அனார்கலி ஆடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனார்கலி ஆடை (Anarkali Salwar Suit) என்பது பெண்களுக்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான ஆடை வகை ஆகும். முக்கியமாக இது இந்தியாவில் கூடிய பிரபலம் வாய்ந்தது. இவ்வகை ஆடைகளில், குர்தா என்றழைக்கப்படும் கழுத்துப்பட்டை இல்லாமல் நீண்ட சட்டையின் கைப்பகுதி இருக்கும். கணுக்கால் வரையில் நீண்டிருக்கும் துணியின் பகுதி சுடிதார் அல்லது லெக்கிங்க்ஸ் என்றழைக்கப்படும். நாடாவின் உதவியால் இது உடலுடன் கொண்டிருக்கும் இணைப்பின் அழுத்தத்தினை வேறுபடுத்தலாம். இறுக்கமாக வேண்டும் எனும்போது நாடாவினை அழுத்தி இழுத்து முடிச்சுப் போட்டுப் பயன்படுத்தலாம், மற்றவேளைகளில் நாடாவினைத் தளரவிட்டு இயல்பாகப் பயன்படுத்தலாம்.[1]

அம்சங்கள்[தொகு]

குர்தா பகுதிதான் இந்த ஆடையின் முக்கியப் பகுதியாகும். இது பட்டு, சந்தேரி, மென்பட்டு அல்லது பருத்தி போன்ற துணி வகைகளினால் உருவாகியிருக்கும். இதன் மேற்புறம் மார்பளவிற்குத் தகுந்தாற்போல் பொருந்தும் வகையிலும், கீழ்புறம் இடுப்புப் பகுதியில் தளரவிட்டும் தைக்கப்படும். கீழ்புறமுள்ள பகுதி தளரவிட்டு இருப்பதால் அதிலுள்ள அதிகப்படியான துணி நீளம் மடிப்புகள் மாதிரியாக அலங்காரப்படுத்தப்பட்டு வட்ட வடிவில் ஒரு குடையினைப் போன்று மாற்றப்படும். அநேக அனார்கலி ஆடையின் குர்தா பகுதி, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் வகையில் இடுப்பளவு பெரிதாக வைத்தே தயாரிக்கப்படுகிறது அல்லது தைக்கப்படுகிறது.[1]

அத்துடன் இந்த ஆடையின் கழுத்துப்பகுதி மற்றும் கைப்பகுதியில் அமைந்துள்ள நேர்த்தியான வடிவமைப்புகள் ஆடையின் அழகினை அதிகரிக்கிறது. திருமணம் மற்றும் இதர விலையுயர்ந்த ஆடைகளாக தயார் செய்யும்போது அதிக செலவினத்துடன் கூடிய பூத்தையல் வேலைப்பாடுகள் ஆடையில் செய்யப்படுவதுண்டு. இந்த பூத்தையல் முறைகளில் பல உள்ளன, அந்தந்த ஆடைக்கான மதிப்பினைப் பொறுத்து, தங்கம், வெள்ளி உட்பட பல விலையுயர்ந்த பொருட்கள் பயன்படுத்தலாம். இவற்றில் பல்வேறு பாரம்பரிய முறைகளும் பின்பற்றப்படுமாயின் அதன் மதிப்பு இன்னும் அதிகரிக்கும்.[2][3]

அனார்கலி ஆடையில் கால்சட்டைப் பகுதி சுடிதார் கணுக்கால் வரை நீளமுடையதாகவும், கணுக்கால் பகுதியில் சற்று இறுக்கமாகவும் இருக்கும். அதிகப்படியான துணிப்பகுதி மடிப்புகளாக சேர்த்துத் தைக்கப்படும். இந்த அதிகப்படியான துணியின் மடிப்புகள் மூலமும் இதனை அலங்கரிக்க முடியும்.

வரலாறு[தொகு]

அனார்கலி ஆடையின் முக்கியத் தொடக்கம், முகலாய சகாப்தத்தில் மிகவும் பிரசிபெற்ற பெயரான அனார்கலி என்ற வசீகரிக்கும் அழகுகொண்ட பெண்ணின் மூலமே தொடங்கியது. முகலாய வம்சத்தின் அரசர்களில் ஒருவரான அக்பருடன் வாழ்ந்த வந்தவர் அனார்கலி ஆவார். அனார்கலி ஈரான் நாட்டினைச் சேர்ந்தவர் எனவும், அவரின் பெயர் நதிரா பேகம் அல்லது ஷார்ஃப்-உன்-நிசா என இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.[4]

அழகு மற்றும் மாதுளை போன்ற நிறம் கொண்டிருந்ததால் ‘அனார்கலி’ என்று அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இவரின் கதை சோகமாக முடிவுற்றது. இதில் இருவகையான கதைகள் கூறப்படுகின்றன. ஒரு கதையில், அக்பரின் மகனான ஜஹாங்கீருடன் அனார்கலி தகாத உறவு கொண்டிருந்ததால் உயிருடன் புதைக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது. மற்றொரு கதையில், அக்பர் வெளிப் பயணங்களுக்கு சென்றிருந்தபோது அனார்கலி நோயுற்று இறந்ததாகக் கூறப்படுகிறது. இரு கதையில் எதற்குமே, வலிமையான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் அனார்கலியின் அழகினை அல்லது மகிமையினை கூறும்வகையில் பின்னாளில் கல்லறை ஒன்று கட்டப்பட்டது.

இன்றும் பல திரைப்படங்களில் அனார்கலி உயிருடன் தான் வந்துகொண்டிருக்கிறார். முகல்-ஈ-அஸாம் எனும் சித்திரிப்புக் கதையில் அனார்கலி அணிந்திருந்த உடை போன்றவைகள், அதே பாணியில் பயன்படுத்தப்பட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்து. இதுவே அனார்கலி ஆடைகள் இந்தியாவில் பிரபலமாக முக்கியக் காரணமாகவும் அமைந்தது.

ஃபேஷன் மற்றும் போக்குகள்[தொகு]

பல்வேறு துறைகள் மற்றும் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு இந்த அனார்கலி ஆடைகள் மாற்றத்தினை தாங்கின. இன்று பலவகையான அனார்கலி ஆடைகள் உள்ளன. அவற்றுள் சில:[5]

  • சுடிதார் அனார்கலி ஆடைகள்
  • திருமண அனார்கலி ஆடைகள்
  • வலைபோன்ற அனார்கலி ஆடைகள்
  • பூத்தையல் கொண்ட அனார்கலி ஆடைகள்

பிரபலம்[தொகு]

அனார்கலி ஆடைகள் ஹிந்திப் படங்களின் வழியாக மிகவும் பிரபலமானது. எந்த நேரத்திலும் அணியத்தகுந்த ஆடையாக இருப்பதால் இதனைப் பயன்படுத்துவதாக அவர்களுக்குத் தோன்றியது. அத்துடன் ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித், கரீனா கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற பல திரைப்பட நட்சத்திரங்கள் இதனை விரும்பி அணிந்ததால் அனார்கலி ஆடைகள் விரைவாகப் பிரபலமடைந்தது.[1][6]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Look royal in anarkali suits". Fashion Trends and Tips. பார்க்கப்பட்ட நாள் 24 March 2014. {{cite web}}: no-break space character in |title= at position 23 (help)
  2. "Glorious Designer Net Anarkali Suits Collection for Wedding". dresstop24.com. Archived from the original on 2015-05-31.
  3. "Anarkali Suit". mirraw.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
  4. "Legend: Anarkali: myth, mystery and history". dawn.com. பார்க்கப்பட்ட நாள் 11 February 2012.
  5. "Various Anarkali Dresses". shopping.rediff.com.
  6. "Aishwarya Rai In Abu Jani & Sandeep Khosla Anarkali Suit". boldsky.com. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.

"Chikankari Kurti"husna.in

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனார்கலி_ஆடை&oldid=3542186" இலிருந்து மீள்விக்கப்பட்டது