இன்டிகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்டிகோ
IndiGo
IATA ICAO அழைப்புக் குறியீடு
6E IGO IFLY
நிறுவல்2006
செயற்பாடு துவக்கம்15 ஆகஸ்டு 2006
மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
வானூர்தி எண்ணிக்கை287
சேரிடங்கள்87[1]
தாய் நிறுவனம்இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ்
தலைமையிடம்குர்கான், அரியானா, இந்தியா
முக்கிய நபர்கள்இராகுல் பாட்டியா, மேலாண்மை இயக்குனர்,
ஆதித்யா கோஷ், தலைவர்
வலைத்தளம்www.goindigo.in

இன்டிகோ (IndiGo), இந்தியாவின் அரியான மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. இந்தியாவின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். [2] 2014 ஆம் ஆண்டு மே மாதத்தின் படி, இதன் சந்தைப் பங்கீடு 31.7 சதவீதம் ஆகும். விரைவாக வளர்ந்துவரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 79 புதிய ஏர்பஸ் 320 ரக விமானக்குழுக்களின் உதவியுடன் இந்நிறுவனம் நாள்தோறும் 516 தினசரி விமானங்களை இயக்குகிறது. இதன் மூலம் 36 இலக்குகளை அடைய இயலும்.

உரிமை[தொகு]

இன்டிகோ ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்க்வால் என்பவர்களால் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. இன்டர்க்லோப் என்டர்பிரைசஸ் இன்டிகோவின் 52 சதவிகிதம் பங்குகளையும் கேளும் முதலீடுகள் 48 சதவிகிதம் பங்குகளையும் வைத்துள்ளன.[3]

சேவைகள்[தொகு]

இன்டிகோவின் உள்ளூர் சேவைகள் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற 38 இந்திய நகரங்கள் மற்றும் துபாய், சிங்கப்பூர், மஸ்கட், பாங்காக் மற்றும் காத்மாண்டு என 5 வெளிநாட்டு நகரங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் ஏர்பஸ் ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகிறது.[4]

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டது. இதன் முதல் சர்வதேச விமானமாக நியூ டெல்லியிருந்து துபாய்க்கு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது.[5] அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லியில் இருந்தும் மும்பையில் இருந்தும், பாங்காக், சிங்கப்பூர், மஸ்கட், காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது.[6]


விமானங்களின் ஓய்வு காலம்[தொகு]

விமானங்களின் சராசரி பயன்பாட்டு காலத்தைக் குறைவாக வைப்பதற்காக, இன்டிகோ ஆறு வருடங்கள் முழுமையடைந்த விமானங்களை வெளியேற்றி விடுகின்றது. இன்டிகோவின் 98 விமானங்களில் ஏற்கனவே 16 விமானங்கள் குத்தகை நிறுவனங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன.

முதன்மை வழித்தடங்கள்[தொகு]

[7]

இன்டிகோ ஏர்பஸ் A320-200
இன்டிகோ A320 இன் உட்புறம்
  • இன்டிகோ மும்பை - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ பெங்களூர் - மும்பை பறப்புகள்
  • இன்டிகோ நியூடெல்லி - பெங்களூர் பறப்புகள்
  • இன்டிகோ மும்பை - கொல்கத்தா பறப்புகள்
  • இன்டிகோ கொல்கத்தா - மும்பை பறப்புகள்
  • இன்டிகோ புனே - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ மும்பை - சென்னை பறப்புகள்
  • இன்டிகோ சென்னை - நியூ டெல்லி பறப்புகள்
  • இன்டிகோ பெங்களூர் - கொல்கத்தா பறப்புகள்
  • இன்டிகோ கொல்கத்தா - பெங்களூர் பறப்புகள்
  • இன்டிகோ பெங்களூர் - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ நியூ டெல்லி - மும்பை பறப்புகள்
  • இன்டிகோ மும்பை - பெங்களூர் பறப்புகள்
  • இன்டிகோ கொல்கத்தா - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ லக்னோ - நியூ டெல்லி பறப்புகள்
  • இன்டிகோ நியூ டெல்லி - கொல்கத்தா பறப்புகள்
  • இன்டிகோ சென்னை - மும்பை பறப்புகள்
  • இன்டிகோ ஸ்ரீநகர் - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ கோவா = நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ மும்பை = சண்டிகர் பறப்புகள்
  • இன்டிகோ சண்டிகர் = மும்பை பறப்புகள்
  • இன்டிகோ ஹைதராபாத் = நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ கொல்கத்தா - சென்னை பறப்புகள்
  • இன்டிகோ நியூ டெல்லி - லக்னோ பறப்புகள்
  • இன்டிகோ ஹைதராபாத் - பெங்களூர் பறப்புகள்
  • இன்டிகோ அஃகமதாபாத் - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ ஹைதராபாத் - சென்னை பறப்புகள்
  • இன்டிகோ நாக்பூர் - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ மும்பை - ஹைதராபாத் பறப்புகள்
  • இன்டிகோ நியூ டெல்லி - வாரணாசி பறப்புகள்
  • இன்டிகோ சென்னை - ஹைதராபாத் பறப்புகள்
  • இன்டிகோ கொச்சின் - நியூ டெல்லி பறப்புகள்
  • இன்டிகோ கொல்கத்தா - அகர்தலா பறப்புகள்
  • இன்டிகோ குவஹாத்தி - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ வாரணாசி - நியூ டெல்லி பறப்புகள்
  • இன்டிகோ மும்பை - அஃகமதாபாத் பறப்புகள்
  • இன்டிகோ கொல்கத்தா - அஃகமதாபாத் பறப்புகள்
  • இன்டிகோ புவனேஸ்வர் - நியூடெல்லி பறப்புகள்
  • இன்டிகோ பெங்களூர் - குவஹாத்தி பறப்புகள்
  • இன்டிகோ மும்பை - ஜெய்பூர் பறப்புகள்
  • இன்டிகோ நியூ டெல்லி - புவனேஸ்வர் பறப்புகள்
  • இன்டிகோ நியூ டெல்லி - குவஹாத்தி பறப்புகள்
  • இன்டிகோ புனே - சென்னை பறப்புகள்
  • இன்டிகோ மும்பை - கோவா பறப்புகள்
  • இன்டிகோ ஜெய்பூர் - மும்பை பறப்புகள்
  • இன்டிகோ புனே - கொல்கத்தா பறப்புகள்
  • இன்டிகோ ஹைதராபாத் - கொச்சி பறப்புகள்
  • இன்டிகோ மும்பை - பாட்னா பறப்புகள்
  • இன்டிகோ நியூ டெல்லி - பாட்னா பறப்புகள்
  • இன்டிகோ ஜம்மு - நியூ டெல்லி பறப்புகள்
  • இன்டிகோ பாட்னா - மும்பை பறப்புகள்
  • இன்டிகோ கொல்கத்தா - நாக்பூர் பறப்புகள்
  • இன்டிகோ பெங்களூர் - சென்னை பறப்புகள்
  • இன்டிகோ பெங்களூர் - ராஞ்சி பறப்புகள்
  • இன்டிகோ பெங்களூர் - வாரணாசி பறப்புகள்
  • இன்டிகோ நியூ டெல்லி - புனே பறப்புகள்
  • இன்டிகோ திருச்சிராப்பள்ளி - சென்னை பறப்புகள்
  • இன்னும் பலவிதமான வழித்தடங்களைப் இன்டிகோ பயன்படுத்துகிறது.

விருதுகளும் சாதனைகளும்[தொகு]

  1. ஏர்லைன் பாசஞ்சர் அசோசியேஷன் – குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2007)[8]
  2. கலிலியோ எக்ஸ்பிரஸ் டிராவல் விருதுகள் - குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2008)[8]
  3. சிஎன்பிசி அவார்ட்ஸ் ஃபார் டிராவல் - குறைந்த கட்டண ஏர்லைன் சேவைக்கான சிறப்பு விருது (2009) [8]
  4. ஸ்கைடிராக்ஸ் அவார்ட்ஸ் - குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2010, 2011, 2012, 2013, 2014)[9]

குறிப்புகள்[தொகு]

  1. "destinations". Indigo. 15 January 2020. https://www.goindigo.in/destinations.html. 
  2. "IndiGo flies past Jet to become largest airline". Business Standard. 18 August 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
  3. "இன்டிகோ பங்குரிமை" இம் மூலத்தில் இருந்து 2013-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130929004634/http://www.hindustantimes.com/News-Feed/SectorsAviation/Surprise-Nearly-half-of-IndiGo-foreign-owned/Article1-823860.aspx. 
  4. "இன்டிகோ வெளிநாட்டு சேவைகள்". 
  5. Hashim (2 September 2011), Firdaus (18 August 2012). "IndiGo launches its first international flight". Flightglobal. பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  6. "IndiGo to launch international services on 1 September". Flightglobal.com. Archived from the original on 23 August 2011. 22 August 2011. Archived from the original on 21 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "IndiGo". cleartrip.com.
  8. 8.0 8.1 8.2 "IndiGo makes it three in a row with CNBC AWAAZ Travel Award '09". domain-b.com. 1 September 2009 Retrieved 13 July 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  9. "Indigo wins SKYTRAX awards". Business Standard.com. 21 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்டிகோ&oldid=3576672" இலிருந்து மீள்விக்கப்பட்டது