விந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விந்தியா
அஇஅதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 செப்டம்பர் 2023
பொதுச்செயலாளர்எடப்பாடி க. பழனிசாமி
கொள்கை பரப்பு செயலாளர்மு. தம்பிதுரை
அஇஅதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர்
பதவியில்
25 ஜூலை 2020 – 27 செப்டம்பர் 2023
பொதுச்செயலாளர்எடப்பாடி க. பழனிசாமி
கொள்கை பரப்பு செயலாளர்மு. தம்பிதுரை
பின்னவர்எஸ். அய்யாதுரை பாண்டியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விந்தியா

12 ஆகத்து 1980 (1980-08-12) (அகவை 43)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2006 முதல்)
வேலைதிரைப்பட நடிகை, அரசியல்வாதி

விந்தியா ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். அவர் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.[1] சங்கமம் (1999) படத்தில் அறிமுகமான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு மற்றும் திரையுலகப் பங்களிப்பு[தொகு]

விந்தியா ஆகஸ்ட் 12, 1980 இல் பிறந்தார். ரகுமான் உடன் இணைந்து சங்கமம் (1999) மூலம் சினிமாவில் அறிமுகமானார், அந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. வயசு பசங்க அவரது வெற்றிப்படங்களில் ஒன்று. அவரது திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் குறைந்த பட்ஜெட் படங்களில் தோன்றினார்.[3] இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரன் கோபிகிருஷ்ணனை பெப்ரவரி 16, 2008 இல் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் விவாகரத்தும் செய்து கொண்டார்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2006 ஏப்ரலில், அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் விந்தியா அதிமுகவில் இணைந்தார். 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தார்.[5] அதை தொடர்ந்து விந்தியா அதிமுக நட்சத்திர பேச்சாளராக 2011, 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2014 மக்களவை பொதுத் தேர்தல்களில் திமுக கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.[6] மற்றும் அந்த கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.[7] அவர் முன்னாள் தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஆவார்.

விந்தியா 2012 முதல் 2016 வரை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஆண்டுதோறும் தனது கோடைகால வருகையின் போது தனது சந்திரகிரி தோட்டத்தில் இருந்து கூடை நிறைய மாம்பழங்களை கொண்டுவந்து ஜெயலலிதாவுக்கு பரிசளிப்பார்.[8] ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், அவர் தொடர்ந்து மாம்பழக் கூடைகளை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து, மெரினா கடற்கரை உள்ளூர் மக்களுக்கு விநியோகித்தார்.

2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விந்தியா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 20 பிப்ரவரி 2018 அன்று, விந்தியா அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமிக்கு ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்ததையொட்டி கடிதம் எழுதியதன் மூலம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார்.[9][10] 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, அவர் அதிமுக கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகராக மீண்டும் வந்தார்.[11] 2020 ஜூலையில், அவர் அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.[12][13][14] 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். 27 செப்டம்பர் 2023 அன்று, அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

தெலுங்கு[தொகு]

  • சிம்ஹாராசி - 2001
  • சீதையா - 2003

மலையாளம்[தொகு]

  • துபாய் - 2001
  • ராவணபிரபு - 2001
  • கிளிச்சுண்டன் மாம்பழம் - 2003
  • இஸ்ரா - 2005

கன்னடம்[தொகு]

  • லவ் ஸ்டோரி - 2005

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "அதிமுகவில் 5 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்". hindutamil. பார்க்கப்பட்ட நாள் 27 September 2023.
  2. "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines". Archived from the original on 27 January 2002.
  3. "Behindwoods : Vindhya stuns censor board".
  4. "Vindhya files for divorce - Times of India". articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 9 July 2012. பார்க்கப்பட்ட நாள் 3 February 2022.
  5. "TN: Cinestars step into political arena". rediff. 13 April 2006.
  6. "Khushbu Should Verify Facts: Vindhya". newindianexpress. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
  7. "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". Archived from the original on 26 January 2008.
  8. "விந்தியா, ஜெ., சமாதியில் மாம்பழம் வைத்து வணங்கியது ஏன்??". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
  9. "'என்னை மன்னியுங்கள்' - முதல்வர் பழனிசாமிக்கு விந்தியா எழுதிய உருக்கமான கடிதம்". vikatan. பார்க்கப்பட்ட நாள் 20 February 2018.
  10. ""முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே…" – எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விந்தியா கடிதம்". indian express tamil. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
  11. "சூடு பிடிக்கும் அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம்! களத்தில் குதிக்கிறார் நடிகை விந்தியா!". asianetnewstamil. பார்க்கப்பட்ட நாள் 9 April 2019.
  12. "Eye on elections, AIADMK reshuffles party organisation, appoints propaganda secretaries". newsminute.com. 26 July 2020.
  13. "Major rejig in AIADMK ahead of polls". newindianexpress. 26 July 2020.
  14. "அதிமுகவில் அளிக்கப்பட்ட கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு குறித்து நடிகை விந்தியா விளக்கம்." news18tamil. பார்க்கப்பட்ட நாள் 30 July 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தியா&oldid=3872694" இலிருந்து மீள்விக்கப்பட்டது