புபொப 78

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 78

புபொப 78 (NGC 78) எனப் புதிய பொதுப் பட்டியலில் பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சோடி விண்மீன் பேரடைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பேரைடகள் இரண்டும் வானத்தில் அருகருகே தோன்றுகின்றன. அனேகமாக அவை ஒன்றுக்கொன்று அவற்றின் குறிப்பிடத்தக்க ஈர்ப்பு விசைகளின் பாதிப்பின்றி வெகுதொலைவில்தான் இருக்க வேண்டும். புபொப 78 அ என்பது ஒரு சுருள் வடிவ அண்டம் என்றும் அது சுமார் 225 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல புபொ 78 ஆ என்பது ஒரு ஒடுக்க உருவ அண்டம் என்றும் அது சுமார் 245 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் கருதப்படுகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NGC Objects: NGC 50 - 99".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_78&oldid=3191817" இலிருந்து மீள்விக்கப்பட்டது