தனலட்சுமி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்லட்சுமி வங்கி லிமிடெட்
வகைபொது நிறுவனம் தனியார்த் துறை (முபச532180

, தேபசDHANBANK

)
நிறுவுகை1927
தலைமையகம்தன்லட்சுமி வங்கி லிமிடெட்,
தன்லட்சுமி வளாகம், Naickanal
திரிச்சூர்,
கேரளா, இந்தியா
முதன்மை நபர்கள்GN Bajpai, G Sreeram
தொழில்துறைவங்கித் தொழில்
நிதிச் சேவைகள்s
காப்பீடு
உற்பத்திகள்முதலீட்டு வங்கி
வணிக வங்கி
நுகர்வோர் வங்கி
தனிநபர் வங்கி
அடமானக் கடன்கள்
கடன் அட்டைகள்
இணையத்தளம்Dhanbank.com

தனலட்சுமி வங்கி லிமிடெட் (முபச532180 , தேபசDHANBANK ) இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப்பழமையான தனியார்த் துறை வங்கியாகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தின். திரிச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

வரலாறு[தொகு]

தனலட்சுமி வங்கி லிமிடெட் இந்திய ரூபாய் 11,000 மூலதனம் மற்றும் 7 ஊழியர்களுடன் கேரளாவின் திரிச்சூரில் 1927 நவம்பர் 14 அன்று தொடங்கப்பட்டது. 1977ஆவது ஆண்டில் இது பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாக மாற்றம் பெற்றது. தற்போது 280 கிளைகள் மற்றும் 396 தானியங்கி பணவழங்கி எனப்படும் தாவருவிகளுடன், இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், கோவா, மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

பெயர் மாற்றம்[தொகு]

தனலட்சுமி வங்கி, 2010 ஆகஸ்டு 10 முதல் தனது பெயரை தன்லட்சுமி வங்கி என மாற்றிக் கொண்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Name Change - Dhanlaxmi Bank".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனலட்சுமி_வங்கி&oldid=2916311" இலிருந்து மீள்விக்கப்பட்டது