.

விமானம் மொத்தம் ஆர்டர் பயணிகம்
வணிக

வகுப்பு

பொருளாதார

வகுப்பு

மொத்தம்
ஏர்பஸ்

A319-100

9 0 10 120 130
ஏர்பஸ்

A320-200

6 7 8 150 158
ஏர்பஸ்

A330-300

1 0 24 252 276
ஏடிஆர்

42-500

3 0 8 38 46
ஏடிஆர்

72-500

4 0 8 56 64
மொத்தம் 17 7

அக்டோபர் 2013 இன் படி, செக் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் வயது 8.5 ஆண்டுகள் ஆகும்.[6] கொரியன் ஏர் நிறுவனம் தனது விமானச் சேவையில் உள்ள சில போயிங்க் 747 – 400 ரக விமானங்களுக்கு ஓய்வளித்த பிறகு, அவற்றினை செக் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்கு வழங்குவதாக அறிவுரை அளித்தது.

முந்தைய விமானக் குழு[தொகு]

  • ஏரோ ஏ. 14 பிராண்டென்பர்க்
  • ஏர்பஸ் ஏ310 – 300
  • ஏர்பஸ் ஏ321 – 200
  • ஏ டி ஆர் 42 – 300
  • ஏ டி ஆர் 42 – 420
  • ஏ டி ஆர் 72 – 202
  • போயிங்க் 737 – 400
  • போயிங்க் 737 - 500
  • டௌக்ளஸ் டிசி – 3 டகோடா
  • ஃபோர்ட் 5 – ஏடி – சி
  • லெட் 410
  • லிசுனோவ் லி – 2
  • இலுஷின் II – 12
  • ஏவியா II – 14
  • இலுஷின் II - 18
  • இலுஷின் II - 62
  • இலுஷின் II – 62 எம்
  • சைன்டெர்ஸ் – ரோ ஏ. 19 கிளவுட்
  • டுபோலெவ் டு – 104 ஏ
  • டுபோலெவ் டு – 124
  • டுபோலெவ் டு – 134 ஏ
  • டுபோலெவ் டு – 154 எம்
  • யகோவ்லெவ் யாக் – 40

குறிப்புகள்[தொகு]

  1. Zeman 2003, p. 70
  2. Flight International 3 April 2007
  3. CSA Portal/History Section in English பரணிடப்பட்டது 2012-05-27 at the வந்தவழி இயந்திரம்; CSA Portal/History Section in Czech பரணிடப்பட்டது 2012-05-08 at the வந்தவழி இயந்திரம்
  4. "Czech Airlines Flight Schedule". cleartrip.com. Archived from the original on 12 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
  5. "csa.cz - Flight Timetable | Summer 2014" (PDF). Archived from the original (PDF) on 2014-08-01. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  6. "planespotters". planespotters.net.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்_வான்சேவை_நிறுவனம்&oldid=3627992" இலிருந்து மீள்விக்கப்பட்டது