இணையச்சு விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலைமத் திருப்புத்திறன் அல்லது சடத்துவச் சுழல்திறன் பற்றிய இணையச்சு விதி (Law of parallel axis of moment of inertia ) என்பது M நிறையுடை ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் வழியாகச் செல்லும் அச்சில், அதன் நிலைமத் திருப்புத்திறன் I என்றால், அவ்வச்சிற்கு இணையானதும் a தொலைவில் இருப்பதுமான மற்றொரு அச்சில் அதன் நிலைமத் திருப்புத்திறன் = I + M a2. இது ஐகன்சு-இசுடைனர் தேற்றம் அல்லது இசுடைனர் தேற்றம் எனவும் அழைக்கப்படுகின்றது.[1][2][3]

இங்கு C என்பது கொடுக்கப்பட்டுள்ள பொருளின் நிறை மையம், Z' என்பது பொருளிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ உள்ள ஒரு அச்சு; Z என்பது Z' அச்சிற்கு இணையாகவுள்ள நிறை மையம் வழியே பாயும் அச்சு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Arthur Erich Haas (1928), Introduction to theoretical physics
  2. Paul, Burton (1979), Kinematics and Dynamics of Planar Machinery, Prentice Hall, ISBN 978-0-13-516062-6
  3. Kane, T. R.; Levinson, D. A. (2005), Dynamics, Theory and Applications, McGraw-Hill, New York
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையச்சு_விதி&oldid=3768894" இலிருந்து மீள்விக்கப்பட்டது