தேசிய அருங்காட்சியகக் கழகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய அருங்காட்சியகக் கழகம், (National Museum Institute of the History of Art, Conservation and Museology) கலைகளின் வரலாற்றை பாதுகாத்தல், அவைகளை இளம் தலமுறையினர்களுக்கு கற்பித்தல், பயிற்சி அளித்தல், அருங்காட்சியகங்களை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் குறித்தான கல்வி வழங்குவதே இதன் நோக்கமாகும். இவ்வமைப்பு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860இன் படி பதிவு செய்யப்பட்டு 27 சனவரி 1989ஆண்டில் துவக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. [1] இக்கழகம் 28 ஏப்ரல் 1989 ஆண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைகழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரிய கலைகள் குறித்தான பயிற்சிகள் மற்றும் ஆய்வுகள் தேசிய அருங்காட்சியகக் கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கழகம் தேசிய அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ளதால், அதன் ஆய்வகங்கள், நூலகங்கள், தொழில் நுட்ப வசதிகளைத் தேசிய அருங்காட்சியக கழக மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வசதியாக உள்ளது.[2][3]

படிப்புகள்[தொகு]

கலைகளின் வரலாறு மற்றும் அருங்காட்சியகங்களை நிர்வகித்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக, முதுநிலை படிப்புகளும், ஆய்வுப் படிப்புகளும் உள்ளன. மேலும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மாணவர்கள் வெளிநாட்டு அருங்காட்சியகங்களை பார்வையிட வசதியாக உள்ளது. [4]ஆய்வு மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 12,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]