பெண்களின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்களின் வரலாறு (Women's history) வரலாற்றில் பெண்களின் பங்கு குறித்தும் இவற்றை ஆய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவரிக்கின்றது. பதியப்பட்ட வரலாற்றில் பெண்களின் உரிமைகள் வளர்ந்து வந்ததும் தனிப்பெண்கள் மற்றும் பெண்குழுக்களின் வரலாற்று முக்கியத்துவம் குறித்த ஆய்வுகளும் வரலாற்று நிகழ்வுகளால் பெண்களுக்கு ஏற்பட்ட விளைவுகளும் இதில் அடங்கும். இத்தகைய பகுப்பின் மூலம் மரபார்ந்த வரலாற்றுக் கல்வியில் பெண்களின் பங்கை குறைத்தோ முற்றிலும் புறக்கணிக்கப்பட்டோ வருவதை பெண்ணியலாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இவ்வகையில் பெண்களின் வரலாறு என்பது வரலாற்றின் மீள்வாசிப்பாகும்.

இத்தகைய கல்விக்கான முதன்மை மையங்களாக ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் உள்ளன; இரண்டாம்-அலைப் பெண்ணியல் வரலாற்றாளர்கள் இதற்கு முன்னோடியாக இருந்தனர். பெண்களின் சமநிலை இல்லாநிலையையும் ஒடுக்கத்தையும் வெளிப்படுத்திவந்த இப்பெண்ணியலாளர்கள் தங்கள் பெண் முன்னோர்களின் வாழ்க்கையை ஆராய முற்பட்டனர். அச்சில் எவ்வித தரவுகளும் இல்லாத நிலையைக் கண்டனர். வரலாறு பெரும்பாலும் ஆண்களாலேயே பொதுவிடத்தில் ஆண்களின் செயற்பாடுகள்—போர், அரசியல், பண்ணுறவாண்மை மற்றும் நிர்வாகம்— குறித்து எழுதப்பட்டிருந்தது. பெண்கள் பொதுவாக புறக்கணிக்கப்பட்டிருந்தனர் அல்லது குறிப்பிடப்பட்டிருந்தால் வழமையாக பாலினப் பங்களிப்பாளர்களாக, மனைவிகள், தாயார்கள், மகள்கள், துணைவிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். வரலாறு "குறிப்பிடத்தக்க" விடயங்களால் மதிப்புக் கூட்டப்பட்டிருந்தது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. June Purvis, "Women's History Today," History Today, Nov 2004, Vol. 54 Issue 11, pp 40-42

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Women in history
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்களின்_வரலாறு&oldid=3222372" இலிருந்து மீள்விக்கப்பட்டது