நச்சுக் கோப்பை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நச்சுக் கோப்பை
நூலாசிரியர்கலைஞர் மு. கருணாநிதி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைநாடகம்
வெளியீட்டாளர்பாரதி பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1952
பக்கங்கள்64

நச்சுக் கோப்பை என்ற நாடக நூல், கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்டுள்ளது.

நூலின் நோக்கம்[தொகு]

மதுவினால் வரும் தீங்கினை எடுத்துக்காட்டும் வகையில் நச்சுக்கோப்பை என்று பெயரிடப்பட்டு வெளியாகியது.

கதை மாந்தர்கள்[தொகு]

கதை மாந்தர்கள்
சாந்தா ஜம்பு
மீனாட்சி கணபதி
ஏகாம்பரம் கந்தன்
பழனியப்பன் கருப்பன்
சிவகுரு நெடுமாறன்
அழகப்பன் நொண்டி
மணியப்ப முதலியார் இன்ஸ்பெக்டர்
ஆதிகேசவலு முதலியார் தந்திபியூன்
அய்யர் போலீஸ்காரர்கள்
அய்யரின் சிஷ்யன் சாமியார்

கதைச்சுருக்கம்[தொகு]

சாந்தாவும் எதிர் வீட்டு ஏகாம்பரமும் காதலர்கள். இவர்களுக்கு சாந்தாவின் அண்ணன் பழனியப்பன் ஆதரவு அளிக்கிறான். இவர்களின் காதலுக்கு சாந்தாவின் அப்பாவான மணியப்ப முதலியார் தடை விதிக்கிறார். ஏகாம்பரம் ஏழை என்பதால் திருமணம் செய்துவைக்க முடியாதெனக் கூறுகிறார். முடிவில், சாந்தாவின் விருப்பமின்றி சாந்தாவுக்கு அய்யரின் முன்னிலையில் அழகப்பனுடன் திருமணம் நடக்கிறது. அழகப்பன் ஒரு குடிகாரன்; சீட்டாட்டம் ஆடியே வாழ்பவன். சாந்தாவின் பிரிவுக்குப் பின் ஏகாம்பரம் இராணுவத்திற்கு செல்கிறான். அழகப்பன் குடித்தே இறக்கிறான். அழகப்பனின் நண்பனான மதுவின் கொடுமையை அறிந்தவனான சிவகுரு அழகப்பனின் மைத்துனன் பழனியப்பனின் நண்பனாகிறான். இராணுவம் சென்ற ஏகாம்பரம் இதனிடையே திரும்பவும் ஊருக்கே வருகிறான். இந்நிலையில், ஏகாம்பரத்திற்கு சாந்தாவைத் திருமணம் செய்து வைக்க பழனியப்பன் தன் தகப்பனிடம் கூறுகிறான். வழக்கம் போல அவர் முடியாதெனக் கூறுகிறார். பிறகு, தன் தந்தையைக் கொன்றுவிட்டு, விஷம் குடித்துவிடலாம் என பழனியப்பன் நினைக்கிறான். அப்போது, பழனியப்பனை மிரட்டுமாறு ஆள் அனுப்புகிறார்,பழனியப்பனின் தகப்பனான மணியப்ப முதலியார். மிரட்ட வருபவன் கத்தியால் கொன்றேவிடுகிறான் பழனியை. முடிவில், சிவகுரு பழனிக்காக சாந்தா மற்றும் ஏகாம்பரத்தை சேர்த்து வைப்பதுடன் நாடகம் முடிகிறது.

மேற்கோள்[தொகு]

பழனியப்பன்: 'சாந்தா' அல்லது 'நச்சுக்கோப்பை'[தொகு]

கதை உருவான விதம்[தொகு]

இளைஞராயிருந்த கருணாநிதி ஒரு பெண்ணைக் காதலித்தாா். இருவரது பெற்றோரும் இவா்கள் காதலை எதிா்க்கவே காதல் தோல்வியுற்றது. இந்தக் காதல் தோல்வியை மையமாக வைத்து 'பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதினாா் கருணாநிதி.

இடைஞ்சலும் கடனும்[தொகு]

தமிழ்நாடு தமிழ் மாணவா் மன்ற நிதிக்காக, திருவாரூாில் 'பழனியப்பன்' நாடகம் அரங்கேகற்றப்பட்டது. கதை,வசனம் எழுதிய கருணாநிதியும் நடித்தாா். நாடகம் நடந்த அன்று பயங்கர மழை. நாடகத்திற்கான மொத்த செலவு இருநுாறு ரூபாய். ஆனால், வசூலானதோ எண்பது ரூபாய். நாடகத்தில் நண்பா் ஒருவா் பாிசளித்த வெள்ளிக் கோப்பையை சம்பளமாக கதாநாயகி வேடம் புனைந்த நடிகைக்கு கொடுத்து அனுப்பினாா் கருணாநிதி. கடன் கொடுத்தவா்கள் நாடக அரங்கத்திற்கு வந்து முற்றுகையிட்டனா். யாருக்கும் தொிவிக்காமல் கருணாநிதியும் தென்னன் என்ற நண்பரும் நாகப்பட்டிணம் சென்று திராவிட இயக்கத் தலைவா் ஆா்.வி.கோபாலை அணுகி, தங்கள் இக்கட்டான நிலையைக் கூறினா். கடனாகத் தருவதற்கு ஆா்.வி.கோபால் விரும்பவில்லை. தாம் தொடங்கவிருந்த, நாகை திராவிட நடிகா் கழகத்திற்காக, 'பழனியப்பன்' நாடகத்தை நுாறு ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொண்டாா்.

கருணாநிதி எழுதிய முதல் நாடகம் 'பழனியப்பன்' என்னும் இந்த நாடகமே 'சாந்தா' என்னும் பெயாிலும் 'நச்சுக்கோப்பை' என்னும் பெயாிலும் நுாற்றுக்கணக்கான மேடைகளில்

நடிக்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

  • அறந்தை நாராயணன்- திராவிடம் பாடிய திரைப்படங்கள்- நியு செஞ்சுாி புக் ஹவுஸ் வெளியீடு(ஜூலை 1994)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்சுக்_கோப்பை_(நூல்)&oldid=3217801" இலிருந்து மீள்விக்கப்பட்டது