மத்திய மலாக்கா மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°15′N 102°15′E / 2.250°N 102.250°E / 2.250; 102.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மத்திய மலாக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மத்திய மலாக்கா மாவட்டம்
Melaka Tengah District
மலாக்கா
Location of மத்திய மலாக்கா மாவட்டம்
Map
மத்திய மலாக்கா மாவட்டம் is located in மலேசியா
மத்திய மலாக்கா மாவட்டம்
      மத்திய மலாக்கா மாவட்டம்
ஆள்கூறுகள்: 2°15′N 102°15′E / 2.250°N 102.250°E / 2.250; 102.250
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்மத்திய மலாக்கா
தொகுதிமலாக்கா மாநகரம்
உள்ளூராட்சிகள்மலாக்கா மாநகர் மன்றம்
(தென் மத்திய மலாக்கா)
ஆங் துவா ஜெயா நகராட்சி மன்றம்
(வடக்கு மத்திய மலாக்கா)
அரசு
 • மாவட்ட அதிகாரிசம்சுல் அம்பியா அசீஸ் [2]
பரப்பளவு[3]
 • மொத்தம்314 km2 (121 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்5,03,127[1]
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு75xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
போக்குவரத்துப் பதிவெண்M
இணையதளம்மத்திய மலாக்கா மாவட்டம்

மத்திய மலாக்கா மாவட்டம் (மலாய்: Daerah Melaka Tengah; ஆங்கிலம்: Melaka Tengah District; சீனம்: 马六甲中央县); மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம், மலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தின் கிழக்கே ஜாசின் மாவட்டம்; வடக்கே அலோர் காஜா மாவட்டம்; ஆகியவை இணை மாவட்டங்களாக உள்ளன. மத்திய மலாக்கா மாவட்டத்தின் தலைநகரம் மலாக்கா மாநகரம்.

இந்த மாவட்டத்தை இரு நகராண்மைக் கழகங்கள் நிர்வாகம் செய்கின்றன. வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் (Historical Malacca City Council, மலாய் மொழி: Majlis Bandaraya Melaka Bersejarah (MBMB);[4] ஆங் துவா ஜெயா நகராண்மைக் கழகம் (Hang Tuah Jaya Municipal Council, மலாய் மொழி: Majlis Perbandaran Hang Tuah Jaya (MPHTJ)[5] ஆகியவையே அந்த இரு கழகங்கள்.

1977-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் (Historical Melaka City Municipal Council (MPMBB), 15 ஏப்ரல் 2003-இல் மலாக்கா மாநகராண்மைக் கழகம் என்று பெயர் மாற்றம் கண்டது. பின்னர், 1 ஜனவரி 2010-இல், மேலும் தனி ஒரு நகராண்மைக் கழகம் இணைக்கப்பட்டது. அதன் பெயர் ஆங் துவா ஜெயா நகராண்மைக் கழகம்.

இந்த மாவட்டம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடமாகத் திகழ்கின்றது. ஏனெனில் பெரும்பாலான வரலாற்று இடங்கள் இந்த மாவட்டத்திற்குள் தான் அமைந்து உள்ளன.[6]

வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம்[தொகு]

தற்சமயம், மத்திய மலாக்கா மாவட்டத்தில், வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் 30.86 ச.கி.மீ. பரப்பளவை நிர்வாகம் செய்கிறது. ஆங் துவா ஜெயா நகராண்மைக் கழகம் 57.66 ச.கி.மீ. பரப்பளவை நிர்வாகம் செய்கிறது.

மலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில், இந்த மத்திய மலாக்கா மாவட்டம்தான் மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. மாநிலத்தின் தலைநகரம் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில், சுற்றுப்பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களும் நிறைய உள்ளன.

துணை மாவட்டங்கள்[தொகு]

மத்திய மலாக்கா மாவட்டத்தில் 40 துணை மாவட்டங்கள் அல்லது முக்கிம்கள் (Mukims) உள்ளன. மலேசியாவில் ஒரு முக்கிம் என்றால் ஒரு துணை மாவட்டம் அல்லது ஒரு துணை மாவட்டத்தில் மற்றொரு துணை மாவட்டத்தைக் குறிப்பதாக அமையும்.[7]

  1. ஆலாய்
  2. ஆயர் மோலேக்
  3. பாச்சாங்
  4. பாலாய் பாஞ்சாங்
  5. பத்து பிரண்டாம்
  6. பெர்த்தாம்
  7. புக்கிட் பாரு
  8. புக்கிட் கட்டில்
  9. புக்கிட் லிந்தாங்
  10. புக்கிட் பியாத்து
  11. புக்கிட் ரம்பாய்
  12. செங்
  13. டூயோங்
  14. உஜோங் பாசிர்
  15. காண்டாங்
  16. கிளேபாங் பெசார்
  17. கிளேபாங் கெச்சில்
  18. குருபோங்
  19. பாடாங் செமாபோக்
  20. பாடாங் தெமு
  21. பாயா ரும்புட்
  22. பிரிங்கிட்
  23. பெர்னு
  24. செமாபோக்
  25. சுங்கை ஊடாங்
  26. தாங்கா பத்து
  27. தஞ்சோங் கிளிங்
  28. தஞ்சோங் மின்யாக்
  29. தெலுக் மாஸ்
  30. பண்டார் புக்கிட் பாரு
  31. பண்டார் மலாக்கா
  32. பெக்கான் ஆயர் மோலேக்
  33. பெக்கான் பத்து பிரண்டாம்
  34. பெக்கான் புக்கிட் ரம்பாய்
  35. பெக்கான் கண்டாங்
  36. பெக்கான் கிளேபாங்
  37. பெக்கான் பாயா ரும்புட்
  38. பெக்கான் சுங்கை ஊடாங்
  39. பெக்கான் தாங்கா பத்து
  40. பெக்கான் தஞ்சோங் கிளிங்

மக்கள் தொகையியல்[தொகு]

மத்திய மலாக்கா மாவட்டத்தின் மக்கள் தொகை 503,000.

மலாய்க்காரர்கள்: 303,000 - (58%)
சீனர்கள்: 169,000 - (32%)
இந்தியர்கள்: 22,000 - (4%)
மற்ற இனத்தவர்கள்: (6%)

பொருளாதாரம்[தொகு]

தாமான் தாசேக் உத்தாமா தொழில் துறை வளாகம்

மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரத் துறை தொழில் துறையாகும். மத்திய மலாக்கா மாவட்டத்தில் மொத்தம் 1,309 எக்டர் பரப்பளவில் பத்து தொழில்துறை பகுதிகள் உள்ளன.

மாவட்டத்தின் இரண்டாவது மிக முக்கியமான பொருளாதாரத் துறை சுற்றுலாத் துறை ஆகும். இந்த மாவட்டத்தில் உள்ள மலாக்கா நகரம், ஆயர் குரோ மற்றும் புலாவ் பெசார் தீவு ஆகிய இடங்கள் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

மூன்றாவதாக மிக முக்கியமான பொருளாதாரத் துறை விவசாயம் ஆகும், மத்திய மலாக்கா பகுதியில் 55% ரப்பர் தோட்டங்கள்; எண்ணெய்ப் பனை தோட்டங்கள் ஆகும். மற்றும் நெல் உற்பத்தியும் கணிசமாக உள்ளது.

மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலாக்கா; மத்திய மலாக்கா மாவட்டத்தில் (Central Melaka District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 628 மாணவர்கள் பயில்கிறார்கள். 79 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[8]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
MBD2083 மலாக்கா SJK(T) Melaka (Kubu)[9] மலாக்கா தமிழ்ப்பள்ளி (கூபு) 75300 மலாக்கா 373 44
MBD2084 ஆயர் மோலெக் SJK(T) Bukit Lintang[10] புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி 75460 மலாக்கா 85 17
MBD2085 பாயா ரும்புட்[11] SJK(T) Paya Rumput பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி 76450 மலாக்கா 170 18

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.dosm.gov.my/v1/uploads/files/6_Newsletter/Newsletter%202020/DOSM_DOSM_MELAKA_1_2020_Siri-81.pdf
  2. (email@dotdot.my), Dot Dot Holdings Sdn Bhd. "Pejabat Daerah dan Tanah Melaka Tengah : Direktori Pegawai". Pejabat Daerah dan Tanah Melaka Tengah : Direktori Pegawai.
  3. (email@dotdot.my), Dot Dot Holdings Sdn Bhd. "Pejabat Daerah dan Tanah Melaka Tengah : Profil Daerah". Pejabat Daerah dan Tanah Melaka Tengah : Profil Daerah.
  4. "On 1st January 2010, another Local authority was established called Majlis Perbandaran Hang Tuah Jaya (MPHTJ). The history of Melaka Historic City Council (MBMB) is closely related to Melaka history". Archived from the original on 2014-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-01-07.
  5. "Hang Tuah Jaya Municipal Council was established to plan, develop and provide municipal services Green Technology City concept in line with the set vision and mission". Archived from the original on 2015-02-10. பார்க்கப்பட்ட நாள் 2015-01-07.
  6. http://www.pdtmt.gov.my/index.php/orang-awam/profil-daerah-1
  7. Mukim is a geographical division used in Malaysia. It is losely translated as sub-district nowadays, as mukims are a level below daerah (district) which itself is one level below negeri (state).
  8. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  9. "மலாக்கா தமிழ்ப்பள்ளி (கூபு)". maxeprogram (in ஆங்கிலம்). 13 December 2011. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  10. "புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி - SJK(T) Bukit Lintang, Melaka". bukitlintangtamilschool.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  11. Melaka, Ppki Sjkt Paya Rumput (18 April 2019). "பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி - MINGGU BAHASA TAMIL PERINGKAT SEKOLAH". PPKI SJKT PAYA RUMPUT, MELAKA. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_மலாக்கா_மாவட்டம்&oldid=3883558" இலிருந்து மீள்விக்கப்பட்டது