உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தானிய டெகரிக்-இ-தாலிபான்
வட மேற்கு பாக்கித்தானியப் போர்

பாக்கிதானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகள் (FATA)
இயங்கிய காலம் திசம்பர் 2007 – இன்றளவில்
தலைவர்கள் பைதுல்லா மெகசூத் (திச. 2007 – ஆக. 2009)

ஹாக்கிமுல்லா மெகசூத் (ஆக. 2009 – இன்றளவில்)

தலைமையகம் தெற்கு வசிரித்தான்
செயற்பாட்டுப்
பகுதி
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (FATA)
கைபர்-பக்தூன்க்வா
ஆப்கானித்தானம்
Strength ஆயிரக்கணக்கில்[1]
கூட்டு அல் காயிதா
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி
டெகரீக்-எ-நஃபாசு-எ-சாரியத்-எ-மொகமதி
ஆப்கானிய தாலிபான் (குறிப்பு: ஆப்கானித்தானியப் போர்)
எதிராளிகள் பாக்கித்தானிய இராணுவம்
ஐக்கிய அமெரிக்க இராணுவம்
நடுவண் ஒற்று முகமை (சிஐஏ)
சேவைகளிடை உளவுத்துறை (ஐஎஸ்ஐ)
சண்டைகள்/போர்கள் வட மேற்கு பாக்கித்தானியப் போர்

பாக்கித்தானிய டெகரிக் இ தாலிபான் (Tehrik-i-Taliban Pakistan, the TTP) (உருது: تحریک طالبان پاکستان; பாக்கித்தானின் மாணவர் இயக்கம்), பரவலாக பாக்கித்தானிய தாலிபான், என்பது பாக்கித்தானின் ஆப்கானித்தானின் எல்லையோரமாக அமைந்துள்ள பாக்கிதானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகளில் இயங்கும் பழமைவாத இசுலாமியக் கொள்கைகளை உடைய பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் குடை அமைப்பாகும்.[2] திசம்பர் 2007இல் ஏறத்தாழ 13 குழுக்கள் பைதுல்லா மெகசூத்தின் தலைமையில் ஒன்றுபட்டு பாக்கித்தானிய டெகரிக் இ தாலிபானை உருவாக்கினர்.[1][3] இந்த இயக்கத்தின் குறிக்கோள்களில் பாக்கித்தானிய அரசாண்மைக்கு எதிர்ப்பு, இசுலாமியச் சட்ட முறைமையை அவர்களது புரிதலின்படி கட்டாயமாகச் செயல்படுத்துவது மற்றும் ஆப்கானித்தானில் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு படைகளுடனானப் போருக்குத் துணை புரிதல் முதன்மையாக உள்ளன.[1][3][4]

பாக்கித்தானிய தாலிபான்கள் ஆப்கானித்தானிய தாலிபான்களுடன் நேரடியாக இணைந்திருக்கவில்லை. இரண்டுமே தங்களது வரலாறு, நோக்கங்கள் மற்றும் விருப்பங்களில் நிறைய வேறுபட்டுள்ளன. இருப்பினும் இசுலாமிய முறைமைகளைக் குறித்தான புரிதல்களில் ஒன்றுபடுகின்றனர். மேலும் இரு இயக்கங்களிலும் பெரும்பான்மையோர் பசுதூனியர்கள் ஆவர்.[4][5] பாக்கித்தான் அரசின் ஆதரவுடன் பன்னாட்டு படைகளுடனும் ஆப்கானியப் படைகளுடனும் போர் புரிவதாக நம்பப்படும் ஆப்கானிய தாலிபான் பாக்கித்தானைத் தாக்குவதில்லை என முடிவாக உள்ளது.[5] ஆனால் பாக்கித்தானிய தாலிபானோ பாக்கித்தானிய அரசுக்கு எதிராகப் போராடுகிறது.

தாக்குதல்கள்

[தொகு]

சான்றுகோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Bajoria, Jayshree (6 February 2008). "Pakistan's New Generation of Terrorists". Council on Foreign Relations. Archived from the original on 14 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 30 March 2009.
  2. Yusufzai, Rahimullah (22 September 2008). "A Who's Who of the Insurgency in Pakistan's North-West Frontier Province: Part One – North and South Waziristan". Terrorism Monitor 6 (18). http://www.jamestown.org/programs/gta/single/?tx_ttnews%5Btt_news%5D=5169&tx_ttnews%5BbackPid%5D=167&no_cache=1. பார்த்த நாள்: 30 March 2011. 
  3. 3.0 3.1 Abbas, Hassan (January 2008). "A Profile of Tehrik-I-Taliban Pakistan" (PDF). CTC Sentinel (West Point, NY: Combating Terrorism Center) 1 (2): 1–4. http://belfercenter.ksg.harvard.edu/publication/17868/profile_of_tehrikitaliban_pakistan.html. பார்த்த நாள்: 8 November 2008. 
  4. 4.0 4.1 Carlotta Gall, Ismail Khan, Pir Zubair Shah and Taimoor Shah (26 March 2009). "Pakistani and Afghan Taliban Unify in Face of U.S. Influx". New York Times. http://www.nytimes.com/2009/03/27/world/asia/27taliban.html. பார்த்த நாள்: 27 March 2009. 
  5. 5.0 5.1 Shane, Scott (22 October 2009). "Insurgents Share a Name, but Pursue Different Goals". The New York Times (The New York Times Company). http://www.nytimes.com/2009/10/23/world/asia/23taliban.html. பார்த்த நாள்: 26 January 2011. 
  6. Lynch, Dennis (2014-06-08). "Militants Attack Karachi Airport In Pakistan: Live Stream And Updates". International Business Times. http://www.ibtimes.com/militants-attack-karachi-airport-pakistan-live-stream-updates-video-1595961. பார்த்த நாள்: 8 June 2014. 
  7. http://www.dawn.com/news/1133796/ttp-claims-peshawar-attack-targeting-senior-army-officer
  8. http://www.dawn.com/news/1163374/20-killed-as-taliban-storm-peshawar-imambargah

வெளி இணைப்புகள்

[தொகு]