கர்தினால் குழாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்தினால் குழாம் (ஆங்கில மொழி: College of Cardinals) என்பது கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் அவையினைக்குறிக்கும்.[1] ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் திருத்தந்தைக்கு திருச்சபை விவகாரங்களில் அறிவுரைக்கூறுவது இக்குழுவின் முதன்மைப்பணியாகும்.[2] மேலும் இறப்பாலோ பணித்துறப்பாலோ திருத்தந்தையின் பணி இடம் காலியாகுபோது, ஒரு புதியத் திருத்தந்தையினை தேர்வு செய்வது இவர்களின் கடமையாகும்.[3] இக்குழாமுக்கு இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் தவிற பிற காலகட்டத்தில் எவ்வித அதிகாரமும் கிடையாது. அக்காலகட்டத்திலும் கூட மிகவும் குறுகிய அதிகாரமே இவர்கள் பெறுவர்.

கர்தினால் குழு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கர்தினால் குழாம் கூடும்போது அக்கூட்டத்திற்குத் தலைமை வகிப்பர். புறநகர் ஆலய உரிமைத் தகுதி பெற்ற கர்தினால்கள் மட்டும் இப்பதவியினை வகிக்கலாம். தலைமை வகிப்பதைத்தவிர இவர்களுக்கு பிற கர்தினால்கள் மேல் எவ்வித அதிகாரமும் இல்லை.

வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர், உரோமை செயலகங்களின் தலைவர்கள், உரோமை ஆயர் பொதுப் பதில்குரு, வேனிசின் மறைமுதுவர், இலிஸ்பனின் மறைமுதுவர் ஆகியப்பதவிகளை வகிப்போர் கர்தினால்களாக இருப்பது வழக்கம். ஆயினும் இதற்கு சில தற்காலிக விதிவிலக்குகள் உண்டு.

வத்திக்கான் நாட்டின் சட்டப்படி சட்டவாக்க அவை, வத்திக்கான் நகருக்கான திருத்தந்தை ஆணைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் கர்தினால்களாக இருக்க வேண்டும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1983 CIC, Bk. II, Pt. II, Sec. I, Chap. III The Cardinals of the Holy Roman Church
  2. CIC 1983, can. 349
  3. John Paul II, Ap. Const. Universi Dominici Gregis in AAS 88 (1996)
  4. திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (26 நவம்பர் 2000). "Fundamental Law of Vatican City State" (PDF). Archived from the original (PDF) on 2008-02-26. பார்க்கப்பட்ட நாள் 2008-04-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்தினால்_குழாம்&oldid=3547950" இலிருந்து மீள்விக்கப்பட்டது