ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது
நூலின் முகப்பு அட்டை
நூலாசிரியர்ஐவி.பீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகேரளா மாநில மக்கள் வாழ்வு 19 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது
வெளியீட்டாளர்பாவை பதிப்பகம், சென்னை
வெளியிடப்பட்ட நாள்
ஜூலை, 2013
பக்கங்கள்173

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது என்பது மருத்துவர் ஐவி பீட்டர் என்பவரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும். இது 2014 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டதாகும். [1]

பகுப்புகள்[தொகு]

இப்புத்தகம் 11 முதன்மை தலைப்புகளைக் கொண்டும், ஒவ்வொரு முதன்மைத் தலைப்புக்கும் பல துணைத்தலைப்புகளைக் கொண்டும் எழுதப்பட்டுள்ளது.

உள்ளடக்கச் சுருக்கம்[தொகு]

19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வாழ்ந்த, தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட ஈழவர்களின் வாழ்க்கை முறையை, போராட்ட வரலாற்றை இந்நூல் கூறுகிறது. [1][2] திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைமுறையில் இருந்த சாதிப்பாகுபாடுகள், அதனால் மக்கள் பட்ட துன்பங்கள், உயர் குடியினர் என்று சொல்லிக்கொண்ட நாயர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று பிரிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட மக்களை வாட்டி வதைத்த கொடுமைகளையும், பலகாலம் கழித்து நாயர்களைவிட உயர்ந்த சாதிகள் என்று சொல்லிக்கொண்ட பிராமணர்கள், நாயர்கள் மட்டுமே வகித்துவந்த பேஷ்கார், திவான் போன்ற பதவிகளை அபகரித்துக்கொண்ட போது ஈழவர்களின் துணையோடுதான் பிராமணர்களையே எதிர்த்து போராடியது, மற்றும் டாக்டர் பல்பு (Padmanabhan Palpu) என்ற ஈழவரின் வழிகாட்டலினால் வேலைவாய்ப்பில் ஈழவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றி 1895 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் திவான் சுப்பையருக்கு மனுக்கொடுத்தது, அதன் பின் ஈழர்களின் இன குரு நாராயணகுரு பல இடங்களில் தன் மக்களுக்காக தனிக்கோவில் கட்டியது என பல அரிய தகவல்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.

நூலின் முடிவு வரை ஈழவர், சாணார் என்று அறியப்பட்ட நாடார் போன்றோர் தாழ்த்தப்பட்டோர் வகையிலிருந்து[3] நிலையிலிருந்து எப்போது பிற்படுத்தப்பட்டோர் வகைக்கு [4] மாறினார்கள் என்ற தகவல் கொடுக்கப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது". தினமணி. 13 அக் 2014. http://www.dinamani.com/book_reviews/2014/10/13/ஒடுக்கப்பட்ட-சமுதாயம்-வரலா/article2474615.ece?service=print. பார்த்த நாள்: 13 சூலை 2015. 
  2. "ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது". Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.
  3. [1]
  4. [2]