புலாவ் பெசார் தீவு

ஆள்கூறுகள்: 2°6′30.8″N 102°19′37.83″E / 2.108556°N 102.3271750°E / 2.108556; 102.3271750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புலாவ் பெசார், மலாக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புலாவ் பெசார்
Pulau Besar
Big Island
உம்பாய் கடல் கிராமத்தில் இருந்து புலாவ் பெசார்
Map
புவியியல்
அமைவிடம்மலாக்கா நீரிணை
ஆள்கூறுகள்2°6′30.8″N 102°19′37.83″E / 2.108556°N 102.3271750°E / 2.108556; 102.3271750
பரப்பளவு1.29 km2 (0.50 sq mi)
நிர்வாகம்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்

புலாவ் பெசார் (ஆங்கிலம்: Big Island, மலாய் மொழி: Pulau Besar) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு தீவாகும். மலாக்கா மாநகரில் இருந்து, 12 கிலோமீட்டர் தொலைவில், மலாக்கா நீரிணையில், புலாவ் பெசார் தீவு அமைந்து உள்ளது.[1][2]

மலாய் மொழியில் புலாவ் என்றால் தீவு. பெசார் என்றால் பெரியது. தமிழில் பெரிய தீவு என்று அழைக்கலாம். இருப்பினும், புலாவ் பெசார் என்றே அறியப் படுகிறது. மலேசியத் தமிழர்கள் புலாவ் பெசார் என்பதை புலாவ் பெசார் தீவு என்று அழைப்பது வழக்கமாகி விட்டது.

மலாக்கா மாநிலத்தின் கடல்பகுதியில் ஏறக்குறைய பதினைந்து தீவுகள் இருக்கின்றன. புலாவ் பெசார் தீவைச் சுற்றிலும், மேலும் ஐந்து சின்னத் தீவுகள் உள்ளன.[3] அவற்றில் மிக முக்கியமானவை புலாவ் நங்கா, புலாவ் செரிம்புன் தீவுகள். இவை புலாவ் பெசார் தீவிற்கு மிக அருகில் உள்ளவை. இந்தப் புலாவ் பெசார் தீவில் புராணங்களும் மர்மங்களும் நிறைந்து உள்ளன.

அமைப்பு[தொகு]

புலாவ் பெசார் ஓர் அழகிய தீவு. அங்கே அரியவகை மீன்கள், கடல் பாசிகள் நிறைந்து உள்ளன. இந்தத் தீவைச் சுற்றிலும் பவளமேனி மணல் கரைகள், மஞ்சள் மணல் திட்டுகளைக் காணலாம். தீவின் உள்ளே கரடு முரடான பாறைப் படிவங்கள் உள்ளன. உயிரியல் ஆய்வாளர்களுக்கு ஓர் ஆய்வுத் தளமாகவும் விளங்குகிறது. மலாக்கா நீரிணையின் தென் பகுதியில், நன்னீர் கிடைக்கும் ஒரே இடம், இந்தப் புலாவ் பெசார் தீவு தான்.

முன்பு, புலாவ் பெசார் தீவிற்கு, கடலாமைகள் ஆயிரக் கணக்கில் வந்தன. இப்போது அவை வருவது இல்லை. அண்மைய காலங்களில் இந்தத் தீவு நவீன மயமாக்கப்பட்டு வருவதால், கடலாமைகளின் போக்குவரத்தும் குறைந்து விட்டது.

15-ஆம் நூற்றாண்டில், பருவக்காற்றை நம்பி வந்த பாய்மரக்கப்பல்களுக்கு, நன்னீர் வழங்கும் புகலிடமாகவும், ஒரு முக்கியத் தளமாகவும் இந்தப் புலாவ் பெசார் தீவு விளங்கி இருக்கிறது.

சுற்றுலா தலங்கள்[தொகு]

தீவு முழுவதும் சில வரலாற்று இடங்கள் உள்ளன. பாக்தாத் மாநகரில் பிறந்த இசுலாமிய போதகர் சுல்தான் அல் அரிபின் சைய்க் இசுமாயில் (Sultan Al Ariffin Syeikh Ismail) மற்றும் அவரது உறவினர்களின் கல்லறைகள் இங்கு காணப்படுகின்றன. 1495-இல் மலாய் தீவுக்கூட்டம் முழுவதும் இசுலாம் பரவுவதற்கு அவர்கள் காரணமான ஒரு பரிவாரத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.[4]

உள்ளூர் தலைவர்களின் கல்லறைகள்; பெயர்கள் குறிக்கப்படாத கல்லறைகள்; மற்றும் ஏராளமான பழம்பெரும் கிணறுகள் மற்றும் பாறை வடிவ அமைப்புகளும் உள்ளன.[5]

யூனோஸ் குகை[தொகு]

உள்ளூர் புராணங்களின்படி, இங்குள்ள கிணறுகளில் ஒன்றில், அதிக அளவில் கடல்பெருக்கு ஏற்படும் போது உப்பு நீரும்; குறைந்த அளவில் கடல்பெருக்கு ஏற்படும் போது நன்னீரும்; கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்தத் தீவு ஓராங் பூனியான் (Orang bunian) என்று அழைக்கப்படும் குட்டிச்சாத்தான்களின் வாழ்விடம் என்றும் நம்பப்படுகிறது.

யூனோஸ் குகை என்று ஒரு குகை இங்கு உள்ளது. போர்வீரர்கள் ஆன்மீகத்தைக் கடைப்பிடித்து சிலாட் எனும் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டதாகவும் அறியப்படுகிறது. இங்குள்ள புலாவ் பெசார் அருங்காட்சியகம் (Muzium Pulau Besar), மலாக்கா மாநிலத்தின் அருங்காட்சியகக் கழகத்தால் இயக்கப்படுகிறது. தீவின் காட்சிகள் மற்றும் புராணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.[6][7]

குனோங் லேடாங் இளவரசி[தொகு]

லேடாங் இளவரசிக்கும், புலாவ் பெசார் தீவிற்கும் புராணத் தொடர்புகள் இருந்து இருக்கின்றன.[8] ஜொகூர், மலாக்கா மாநிலங்களின் எல்லையில் லேடாங் மலை இருக்கிறது. அந்த மலையில், புராண காலத்து தேவதை ஒருவர், காவல் காத்து வருவதாக, மலேசியப் புராணக் கதைகளில் இன்றும் சொல்லப் படுகிறது. அந்த வகையில், மலாய் இலக்கியக் களஞ்சியமான செஜாரா மலாயுவில், குனோங் லேடாங் இளவரசியைப் பற்றிய ஒரு புராணக் கதையும் எழுதப் பட்டுள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pulau Besar Melaka". malaysiasite.nl. பார்க்கப்பட்ட நாள் 4 June 2023.
  2. "Anjung Batu Jetty". mpjasin.gov.my.
  3. "Jeti Anjung Batu". mpjasin.gov.my.
  4. Rahimah Abdullah (6 September 2020). "'Pulau Khurafat' tidak lagi seperti dulu: Mahu cari 'sesuatu'? Carilah keseronokan berekreasi saja!". Astro Awani. பார்க்கப்பட்ட நாள் 4 June 2023.
  5. "Tomb of Sultan Al Ariffin Syeikh Ismail Islamic Tomb in Pulau Besar".
  6. "Pulau Besar, Melaka".
  7. "Muzium Pulau Besar".
  8. During the reign of Sultan Mahmud Shah in Malacca, it was believed that there is one beautiful fairy princess staying at the peak of Mount Ledang.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலாவ்_பெசார்_தீவு&oldid=3909707" இலிருந்து மீள்விக்கப்பட்டது