ஜேம்சு பால்க்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்சு பால்க்னர்
James Faulkner
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேம்சு பீட்டர் பால்க்னர்
பிறப்பு29 ஏப்ரல் 1990 (1990-04-29) (அகவை 33)
லான்செசுடன், தாசுமேனியா, ஆத்திரேலியா
பட்டப்பெயர்தெ ஃபினிஷர்
உயரம்186 செமீ (6 அடி 1 அங்)[1]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை விரைவு-மிதம்
பங்குபல்-துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 435)21 ஆகத்து 2013 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 202)1 பெப்ரவரி 2013 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப18 சனவரி 2015 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்44
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008–தாசுமேனியா
2011புனே வாரியர்சு
2011–மெல்பேர்ண் ஸ்டார்சு
2012கிங்சு இலெவன் பஞ்சாபு
2013–ராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநா முத பஅ
ஆட்டங்கள் 1 38 45 71
ஓட்டங்கள் 45 770 1,787 1,348
மட்டையாட்ட சராசரி 22.50 48.12 31.91 38.51
100கள்/50கள் 0/0 1/4 0/12 1/9
அதியுயர் ஓட்டம் 23 116 94 116
வீசிய பந்துகள் 166 1,721 7,139 3,383
வீழ்த்தல்கள் 6 50 147 97
பந்துவீச்சு சராசரி 16.33 32.36 24.06 31.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 4 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/51 4/48 5/5 4/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 11/– 22/– 20/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, பெப்ரவரி 2 2015

ஜேம்சு பீட்டர் பால்க்னர் (James Peter Faulkner, பிறப்பு: 29 ஏப்ரல் 1990[2]) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். தாசுமானிய மாநில அணிக்காக விளையாடி வருகிறார். பல்துறை வீரரான இவர் இடக்கை விரைவு-மிதப் பந்துவீச்சாளரும், வலது கை மட்டையாளர் ஆவார். பால்க்னர் தனது முதலாவது பன்னாட்டு இருபது20 போட்டியை 2012 பெப்ரவரி 1 இல் ஆத்திரேலிய அணிக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடினார்.[3]

இவர் 2011 இல் இந்தியன் பிரீமியர் லீக்கின் புனே வாரியர்சு இந்தியா அணியிலும், 2012 இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணியிலும் விளையாடினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 400,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. .[4]

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் புனே வாரியர்சு இந்தியா அணிக்காக விளையாடிய இவர் 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார்.இந்தத் தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 72 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சிறந்த பந்துவீச்சு 2/41 ஆகும். இவரின் சராசரி இந்தத் தொடரில் 24. 00 ஆக இருந்தது. 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை 400,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்[5]. இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 427 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 28 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சிறந்த பந்துவீச்சு 5/16ஆகும். இவரின் சராசரி இந்தத் தொடரில்15.25 ஆக இருந்தது[6]. 2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் 26 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியிலும் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[5][7] இந்தத் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 426 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சிறந்த பந்துவீச்சு 3/26 ஆகும். இவரின் சராசரி இந்தத் தொடரில் 53.25 ஆக இருந்தது.[6]

சர்வதேச போட்டிகள்[தொகு]

பெப்ரவரி 1, 2012 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[8] துவக்கத்தில் இடது கை சுழற்பந்துவீச்சாளராக அறிமுகமானார். தற்போது யார்க்கர் அளவில் கூக்ளி பந்துவீசுவதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[9][10] 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம்பிடித்தார். அந்தத் தொடரின் ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[11] 2013 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் தொடரில் விளையாடிய அனைத்து தொடரிலும் இவருக்கு நிலையான இடம் கிடைத்தது. இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 29 பந்துகளில் 64 ஓட்டங்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் இஷாந்த் ஷர்மா வீசிய ஒரு ஓவரில் 30 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிகு உதவினார்.[12] நவம்பர் 2, 2013 பெங்களூருவில் நடைபெற்ற இதே அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் போட்டி நூறினைப் பதிவு செய்தார். இவர் 57 பந்துகளில் 116 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் விரைவாக நூறு ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது ஆத்திரேலிய வீரர் எனும் சாதனை படைத்தார். இதில் 4 ஆறுகளும், 11 நான்குகளும் அடங்கும்.இதற்கு முன்னதாக மார்ச் 8, 2013 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக கிளென் மாக்சுவெல் 51 பந்துகளில் 102 ஓட்டங்கள் எடுத்ததே முதல் இடத்தில் உள்ளது.[13][14] 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் பொட்டியில் 36 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "James Faulkner". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
  2. "James Faulkner". Espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  3. "Australia v India scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Vijay Lokapally (2013-03-30). "Rajasthan Royals believes in collective performance". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2013-08-21.
  5. 5.0 5.1 "James Faulkner (cricketer)", Wikipedia (in ஆங்கிலம்), 2018-05-10, பார்க்கப்பட்ட நாள் 2018-05-19
  6. 6.0 6.1 "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), archived from the original on 2019-04-22, பார்க்கப்பட்ட நாள் 2018-05-19
  7. Vijay Lokapally (2013-03-30). "Rajasthan Royals believes in collective performance". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-08-21.
  8. "Australia v India scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 1 February 2012.
  9. Faulkner, Maxwell turn into each other
  10. James Faulkner, the Best Slower in modern day cricket
  11. "The Ashes 2013 : Chris Rogers and James Faulkner in Ashes squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  12. Australia steal win with Faulkner blitz
  13. "India edge sixathon with Rohit Sharma's 209", Cricinfo (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-19
  14. "Records | One-Day Internationals | Batting records | Fastest hundreds | ESPNcricinfo", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_பால்க்னர்&oldid=3573376" இலிருந்து மீள்விக்கப்பட்டது