நைனிதால் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைனிதால் வங்கி வரையறுக்கப்பட்டது
நிறுவுகை1922
தலைமையகம்ஏழு ஓக்ஸ் கட்டிடம், மல்லித்தால், நைனித்தால், உத்தராகண்டம், இந்தியா
முதன்மை நபர்கள்எஸ். கே. குப்தா
(தலைவர், முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைவங்கித்தொழில்
நிதிச் சேவைகள்
முதலீட்டுச் சேவைகள்
உற்பத்திகள்நிதியும் காப்பீடும்
நுகர்வோர் வங்கி
வணிக வங்கி
முதலீட்டு வங்கி
முதலீட்டு மேலாண்மை
தனிநபர் வங்கி
தாய் நிறுவனம்பரோடா வங்கி
இணையத்தளம்http://www.bankofbaroda.com/subsidiaries_jv.asp

நைனிதால் வங்கி வரையறுக்கப்பட்டது (NTB) மற்றும் நைனிதால் வங்கி[1] என அறியப்படுவது, இந்தியாவில் செயற்பட்டுவரும், பட்டியலிடப்பட்ட தனியார்த் துறையைச் சார்ந்த வணிக வைப்பகம் ஆகும். இவ்வைப்பகம், கோவிந்த் வல்லப பந்த் மற்றும் ஷா சமூகத்தினரால் 1922ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் இவ்வைப்பகமானது, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியின் துணை வங்கியாகும். பரோடா வங்கியானது, 1975ஆம் ஆண்டு முதல் நைனிதால் வங்கியின் 98.6 விழுக்காடு பங்குகளைக் (தோராயமாக 99%) கொண்டுள்ளது. இவ்வைப்பகம் தனது கிளைகளை உத்தராகண்ட மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கும் விரிவாக்கி வருகிறது. இவ்வைப்பகமானது இராச்சசுத்தான், தில்லி, அரியானா மாநிலங்களில் 130இற்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது.[2] 2012ஆம் ஆண்டு நிலவரப்படி உரூபாய் 55 பில்லியன் அளவிற்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும் இது இந்திய ரிசர்வ் வங்கியால், பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாக அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nainital Bank". Archived from the original on 2015-06-27. பார்க்கப்பட்ட நாள் 2015-07-14.
  2. "Growth potential for Bank of Baroda is pretty high: Arihant Capital Markets". தி எகனாமிக் டைம்ஸ். 28 May 2010. பார்க்கப்பட்ட நாள் 20 August 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைனிதால்_வங்கி&oldid=3561263" இலிருந்து மீள்விக்கப்பட்டது