ஜூலியா பட்டர்பிளை ஹில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூலியா பட்டர் பிளை ஹில்
Julia Butterfly Hill
ஜூலியா 2006இல்
பிறப்புJulia Lorraine Hill
பெப்ரவரி 18, 1974 (1974-02-18) (அகவை 50)
மவுண்ட் விரோன்ன், மிசௌரி, அமெரிக்க ஒன்றியம்
தேசியம்அமெரிக்கர்
பணிசூழலியல் செயற்பாட்டாளர்
Motivational பேச்சாளர்
பணியகம்சர்கிள் ஆப் லைப் பவுண்டேசன்
வலைத்தளம்
www.juliabutterfly.com

ஜூலியா பட்டர் பிளை ஹில் (Julia Lorraine Hill பிறப்பு பெப்ரவரி,18. 1974) என்பவர் ஒரு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர், பேச்சாளர் ஆவார்.

இளமைப்பருவம்[தொகு]

இவரது இயற்பெயர் ஜூலியா ஹில் ஆகும் இவருக்கு சிறிய வயதில் இருந்தே இயற்கை மீது ஆர்வம். ஏழு வயதில் மலைப்பகுதிக்குச் சென்றபோது, அவரது விரல்களில் அழகிய வண்ணத்துப் பூச்சி அமர்ந்து, சற்று நேரம் ஒய்வெடுத்து பிறகு பறந்து சென்றது. அன்றிலிருந்து தனது பெயருடன் பட்டர்பிளையையும் சேர்த்துக்கொண்டார்.[1] பள்ளி கல்லூரி சுற்றுச்சூழல், இயற்கைபாதுகாப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.

செம்மரங்கள்[தொகு]

உலகிலேயே மிக உயரமான, மிக அதிக காலம் வாழக்கூடியவை செம்மரங்கள். இந்த செம்மரங்கள் அமெரிக்காவின் கலிபோர்னிய காடுகளில் 97 விழுக்காடு அழிக்கப்பட்டுவிட்டன. ஆயிரம் ஆண்டுகளை எட்டிய செம்மரங்களை பசிபிக் லாம்பர் நிறுவனம் வெட்டிக்கொண்டிருந்தது. எஞ்சியுள்ள 3 விழுக்காடு மரங்களையாவது காக்கவேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் போராடிக்கொண்டிருந்தார்கள் சில நாட்கள்,சிலவாரங்கள் மரங்களில் அமர்ந்து புதுமையாக போராடினார்கள். இந்த போராட்டங்கள் ஜூலியாவை உத்வேகப்படுத்தியது.[2]

ஜூலியா பட்டர் பிளை ஹிலின் போராட்டம்[தொகு]

1997 அக்கோபர் மாதம் பௌர்ணமி நாளில் ஆயிரம் வயது செம்மரத்தை தேர்ந்தெடுத்து, லூனா என்று பெயரிட்டார். போராடும் நோக்கத்துடன் நள்ளிரவில் அந்த மரத்தின் உச்சியை அடைந்து ஒரு சிறிய கூடாரத்தை அமைத்தார்.[3] சில நாட்களில் ஜூலியா இறங்கிவிடுவார் என நண்பர்கள் நினைத்தனர். ஆனால் மரங்களுக்கு பாதுகாப்பு கிடைக்குவரை கீழே இறங்குவதில்லை என உறுதியாக கூறினார்.

போராட்டத்திற்கு இடையே[தொகு]

அடுப்பு, கதிரொளி விளக்கு, செல்பேசி, காகிதங்கள், பேனா, வாளி போன்றவற்றை வைத்துக்கொண்டு, உயிர்வாழத் தேவையான அளவுக்குக் குறைவான உணவைச் சாப்பிட்டார்.[4] கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினார். மழைவரும்போது தண்ணீரைப் பிடித்துக் கொண்டார். உறங்கும் பையினுள் சென்று தூங்கினார். கூடாரம் என்று சொனானாலும் அது கூடாரம் அளவுக்கு பாதுகாப்பானது அல்ல காற்றுக்கு மரம் ஆடும். பூச்சிகள் தொல்லை கீழே கரடிகள் நடமாடும் மிகக் கடினமான வாழ்க்கை வாழ்ந்தார்.

போராட்டத்தின் வெற்றி[தொகு]

ஆரம்பத்தில் பசிபிக் லாம்பர் நிறுவனம் ஜூலியாவைப் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. நாட்கள் செல்லச்செல்ல ஜூலியாவுக்கு பல வகையில் தொல்லைக்கொடுத்தது. மிரட்டிப் பார்த்தது. இவை எதுவும் ஜூலியாவின் உறுதியைக் குளைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ஜூலியாவின் போராட்டம் தேசிய அளவில் பேசப்பட்டது. செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஜூலியாவும், லூனாவும் முதன்மைச் செய்திகளாக மாறினர். இதனால் பசிபிப் லம்பர் நிறுவனம் வேறுவழியின்றி ஜூலியா பட்டர் பிளை ஹில்லுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அனுமதியின்றி எவ்வகை மரத்தையும் வெட்டுவதில்லை, செம்மரங்களுக்கு தங்களாங் ஆபத்து நேராது, லூனா மரத்துக்கு தனிப் பாதுகாப்பு கொடுக்ப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. 738 நாட்களுக்குப் பிறகு பூமியில் கால் பதித்தார்.

சுற்றுச்சூழல் அமைப்பில்[தொகு]

தனிநபர் போராட்டத்தைவிட ஓர் அமைப்பு மூலம் போராடுவது கூடுதல் பயனளிக்கும் என்று நினைத்து ஜூலியா,எர்த் ஃபர்ஸ்ட் சுற்றுச்சூழல் அமைப்பில் இணைந்துகொண்டார்.

போராட்டங்கள்[தொகு]

  • 2002ஆம் ஆண்டு ஓர் எண்ணெய் நிறுவனம் ஈக்வடார் காடுகளில் எண்ணெய்க் குழாய்களைப் பதிக்கக் காடுகளை அழிக்க ஆரம்பித்தது. இதனை எதிர்த்துப் போராடிய ஜூலியா கைது செய்யப்பட்டார்.[5]
  • 2013ஆம் ஆண்டு வரி செலுத்தா போராட்டத்தில் ஈடுபட்டார். மக்கள் செலுத்தும் வரிப்பணம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் நல்லசெயல்களுக்கும் பயன்படவேண்டும்.[6]}} ஈராக் போன்ற நாடுகளில் மக்களை அழிப்பதற்கும்,வளங்களை சூறையாடுவதற்கும் பயன்படக்கூடாது என்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. Fitzgerald, Dawn (2002). Julia Butterfly Hill: Saving the Redwoods. Millbrook, Connecticut: Millbrook Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7613-2654-5. https://archive.org/details/juliabutterflyhi0000fitz. 
  2. Oldenburg, Don (2004-10-22). "Julia Butterfly Hill, From Treetop to Grass Roots". Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/articles/A40230-2004Sep21_2.html. பார்த்த நாள்: 2009-09-18. 
  3. Butterfly Hill, Julia (2000-04-01). The Legacy of Luna. HarperSanFrancisco. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-06-251658-2. 
  4. Hua, Vanessa (2000-06-18). "Julia 'Butterfly' Hill's connections". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/e/a/2000/06/18/BUSINESS6047.dtl. பார்த்த நாள்: 2009-09-19. 
  5. Martin, Glen (2002-07-18). "Julia Butterfly in Ecuador jail after oil protest". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2002/07/18/MN42926.DTL. பார்த்த நாள்: 2009-09-19. 
  6. Smith, Gar "An Interview with Julia Butterfly Hill: Part 1" The Edge 26 May 2005 [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியா_பட்டர்பிளை_ஹில்&oldid=3603056" இலிருந்து மீள்விக்கப்பட்டது