சமவியல்பு இணையியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடிவவியலில், ABC முக்கோணத்தைப் பொறுத்து P புள்ளியின் சமவியல்பு இணையியம் அல்லது ஓரக இணையியம் (isotomic conjugate) என்பது புள்ளி P , முக்கோணம் ABC இரண்டின் மூலமாக வரையறுக்கப்படும் மற்றொரு புள்ளியாகும்.

வரைதல்[தொகு]

ABC முக்கோணத்தைப் பொறுத்து புள்ளி P இன் சமவியல்பு இணையியத்தைக் காண்பதற்கு, முக்கோணத்தின் எந்த இரு உச்சிகளோடும் புள்ளி P ஆனது ஒருகோட்டில் அமையாது என எடுத்துக்கொள்ளப்படுகிறது. AP, BP, CP ஆகிய மூன்று கோடுகளும் முக்கோணத்தின் பக்கங்கள் BC, CA , AB (தேவைப்பட்டால் பக்கங்களை நீட்டித்துக் கொள்ள) மூன்றையும் சந்திக்கும் புள்ளிகள் முறையே A', B' and C'. இம்மூன்று புள்ளிகளையும் BC, CA, AB பக்கங்களின் நடுப்புள்ளிகளைப் பொறுத்து எதிரொளிக்கக் கிடைக்கும் எதிருருக்கள் முறையே A", B" , C" ஆகும். கோடுகள் AA", BB" and CC" மூன்றும் சமவியல்புக் கோடுகள் (isotomic lines) என அழைக்கப்படுகின்றன. இக்கோடுகள் மூன்றும் ஒரு புள்ளியில் சந்திக்கும். அவ்வாறு அவை சந்திக்கின்ற புள்ளிதான் P இன் சமவியல்பு இணையியம் ஆகும்.

ஆட்கூறுகள்[தொகு]

P இன் முக்கோட்டு ஆட்கூறுகள் p : q : r எனில் அதன் சமவியல்பு இணையியத்தின் முக்கோட்டு ஆட்கூறுகள்:

a−2p−1 : b−2q−1 : c−2r−1.

பண்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Robert Lachlan, An Elementary Treatise on Modern Pure Geometry, Macmillan and Co., 1893, page 57.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமவியல்பு_இணையியம்&oldid=1825085" இலிருந்து மீள்விக்கப்பட்டது