அங்கலேஷ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கலேஷ்வர்
અંકલેશ્વર
பெட்ரோலிய நகரம்
நகரம்
நாடுஇந்தியா
மாவட்டம்குஜராத்
மாவட்டம்பரூச் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,40,839
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
பின் கோடு393001
வாகனப் பதிவுGJ 16
15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

அங்கலேஷ்வர் (Ankleshwar), நகரம் குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ளது. இது பரூச் நகரத்திலிருந்து பத்து கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. அங்கலேஷ்வர் சமண சமய தீர்த்தாங்கரர் கோயில் புகழ் பெற்றது. [1]. இது குஜராத்தின் பெட்ரோலிய நகரம் என்ற சிறப்பு படைத்தது.

பொருளாதாரம்[தொகு]

பெட்ரோலிய வளமிக்க தொழில் நகரமான அங்கலேஷ்வரில், இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (Oil and Natural Gas Corporation Limited (ONGC) கிளை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மருத்துவமனை மருந்துகள், இரசாயனப் பொருட்கள் மற்றும் வேதியியல் வர்ணங்கள் தயாரிக்கும் 1000க்கும் மேற்பட்ட வேதியல் தொழிலகங்கள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அங்கலேஷ்வர் நகர மக்கட்தொகை 1,40,839, அவர்களில் ஆண்கள் 53%, பெண்கள் 47%ஆக உள்ளனர். எழுத்தறிவு 79%ஆக உள்ளது.

போக்குவரத்து[தொகு]

  • நர்மதா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 133 ஆண்டுகள் பழமையான தங்கப்பாலம், அங்கலேஷ்வர் நகரை பரூச் நகரத்துடன் இணைக்கிறது.
  • அங்கலேஷ்வர் இரயில் நிலையம், நகரின் நடுவில், தேசிய நெடுஞ்சாலை எண் 8இல் அமைந்துள்ளது.
  • அங்கலேஷ்வர் விமான நிலையம் தேசிய நெடுஞ்சாலை எண் 8இல் அமைந்துள்ளது. [2].
  • அங்கலேஷ்வரிலிருந்து 350 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சாலை மும்பை நகரை இணக்கிறது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கலேஷ்வர்&oldid=2747711" இலிருந்து மீள்விக்கப்பட்டது