தமிழ்ப் பழமொழிகள் தொகுதி 1 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் பழமொழிகள், தொகுதி 1 கி. வா. ஜகந்நாதன் (1906-1988) தொகுத்த நூல் [1] ஆகும்.

பதிப்பு விவரங்கள்[தொகு]

நூலின் பதிப்பாளர் ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை. இந்நூலின் முதற் பதிப்பு 2001 இலும், இரண்டாம் பதிப்பு 2006 இலும் வெளி வந்தது.

நூலின் முகவுரைச் செய்திகள்[தொகு]

இந்த நூலிலுள்ளப் பழமொழிகளை 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்ததாக நூலாசிரியர் கூறுகின்றார். இந்நூலின் முகவுரையில் பழமொழியின் பண்புகள் குறித்து நூலாசிரியர் விவரித்துள்ளார்.

நூற்குறிப்பு[தொகு]

தமிழ்ப் பழமொழிகள் என்னும் இத்தொகுப்பில் 5837 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். இத்தொகுப்பிலுள்ள பல பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் பழமொழிகள் அகர வரிசைப்படி தொகுத்து அளிக்கப் பெற்றுள்ளன. இந்நூலில் அ முதல் ஐ வரையிலான பழமொழிகள் தொகுக்கப் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் உள்ளவை பனுவல் பழமொழிகள் ஆகும். பனுவல் பழமொழிகள் என்பன யார் கூறினார், அவை எந்தப் பொருண்மையில் பயன்படுத்தப் பெறுகின்றன என்னும் குறிப்புகளைக் கொண்டிராதப் பழமொழிகள் ஆகும். இந்நூல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பெற்ற நூல் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்ப் பழமொழிகள், 2001, கி. வா. ஜகந்நாதன், சென்னை: ஜெனரல் பப்ளிஷர்ஸ்