மூக்கரட்டி சாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூக்கரட்டி சாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. diffusa
இருசொற் பெயரீடு
Boerhavia diffusa
L nom. cons.[1]

மூக்கரட்டி சாரை அல்லது மூக்கிரட்டை (Boerhavia diffusa) என்ற இந்த தாவரம் ஒரு பூக்கும் தாவரம் மூலிகை தாவரம் ஆகும்.மூலிகை மருத்துவத்தில், சீறுநீரகப் பிரச்சனைக்களுக்கு இதன் இலைகள் பயன்படுகிறது.[2] இந்த வகைச்செடிகள் இந்தியா மட்டுமின்றி பசுபிக் பகுதி, தென் அமெரிக்காவின் பலபகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.[3] இந்தியாவில் இதன் இலைகளை மூலிகைகளாகப் பயன்படுத்துகின்றார்கள். மழை இன்றி வறண்டு இருக்கும்போதும், மூக்கிரட்டை முளைத்திருப்பதைக் காண இயலும். வயல்களில் அல்லது காடுகளில் மட்டுமல்லாமல் சாலை ஓரத்தில்கூடப் படர்ந்து காணப்படும்.

பெயர்கள்[தொகு]

இது புட்பகம், மூக்குறட்டை, மூக்கிரட்டை ஆகிய வேறுபெயர்களைக் கொண்டும் அழைக்கப்படுகிறது வருகிறது. சிறிது செம்மை கலந்த ஊதா நிறத்தில் மலர்வதால் ‘ரத்த’ புட்பிகா எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். உடலுறுப்புகளின் செயல்பாடுகளைப் புதுப்பிக்கும் தாவரம் என்பதால், ‘புனர்நவா’ என்ற பெயரையும் (புனர்-மீண்டும்; நவா-புதிது) கொண்டுள்ளது.

விளக்கம்[தொகு]

இந்தத் தாவரம் தரையோடு படர்ந்து வளரக்கூடியது ஆகும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இலைகளின் மேற்புறம் அடர்ந்த பச்சை நிறமாகவும், கீழ்புறம் சற்று வெளுத்தும் காணப்படும். வேர்கள் சற்றுத் தடிமனாகப் பூமிக்குள் மறைந்திருக்கும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Boerhavia diffusa was originally described and published in Species Plantarum 1:3. 1753.
  2. Bhowmik, Debjit, K. P. Sampath Kumar, Shweta Srivastava, Shravan Paswan, Amit Sankar, and Dutta Dutta. "Traditional Indian Herbs: Punarnava and Its Medicinal Importance." Journal of Pharmacognosy and Phytochemistry 1.1 (2012): 52-57. Web. 12 Nov. 2014.
  3. Sherwin Carlquist (2008). "Dispersal to Islands". Plant Discorveries : Sherwin Carlquist. பார்க்கப்பட்ட நாள் March 13, 2013.
  4. டாக்டர் வி.விக்ரம் குமார் (14 செப்டம்பர் 2018). "மூக்கிரட்டை... நலத்துக்கான ராஜபாட்டை!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கரட்டி_சாரை&oldid=3852651" இலிருந்து மீள்விக்கப்பட்டது