உறங்கிக்கொண்டேயிருக்கும் நோய்த்தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
African trypanosomiasis
Trypanosoma forms in a blood smear
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B56.
ஐ.சி.டி.-9086.5
நோய்களின் தரவுத்தளம்29277 13400
மெரிசின்பிளசு001362
ஈமெடிசின்med/2140
பேசியண்ட் ஐ.இஉறங்கிக்கொண்டேயிருக்கும் நோய்த்தன்மை
ம.பா.தD014353

உறங்கிக்கொண்டேயிருக்கும் நோய்த்தன்மை (sleeping sickness[1], African trypanosomiasis; ஆப்பிரிக்க ரிப்பானோஸோமியாசிஸ்) என்பது மனிதர்கள் அல்லது இதர விலங்குகளின் ஓர் ஒட்டுண்ணி வகை நோய் ஆகும். இது "ரைபானோசோமா புரூசெய்" (Trypanosoma brucei) எனும் உயிரினங்களின் முதலுயிரிகளால் ஏற்படுகிறது.[2] "ட்ரைப்பானோசோமா ப்ரூசெய் கேம்பியன்ஸ்" (Trypanosoma brucei gambiense) (டி.பி.ஜி) மற்றும் "ரைப்பானோசோமா புரூசெய் ரொடீசியென்ஸ்" (Trypanosoma brucei rhodesiense) (டி.பி.ஆர்.) எனப்படும் இரண்டு வகைகள் மனிதர்களைத் தொற்றுகின்றன.[1] அறிவிக்கப்பட்ட நிகழ்வுகளில் 98% இற்கும் மேலான தொற்றினை டி.பி.ஜி உண்டாக்குகிறது.[1] இரு வகைகளுமே தொற்றுக்கு ஆளாகிய தெத்சி ஈக்கள் (tsetse fly) கடிப்பதாலேயே வழக்கமாக கடத்திவிடப்படுகிறது மற்றும் கிராமப்புறங்களில் மிகச்சாதாரணமாக நிலவுகிறது.[1]

ஆரம்ப நிலையில், நோயின் முதல் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, நமைச்சல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கின்றன.[1] கடிபட்டதில் இருந்து ஒன்று மற்றும் மூன்று வாரங்களுக்கு இடையில் இது ஆரம்பிக்கிறது.[3] சில வாரங்களில் ஆரம்பித்து, சில மாதங்களுக்குள்ளாக, குழப்பம், ஒருங்கிணைப்பில் குறைபாடு, மரத்துப்போன தன்மை மற்றும் தூங்குவதில் சிரமம் ஆகியவற்றுடன் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கிறது. [1][3] "இரத்தத்துளி தடவல்" (blood smear) அல்லது நிணநீர் முடிச்சில் இருக்கும் திரவத்தில் ஒட்டுண்ணியைக் காணுவதன் மூலம் நோய் கண்டறியப்படுகிறது.[3] முதுகில் துளையிடுவதே (lumbar puncture) முதலாவது மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு இடையேயான வித்தியாசத்தைக் கூற பெரும்பாலும் அவசியமாக இருந்தது.[3]

நோய் தீவிரமடைவதைத் தடுப்பது என்பது, ஆபத்தில் சிக்கவிருக்கும் மக்களிடையே டி.பி.ஜி க்கான ரத்த சோதனைகளைக் கொண்டு நோயாளிகளை இனம் காணுவதில் சம்பந்தப்படுகிறது.[1] நரம்பியல் அடையாளங்கள் ஏற்படு முன்னதாக ஆரம்பத்திலேயே நோயைக் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சையளிப்பது சுலபம்.[1] "பெண்ட்டாமிடின்" (pentamidine) அல்லது "சுராமின்" (suramin) ஆகிய மருந்துகளைக் கொண்டு முதல் கட்டத்திற்கான சிகிச்சை செய்யப்படுகிறது.[1] சிகிச்சையின் இரண்டாம் கட்டத்தில் "எஃப்ளோரோனிதைன்" (eflornithine) கொண்டு அல்லது "நிஃபுர்ட்டிமாக்ஸ்" (nifurtimox) மற்றும் டி.பி.ஜி க்கான எஃப்ளோரோனிதைன் ஆகிய இரண்டின் இணைப்பு கொண்டு சமாளிக்கப்படுகிறது.[3] இவ்விரண்டு கட்டங்களுக்குமே "மெலர்ஸோப்ரோல்" (melarsoprol) பலனளிக்கிறது என்றாலும், ஒரு வகையில், பக்க விளைவுகளின் காரணமாக ஏற்பட்ட டி.பி.ஆர் க்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.[1]

இந்த நோயானது, ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகளில் இருக்கும் பிரதேசங்களில் இந்த ஆபத்தினைக் கொண்ட 70 மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்டுள்ள 36 நாடுகளில் வழக்கமாகவே ஏற்படுகிறது. [4] 1,990 இல் 34,000 மக்களைக் காவு கொண்ட இந்த நோயினால் 2010 ஆம் ஆண்டு வாக்கில் ஏறத்தாழ 9,000 பேர் உயிரிழந்தனர்.[5] 2012 ஆம் ஆண்டில் 7.000 நபர்களை புதிதாகத் தொற்றிய இந்த நோய் தற்போதைக்கு 2012 நிலவரப்படி, சுமார் 30,000 பேர் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[1] இவர்களில் 80% க்கும் அதிகமானோர் காங்கோ சனநாயகக் குடியரசில் இருக்கிறார்கள்.[1] சமீப கால வரலாற்றில் மூன்று மிகப்பெரும் நோய்ப்பரவல்கள் நேர்ந்துள்ளன; 1896 முதல் 1906 வரை முக்கியமாக உகாண்டா மற்றும் காங்கோ வடிநில நாடுகளில் ஒன்றும், மற்றும் இரண்டு 1920, 1970 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு தென் ஆப்பிரிக்க நாடுகளிலுமாக நிகழ்ந்துள்ளன.[1] பசுக்கள் போன்ற இதர விலங்குகளும் இந்தத் தொற்றுக்கு ஆட்பட்டு நோய்வாய்ப்படலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 WHO Media centre (June 2013). Fact sheet N°259: Trypanosomiasis, Human African (sleeping sickness). http://www.who.int/mediacentre/factsheets/fs259/en/. 
  2. MedlinePlus Encyclopedia Sleeping sickness
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Kennedy, PG (2013 Feb). "Clinical features, diagnosis, and treatment of human African trypanosomiasis (sleeping sickness).". Lancet neurology 12 (2): 186-94. பப்மெட்:23260189. 
  4. Simarro PP, Cecchi G, Franco JR, Paone M, Diarra A, Ruiz-Postigo JA, Fèvre EM, Mattioli RC, Jannin JG (2012). "Estimating and Mapping the Population at Risk of Sleeping Sickness". PLoS Negl Trop Dis 6 (10): e1859. doi:10.1371/journal.pntd.0001859. 
  5. Lozano, R (டிசம்பர் 15, 2012). "Global and regional mortality from 235 causes of death for 20 age groups in 1990 and 2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010.". Lancet 380 (9859): 2095–128. doi:10.1016/S0140-6736(12)61728-0. பப்மெட்:23245604. 

வெளி இணைப்புகள்[தொகு]