காந்த இயக்கு விசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலில், காந்த இயக்கு விசை (Magneto motive force) காந்தச் சுற்றமைப்பின்/சுற்றதரின் காந்தப் பெருக்குக்கான சமன்பாட்டில் வரும் ஓர் அளவாகும். இது ஃஆப்கின்சனின் விதி எனப்படுகிறது.


இங்கு Φ என்பது காந்தப் பெருக்காகும்; R என்பது சுற்றமைப்பின் எதிர்ப்பு/காந்த எதிர்ப்பு ஆகும். இந்தச் சமனபாட்டில் உள்ள காந்த இயக்கு விசை ஓம் விதியில் உள்ள V போல அமைவதைக் காணலாம்: V = IR.

காந்த இயக்கு விசை மின் இயக்கு விசையை ஒத்ததாகும். மி இ வி (= மின்னோட்டம் தராத மின்கலம் போன்ற மின்வாயிலின் இருமுனைகளில் அமையும் மின்னிலை வேறுபாடு அல்லது மின்னழுத்த வேறுபாடு) ஏனெனில் மின்னோட்டம் தான் காந்தச் சுற்றதரில் காந்தப் பெருக்கை ஏற்படுத்துகிறது; அதாவது,

  1. = NI
    இங்கு N சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை
    Iமின்சுற்றதரில் பாயும் மின்னோட்டம்
  2. = ΦR
    இங்கு Φ காந்தப் பெருக்கு (பாயம்)
    R காந்த எதிர்ப்பு (reluctance)
  3. = HL
    இங்கு H காந்தமாக்க விசை அல்லது காந்தப்புலச் செறிவு
    Lசுருட்டையின் (solenoid) சராசரி நீளம் அல்லது திருகுசுருட்டையின் (toroid) பருதி


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த_இயக்கு_விசை&oldid=3354527" இலிருந்து மீள்விக்கப்பட்டது