சிஆர்-7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ட செம்பெயர்ச்சி 7
Cosmos Redshift 7
சிஆர்7 ஓவியரின் கைவண்ணத்தில்
கண்டறிந்த தகவல்கள் (Reionization ஊழி)
விண்மீன் குழுசெக்ஸ்டான்சு
வல எழுச்சிக்கோணம்10h 00m 58.005s[1]
பக்கச்சாய்வு+01° 48′ 15.251″[1]
செந்நகர்ச்சி6.604[1]
தூரம்12.9 பில். ஒளியாண்டுகள்[2]
வகைலைமேன்-ஆல்ஃபா உமிழி[1]
ஏனைய பெயர்கள்
COSMOS Redshift 7; Galaxy Cosmos Redshift 7; Galaxy CR7; CR7
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

அண்ட செம்பெயர்ச்சி 7 அல்லது கொசுமசு செம்பெயர்ச்சி 7 (Cosmos Redshift 7, Galaxy Cosmos Redshift 7, Galaxy CR7 அல்லது CR7) என்பது மிகவும் பழமையானதும், மிகவும் தூரத்தில் உள்ளதுமான விண்மீன் பேரடைகளில் ஒன்று ஆகும். இது புவியில் இருந்து 12.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் செக்ஸ்டான்சு என்ற விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. இப்பேரடையில் பெரு வெடிப்பின் பின் தோன்றிய முதல் விண்மீன்கள் இங்குள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1][1][2][3][4][5]

திரள்-iii வகை விண்மீன்கள் அடங்கிய தொடக்கநிலைப் பால்வெளியின் கண்டுபிடிப்பு அண்டவியலில் புதிய ஆய்வுக் கட்டமாகும். இது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள பொலிவுமிக்க பால்வெளியைவிட மும்மடங்கு பொலிவைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் உருவாகிய பால்வெளியில் மீள்மின்னணுவாக்கம் (Reionisation) நிகழ்ந்த, பெருவெடிப்பிற்குப் பிறகு 80 கோடி ஆண்டுகளுக்குப் பிந்திய, காலகட்டத்தைச் சேர்ந்த பால்வெளிவகையிது. இதுவரை இவ்வகை விண்மீன்களடங்கிய அண்டம் கோட்பாட்டியலாக மட்டுமே முன்கணிக்கப்பட்ட வொன்றாகும். இப்போது அந்தக் கோட்பாட்டுக் கருதுகோள் மெய்யென நிறுவப்பட்டுள்ளது. இதில்தான் முன்பு நிலவிய எளிய தனிமங்கள் அணுக்கருப் பிணைவால் ஒருங்கிணைந்து இன்று நிலவும் அடர்தனிமங்களாக (Heavy Elements) உருவாகின. இதில் அமைந்த விண்மீன்கள் முதல் தலைமுறை விண்மீன்கள் ஆகும். இதற்கு முப்பதே அகவையுள்ள போர்த்துகேயக் கால்பந்து வீர்ரான CR7 என மக்களால் வழங்கப்படும் கிறித்தியானோ உரொனால்டுவின் பெயரிடப்பட்டுள்ளது. எனவே இது இனி CR7 பால்வெளி என அழைக்கப்படும்.இத்தகையபால்வெளியில் மட்டுமே இன்று நிலவும் சூரியக்குடும்பம் போன்ற விண்மீன்-கோள்குவை மண்டலங்கள் உருவாக முடியும்.

போர்த்துகேய நாட்டு இலிசுபன் பல்கலைக்கழகப் டேவிட் சோப்ராலும் நெதர்லாந்து வான்காணகமும் இணைந்து ESOவின் மீப்பெருந்தொலைநோக்கியைப் பயன்படுத்தி வானின் சிறுபரப்பில் மட்டுமே ஹேடாமல் மிகப் பரந்து விரிந்த விண்கொளம் முற்றிலும் துழாவி இந்தப் பால்வெளியைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் இதுபோன்ற பல பால்வெளிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் மிகப்பொலிவான ஒன்றிற்கே CR7 எனப்பெயரிட்டுள்ளனர். இதில் நீல நிறமும் செம்பொலிவும் கொண்ட விண்மீன்கொத்துகள் உள்ளதால் இது திரள்-iii வகையைச் சார்ந்த ஒற்றைப் பான்மையினதாக உறுதிபடுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Sobral, David; Matthee, Jorryt; Darvish, Behnam; Schaerer, Daniel; Mobasher, Bahram; Röttgering, Huub J. A.; Santos, Sérgio; Hemmati, Shoubaneh (4 June 2015). "Evidence For POPIII-Like Stellar Populations In The Most Luminous LYMAN-α Emitters At The Epoch Of Re-Ionisation: Spectroscopic Confirmation" (பி.டி.எவ்). The Astrophysical Journal. http://arxiv.org/pdf/1504.01734.pdf. பார்த்த நாள்: 17 June 2015. 
  2. 2.0 2.1 Overbye, Dennis (17 June 2015). "Astronomers Report Finding Earliest Stars That Enriched Cosmos". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2015/06/18/science/space/astronomers-report-finding-earliest-stars-that-enriched-cosmos.html. பார்த்த நாள்: 17 June 2015. 
  3. Staff (17 June 2015). "ESO1524 — Science Release - Best Observational Evidence of First Generation Stars in the Universe". European Southern Observatory. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.
  4. Staff (17 June 2015). "Brightest galaxy and first-generation stars". Earth & Sky. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.
  5. Pittalwala, Iqbal (17 June 2015). "Astronomers Find Best Observational Evidence of First Generation Stars in the Universe". University of California, Riverside. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஆர்-7&oldid=3243918" இலிருந்து மீள்விக்கப்பட்டது