அஸ்கரியேசிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ascariasis
Ascaris lumbricoides
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases, helminthologist
ஐ.சி.டி.-10B77.
ஐ.சி.டி.-9127.0
ம.இ.மெ.ம604291
நோய்களின் தரவுத்தளம்934
மெரிசின்பிளசு000628
ஈமெடிசின்article/212510
ம.பா.தD001196

அஸ்கரியேசிஸ் (ascariasis) என்பது வட்டப்புழு (Ascarislumbricoides) என்ற புழுவின் மூலம் ஏற்படுகின்ற ஒரு நோயாகும்.[1] 85% இற்கும் அதிகமானவர்களின் விடயத்தில் குறிப்பாக புழுக்களின் எண்ணிக்கை சிறியளவில் காணப்படுகின்ற போது இத்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படமாட்டாது.[1] புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது குறுஞ் சுவாசம் உள்ளிட்ட அறிகுறிகளும் அதிகரிக்கும். இந்நோய் காய்ச்சலில் ஆரம்பிக்கும்.[1] இவற்றைத் தொடர்ந்து வயிறு வீங்குதல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு என்பன ஏற்படக்கூடும்.[1] பொதுவாக இந்நோயினால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் இவ்வயதுப் பிரிவினர் மத்தியில் பாரம் அதிகரிப்பது குறைவடைவதற்கும், போசாக்கின்மை ஏற்படுவதற்கும் கற்றல் பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கும் இத்தொற்று காரணமாக அமைகின்றது.[1][2][3]

காரணம் மற்றும் செயன்முறை[தொகு]

அஸ்கரிஸ் முட்டைகளால் மாசுற்ற உணவுகளை அல்லது பானங்களை உட்கொள்வதன் மூலம் இத்தொற்று ஏற்படுகின்றது.[2] இந்த முட்டைகள் குடல்களில் பொரித்து, குடற் சுவரின் ஊடாகவும் இரத்தத்தின் ஊடாகவும் நுரையீரல்களுக்குச் செல்கின்றன.[2] அங்கு அவை அல்வியோலிக்குகளாக வெடித்து சுவாசக் குழாயைக் கடந்து இருமும் போது வெளியே வந்து விழுங்கப்படுகின்றன.[2] இந்த நுண்புழுக்கள் இரண்டாவது தடவையாக வயிற்றின் ஊடாகக் குடற் பகுதிக்குச் சென்று அங்கே பெரிய புழுக்களாக வளர்ச்சியடைகின்றன.[2]

நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை[தொகு]

மலசலகூட வசதி, மலங்களை உரிய முறையில் அகற்றுவதற்கான வசதி உள்ளிட்ட துப்புரவு வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக நோய்த் தடுப்பினை ஏற்படுத்த முடியும்.[1][4] சவர்க்காரமிட்டு கை கழுவுதல் பாதுகாப்பான ஒரு வழிமுறையாகும்.[5] மக்கள்தொகையில் 20% இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில், தொடர்ச்சியான கால இடைவெளிகளில் அனைவருக்கும் சிகிச்சையளிப்பது சிறந்தது எனச் சிபாரிசு செய்யப்படுகின்றது.[1] மீள ஏற்படும் தொற்றுக்கள் பொதுவானவையாகும்.[2][6] இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.[2] உலக சுகாதார நிறுவனத்தினால் இதற்கான சிகிச்சைக்காக albendazole, mebendazole, levamisole அல்லது pyrantel pamoate ஆகிய மருந்துகள் சிபாரிசு செய்யப்படுகின்றன.[2] ஏனைய பயனளிக்கக் கூடிய மருந்துகளில் tribendimidine, nitazoxanide என்பனவும் உள்ளடங்குகின்றன.[2]

தொற்று நோயியல்[தொகு]

உலகளாவிய ரீதியில் சுமார் 0.8 முதல் 1.2 பில்லியன் வரையான மக்கள் அஸ்கரியேசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டள்ளனர். மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக ஆப்பிரிக்காவின் சகாரா துணைப் பிரதேசம், இலத்தின் அமெரிக்கா, ஆசியா ஆகிய பிரதேசங்கள் விளங்குகின்றன.[1][7][8] இதன் அடிப்படையில் நோக்குகையில் மண்ணின் மூலம் பரவுகின்ற குடற்புழுக்களில் மிகவும் பொதுவான வகையாக அஸ்கரியேசிஸ் விளங்குகின்றது எனலாம்.[7] 1990 ஆம் ஆண்டில் 3,400 ஆக்க் காணப்பட்ட இந்நோயின் மூலமான மரணம் 2010 ஆம் ஆண்டில் 2,700 ஆகக் காணப்பட்டது.[9] பிறிதொரு வகை அஸ்கரியேசிஸ் பன்றிகளைத் தொற்றுகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Dold, C; Holland, CV (சூலை 2011). "Ascaris and ascariasis.". Microbes and infection / Institut Pasteur 13 (7): 632–7. doi:10.1016/j.micinf.2010.09.012. பப்மெட்:20934531. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Hagel, I; Giusti, T (Oct 2010). "Ascaris lumbricoides: an overview of therapeutic targets.". Infectious disorders drug targets 10 (5): 349–67. doi:10.2174/187152610793180876. பப்மெட்:20701574. 
  3. "Soil-transmitted helminth infections Fact sheet N°366". உலக சுகாதார அமைப்பு. June 2013.
  4. Ziegelbauer, K; Speich, B; Mäusezahl, D; Bos, R; Keiser, J; Utzinger, J (Jan 2012). "Effect of sanitation on soil-transmitted helminth infection: systematic review and meta-analysis.". PLoS medicine 9 (1): e1001162. doi:10.1371/journal.pmed.1001162. பப்மெட்:22291577. 
  5. Fung, IC; Cairncross, S (Mar 2009). "Ascariasis and handwashing.". Transactions of the Royal Society of Tropical Medicine and Hygiene 103 (3): 215–22. doi:10.1016/j.trstmh.2008.08.003. பப்மெட்:18789465. 
  6. Jia, TW; Melville, S; Utzinger, J; King, CH; Zhou, XN (2012). "Soil-transmitted helminth reinfection after drug treatment: a systematic review and meta-analysis.". PLoS neglected tropical diseases 6 (5): e1621. doi:10.1371/journal.pntd.0001621. பப்மெட்:22590656. 
  7. 7.0 7.1 Keiser, J; Utzinger, J (2010). "The drugs we have and the drugs we need against major helminth infections.". Advances in parasitology 73: 197–230. doi:10.1016/s0065-308x(10)73008-6. பப்மெட்:20627144. 
  8. Fenwick, A (Mar 2012). "The global burden of neglected tropical diseases.". Public health 126 (3): 233–6. doi:10.1016/j.puhe.2011.11.015. பப்மெட்:22325616. 
  9. Lozano, R (Dec 15, 2012). "Global and regional mortality from 235 causes of death for 20 age groups in 1990 and 2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010.". Lancet 380 (9859): 2095–128. doi:10.1016/S0140-6736(12)61728-0. பப்மெட்:23245604. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்கரியேசிஸ்&oldid=1885586" இலிருந்து மீள்விக்கப்பட்டது