பகுப்பு பேச்சு:விக்கித்தரவில்லாதவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிற மொழிக் கட்டுரைகளின் இணைப்பில்லாத கட்டுரைகளின் பட்டியல் என்ற சிறப்புப் பக்கம் உள்ளது. இதில் 5000 வரையிலான கட்டுரைகள் இருக்கும். அதைக் கொண்டே இணைப்பில்லாதவற்றுக்கு இணைப்பை ஏற்படுத்தலாம். இந்தப் பகுப்பின் பயன் என்ன? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:31, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தமிழில் மட்டுமே இருக்கக்கூடியதெனக் கருதப்படும் கட்டுரைகளை விக்கித் தரவில் சேர்க்க வேண்டியதில்லை. ஏனையவை இனங்காணப்பட்டு சேர்க்கப்பட வேண்டும். நினைவூட்டுவதற்காகவே வார்ப்புரு கட்டுரைகளின் ஆரம்பத்தில் சேர்க்கப்படுகிறது. இணைப்புகளை ஏற்படுத்தியவர்கள் வார்ப்புருவையும் அகற்ற வேண்டும் இப்பகுப்பு எப்போதும் வெறுமையாகவே இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம்.--Kanags \உரையாடுக 20:17, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கித்தரவில் இணைப்பது எப்படி?[தொகு]

இப்பகுப்பில் எப்பொழுதும் வெற்றாகவே இருக்க வேண்டும் என்று மூத்த பங்களிப்பாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கித்தரவில் எப்படி இணைக்க வேண்டும்? வழிகாட்டல்தரப்பட்டால், அப்பங்களிப்பைச் செய்கிறேன்.--உழவன் (உரை) 05:48, 7 பெப்ரவரி 2017 (UTC)

//தமிழில் மட்டுமே இருக்கக்கூடியதெனக் கருதப்படும் கட்டுரைகளை விக்கித் தரவில் சேர்க்க வேண்டியதில்லை.// என நான் மேலே கூறியதில் சிறு திருத்தம். அவையும் விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் பொதுவாக கட்டுரைகள் உருவாக்கப்பட்டு சில நாட்களில் விக்கித்தரவில் உலாவும் தானியங்கிகள் இந்த வேலையைச் செய்யும். ஆனால், ஆங்கிலக் கட்டுரைகள் இருக்கும் போது, அவற்றை முறைப்படி ஆங்கிலக் கட்டுரைக்கான விக்கித்தரவில் கட்டுரை எழுதியவரே தான் இணைக்க வேண்டும். சில நாட்கள் இணைக்காது விட்டுவைத்தால், தானியங்கி அவற்றுக்குப் புதிய விக்கித்தரவு இலக்கத்தைத் தரும். ஆங்கிலக் கட்டுரைக்கு தானியங்கி இணைக்காது. //விக்கித்தரவில் எவ்வாறு இணைப்பது?// புதிய இலக்கம் தருவது எவ்வாறு எனக் கேட்கிறீர்களா? அல்லது, ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு எவ்வாறு இணைப்பது எனக் கேட்கிறீர்களா?--Kanags \உரையாடுக 07:33, 7 பெப்ரவரி 2017 (UTC)
துணையினம் என்ற கட்டுரையைத் துவங்கியிருக்கிறீர்கள். ஆனால், அதனை நீங்கள் Subspecies என்ற ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு இணைக்கவில்லை. இதனால், என்ன பிரச்சினை. வேறு ஒரு பயனர் துணை இனங்கள் என்ற தலைப்பிலோ அல்லது வேறு ஒரு பொருத்தமான தலைப்பிலோ வேறு ஒரு கட்டுரை தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனை ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு இணைப்பது வெகு இலகு. Add Links என்பதைத் தெரிந்தெடுத்து, enwiki, Subspecies என எழுதி சேமிக்கலாம். விக்கிப்பீடியா:விக்கித்தரவு பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.--Kanags \உரையாடுக 07:41, 7 பெப்ரவரி 2017 (UTC)

@Kanags:நன்றி கனகு! ஆனால், விக்கித்தரவில் புதிதாக ஒரு தமிழ் கட்டுரையை உருவாக்குவது பற்றிய வழிகாட்டுதல் தேவை. --உழவன் (உரை) 05:55, 8 பெப்ரவரி 2017 (UTC)

இதனைத் தானியங்கிகளே செய்யும்.--Kanags \உரையாடுக 06:49, 16 பெப்ரவரி 2017 (UTC)
விக்கித்தரவிற்குச் சென்று அங்கு Create a new item என்பதைத் தேர்ந்தெடுங்கள்.--Kanags \உரையாடுக 09:56, 16 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவில் இணக்கப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு அறிவது?[தொகு]

கட்டுரைப்பக்கத்தின் இடப்பக்கத்தில் உள்ளது.

ஒரு கட்டுரை விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு அறிவது? ஒரு கட்டுரையின் இடப்பக்கம் உள்ள கருவிப்பெட்டியில் விக்கித்தரவுஉருப்படி என்பது தெரிந்தால் அது விக்கித்தரவில் இணைக்கப்படுள்ளது என்பதை அறியலாம். அதனைச் சொடுக்குவதன் மூலம் அதன் விக்கித்தரவுப் பக்கத்துக்குச் செல்ல முடியும். விக்கித்தரவுஉருப்படி என்ற கருவி தெரியாவிட்டால் அக்கட்டுரை இன்னமும் விக்கித்தரவில் இணைக்கப்படவில்லை என்பதை அறியலாம்.--Kanags \உரையாடுக 07:47, 16 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவுஉருப்படி என்ற தொடுப்பு கருவிப்பட்டையில் அமைந்துள்ளதை படத்துடன் விளக்கியம்மைக்கு மிக்க நன்றி. இப்பகுப்பில், இன்றுவரையுள்ள அனைத்து கட்டுரைகளையும் சரிபார்த்து விட்டேன். --உழவன் (உரை) 12:41, 16 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவு திட்டத்தில் பங்களிப்பது குறித்த நிகழ்பட வழிகாட்டுதல்கள்[தொகு]

நமது விக்கிப்பீடியாத்திட்டத்தில் பங்களிப்பு அதிகம் செய்து, முதல் இடத்தில் தற்போது இருக்கும் @Kanags:, என்னுடைய பக்கத்தில் தொடர்ந்து உரையாடி நேற்று விளக்கம் அளித்தார். அதனால் ஏற்பட்ட தெளிவு, பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், பின்வரும் நிகழ்பட பாடங்களைத் தொடங்கியுள்ளேன்.

இவற்றைக் காண்பவர் நுட்ப அளவில் இவற்றைவிட மேம்பட்ட நிகழ்பட பாடங்களை எதிர்காலத்தில் உருவாக்குவர் என்று திண்ணமாகிறேன். இருப்பினும், உங்கள் பின்னூட்டங்களை எதிர்நோக்குகிறேன். ஆவலுடன்.. வணக்கம்.--உழவன் (உரை) 02:18, 17 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவில்லாததை கண்டறிவதற்கான நிரலாக்கம்[தொகு]

முதற்கட்டமாக, விக்கித்தரவில்லாததை கண்டறிவதற்கான நிரலாக்கத்தை இன்று 6,7 மணி நேர ஈடுபாட்டிற்கு பின், எழுதி முடித்துள்ளேன். இது பைத்தான்3 கட்டகத்தில் அமைந்த பியூட்டிபுல் ஆகும். வழங்கியின் பணியடர்வு (server load)அதிகமாகமல் இருப்பதற்கான நுட்பத்தை அமைப்பதில் சிக்கல் வந்துள்ளது. சீனியை வழிகாட்டக் கோரியுள்ளேன். இங்கிருந்து 30நொடிகளுக்கு ஒரு விக்கித்தரவு இணைப்பில்லா கட்டுரையில் {{Nowikidatalink}} என்ற வார்ப்புருவை முதல் வரியாக இடும். ஏற்கனவே உள்ளவாக்கியங்கள், இரண்டாம் வரியிலிருந்து தொடங்கும். அனைத்து நிரலாக்க மேம்பாட்டு பணியும் முடிந்த பிறகு, ஆவணப்படுத்துகிறேன். இறுதிக்கட்டமாக, இதிலிருந்து தலைப்புகளை விக்கிதரவிற்கு எடுத்துச்சென்று, அங்கும் அது உருவாக்கப்படவில்லையெனில், தலைப்புக்கு உருப்படி எண்ணைப் பெற்று பங்களிப்பு செய்யும் வண்ணம் செய்ய உள்ளேன். பைத்தான்3 அனுபவம் உள்ளவர் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறு கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 16:46, 17 பெப்ரவரி 2017 (UTC)

தயவு செய்து இந்த வார்ப்புருவின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்கெனவே இதுபற்றி குறிப்பிட்டும் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. பல கட்டுரைகளுக்கு இதை தேவையில்லாமல் இணைந்து வருகிறீர்கள். இதற்கு தானியங்கி தேவையில்லை. அது முற்றிலும் பயனுள்ளதாக இருக்காது. --AntanO 19:38, 17 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags: // பல கட்டுரைகளுக்கு இதை தேவையில்லாமல் இணைந்து வருகிறீர்கள். இதற்கு தானியங்கி தேவையில்லை. அது முற்றிலும் பயனுள்ளதாக இருக்காது// என்பதுவும், திரினிப்பழம் என்பதனை மீண்டும் இட்டுள்ளார்? என்பதுவும், எப்படி சரி? --உழவன் (உரை) 01:18, 18 பெப்ரவரி 2017 (UTC)
தேவையற்ற தொகுத்தல் போரில்] மாறி மாறி ஈடுபடுவது நல்லதல்ல. அந்தக் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் பேசித் தீர்க்கலாம். திரினிப்பழத்தின் உயிரியல் பெயரில் விக்கித்தரவில் எண் இருக்கலாம் என அன்ரன் நினைக்கிறார் போல் தெரிகிறது. எனக்கு அது பற்றித் தெரியாது. விக்கித்தரவில் தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கு எனத் தனிப்பட்ட நூற்றுக்கணக்கான எண்களை அவற்றின் ஆங்கில விக்கிக் கட்டுரைகளை (குறிப்பாகப் பகுப்புகளை) இனங்கண்டு அவற்றை merge பண்ணியிருக்கிறேன். அது இருக்க, நீங்கள் குறிப்பிட்டவாறு இணைக்கப்படாத கட்டுரைகளை இனங்கண்டு தானியங்கி மூலம் வார்ப்புரு இடப்பட்டால், அவற்றுக்குப் பின்னர் தகுந்த விக்கித்தரவு எண்ணை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து மாற்றுவதற்கு இலகுவாக இருக்கும் என்றே நானும் நினைக்கிறேன். விக்கித்தரவில் இணைப்பதற்கு வேறு வழிகள் உண்டென்றால் அன்ரன் கூறலாம்.--Kanags \உரையாடுக 01:51, 18 பெப்ரவரி 2017 (UTC)
தெளிவுபட தொடர்ந்து வழிகாட்டுகின்றமைக்கு, உளமார்ந்த நன்றி.கனகு! எனது பங்களிப்புகளால், விக்கித்திட்ட வளர்ச்சிக்கு ஏதேனும் இடர் ஏற்படுமாயின் அதனை எவர் வேண்டுமானாலும் சுட்டலாம். அச்சுட்டலை, அப்பொழுதே மாற்றிக் கொள்வேன். ஆனால், நான் என்னென்ன செய்யலாம்; செய்யக்கூடாது என்பதை, பிறர் முடிவு செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.--உழவன் (உரை) 03:08, 18 பெப்ரவரி 2017 (UTC)
உண்மைதான், அது தேவையற்ற தொகுத்தற் போர். தற்போது குறிப்பிட்ட பயனரின் பேச்சுப்பக்கத்தில் வினவியுள்ளேன். பிற மொழி இணைப்பற்ற பக்கங்கள் மூலமும் சில பக்கங்களைக் கண்டு கொள்ளலாம். தானியங்கி மூலம் இணைக்கலாம் ஆனால் அது சரியாதாக இருக்குமா? [எ.கா: போத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல், போர்த்துக்கேயரின் முதலாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு ஆகிய கட்டுரைகள் மட்டில் தானியங்கி எவ்வாறு இயங்கும்? இரண்டும் விக்கித்தரவில் உள்ளன.] //விக்கித்திட்ட வளர்ச்சிக்கு ஏதேனும் இடர் ஏற்படுமாயின் அதனை எவர் வேண்டுமானாலும் சுட்டலாம். அச்சுட்டலை, அப்பொழுதே மாற்றிக் கொள்வேன். ஆனால், நான் என்னென்ன செய்யலாம்; செய்யக்கூடாது என்பதை, பிறர் முடிவு செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.// முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள். --AntanO 09:53, 18 பெப்ரவரி 2017 (UTC)
பிற மொழி இணைப்பற்ற பக்கங்கள் இல் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் உள்ளன. இவற்றில் விக்கித்தரவில் இணைக்கப்படாத கட்டுரைகளை இனங்கண்டு அவற்றிற்கு வார்ப்புரு இடுவதே தானியங்கியின் வேலையாக இருக்கும். எனவே அன்ரன் குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இடப்பட மாட்டாது. User:Info-farmer: எனது புரிதல் சரி தானா?--Kanags \உரையாடுக 10:05, 18 பெப்ரவரி 2017 (UTC)
கனகு! உங்களது புரிதல் சரியே.AntanO என்னை நிரலாக்கம் வழி வார்ப்புரு இட வேண்டாம் என்கிறார். மற்றொன்று விக்கிஉருப்படி உள்ள திரினி பழத்தில் வார்ப்புரு இடுகிறார். இரண்டில்(வார்ப்புரு இடல், வார்ப்புரு நீக்குதல்) ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு உரையாடுவோம். எச் செயல் திட்ட முன்னேற்றத்திகு உதவும். எனது பேச்சுப்பக்கத்தில் உரையாடுவதை நான் விரும்பவில்லை. வார்ப்புரு இடுதல் எனது தொடக்கப் பணியே, அதன் இறுதி இலக்கை, விக்கித்தரவில் அதிக பங்களிப்புகளை செய்த பாலாஜியிடம் தான் கற்க விரும்பபியுள்ளேன். --உழவன் (உரை) 10:54, 18 பெப்ரவரி 2017 (UTC)
@Info-farmer:, Pages not connected to items இல் விக்கித்தரவில் இணைக்கப்படாத கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுகிறது. எனவே வார்ப்புரு இணைப்பது அவசியமாக நான் கருதவில்லை. இந்தப் பட்டியலை சிறப்புப் பக்கங்களில் இணைக்க முடியுமா? எவ்வாறு இணைப்பது? @Shanmugamp7 and AntanO:--Kanags \உரையாடுக 11:17, 18 பெப்ரவரி 2017 (UTC)
அருமை. புதிய கண்டுபிடிப்பு ஊக்கம் அளிக்கிறது. அறியாமையை நீக்கியமைக்கும், என் நேரத்தினைக் காத்தமைகும் உளமார்ந்த நன்றிகள். கனகு!. --உழவன் (உரை) 11:51, 18 பெப்ரவரி 2017 (UTC)
இந்த வார்ப்புரு சடைக்கார் (நெல்) போன்ற இங்கு மட்டும் இருக்கும் கட்டுரைகளுக்கு ஏற்புடையதல்ல. ஆனால், துருவங்கள் பதினாறு கட்டுரைக்கு ஏற்றது. --AntanO 12:05, 18 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags: ஏற்கனவே சிறப்பு:UnconnectedPages சிறப்பு:WithoutInterwiki ஆகிய இரண்டு பக்கங்களும் சிறப்புப் பக்கங்களில் உள்ளது. இவ்வார்ப்புரு இணைப்பது தேவையற்ற இரட்டை வேலை என்றே கருதுகிறேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 15:26, 18 பெப்ரவரி 2017 (UTC)
நன்றி சண்முகம், தொடக்கத்திலேயே இருப்பதைக் கவனிக்கவில்லை:)--Kanags \உரையாடுக 22:36, 18 பெப்ரவரி 2017 (UTC)
@Shanmugamp7 and Kanags: நீங்கள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றுவேன். மிக்க நன்றி. இறுதியாக ஒரு ஐயம். விக்கித்தரவில் ஒரு கட்டுரைக்கான உருப்படி இருக்கும் போது, அக்கட்டுரையில் விக்கிதரவில்லாதவை என்ற வார்ப்புரு இருக்கிறது. அது பொருத்தமற்றது என்பதால், அதனை (Special:diff/2187979) நீக்கினேன். ஆனால், அது மீண்டும் இடப்பட்டுள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்.? நீங்கள் காட்டும் வழிமுறையை அனைவருக்கும் அறிமுகப் படுத்துவேன். நானும் பின்பற்றுவேன். ஆவலுடன் ..--உழவன் (உரை) 03:51, 19 பெப்ரவரி 2017 (UTC)
அக்கட்டுரையில் வார்ப்புரு சேர்க்கப்பட்டதற்கான காரணம் சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை என்பதாக இருக்கலாம். திரினிப்பழம் குறித்த ஆங்கில/பிறமொழி கட்டுரை விக்கித்தரவு உருப்படியுடன் இணைக்காமல் தமிழ் இணைப்பிற்கு மட்டும் ஒரு விக்கித்தரவு உருப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது.--சண்முகம்ப7 (பேச்சு) 04:02, 19 பெப்ரவரி 2017 (UTC)
சரி. ஆன்டனிடம் மேலதிக விவரம் கேட்கிறேன்.--உழவன் (உரை) 04:24, 19 பெப்ரவரி 2017 (UTC)
@AntanO:! திரினிப்பழம் என்பதில் விக்கித்தரவு உருப்படியை விக்கித்தரவுத் தானியங்கி உருவாக்கியுள்ளது. அது தவறு எனில், எங்கு தெரிவிக்க வேண்டும். சரி எனில் விக்கிதரவில்லாதவை என்ற வார்ப்புருவை, ஏன் அக்கட்டுரையில் நாம் பேண வேண்டும். உங்களின் விளக்கம் எனக்கு நல்ல வழிகாட்டுதலாக அமையுமென எதிர்நோக்குகிறேன்.--உழவன் (உரை) 04:24, 19 பெப்ரவரி 2017 (UTC)
உங்கள் பேச்சுப்பக்கத்தில் கேட்டதையே இங்கும் கேட்கிறேன். திரினிப்பழ மரத்தின் அறிவியல் பெயரைக் குறிப்பிடுங்கள் அப்போது மேலதிக கருத்தைத் தெரிவிக்க எனக்கு உதவியாக இருக்கும். --AntanO 04:28, 19 பெப்ரவரி 2017 (UTC)
தெரியவில்லை நண்பரே. அதனால் தான் வினவினேன். அப்பெயரை இங்குதான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். பல தாவரவியல் பெயர்களை என்னால் ஆதாரத்துடன் விளக்க முடியவில்லை. ஒரு தாவரவியல் கட்டுரை எழுத எனக்கு 15-20 நிமிடங்கள் போதும். ஆனால், அதன் தமிழ் தலைப்பை அல்லது தாவரவியல் பெயரைத்தேட சில மணி நேரம் ஆகிறது. சிறியா நங்கை, பெரியா நங்கை போன்ற கட்டுரைகளைக் கூறலாம். சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான் எனக்கு உடன் பாடு இல்லையென்றாலும், உரையாடற் பக்கம் வளராமல் இருக்க, அகான்தசு மோலிசு என்று எழுதத் தொடங்கியுள்ளேன். தாவரவியல் பெயர்களை அப்படியே எழுதும் நடைமுறை தான் பல மொழிவிக்கிச்சமூக்கங்களிலும் உள்ளது. அப்பொழுது தான் தேடியவர்களுக்கு கிடைக்கும். பிறமொழிகளில் ஒலிபெயர்ப்பு செய்வதில்லை. பல கட்டுரைகளில் விக்கிதரவில்லாதவை என்ற வார்ப்புருவை நீக்க விரும்புகிறேன். அதனால் தான் வினவுகிறேன்.உங்களுக்கு ஆங்கிலப் பெயர் தெரிந்தால் கூறுங்கள். .--உழவன் (உரை) 12:15, 19 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவில்லாதவை வார்ப்புருவினை எப்படி நீக்க வேண்டும்?[தொகு]

@AntanO: திரினிப் பழத்தின் தாவரவியல் பெயரை வினவியிருந்தீர்கள். அதுபற்றி தெரியவில்லை. அறிந்ததும் தெரிவிக்கிறேன். காட்டுப்பூரான் கொடி என்பதை உருவாக்கி உள்ளேன். இதனை விக்கித்தரவில் எப்படி இணைப்பது? விக்கித்தரவின் தாவரப்பெயரின் கீழ் அமைந்துள்ள விக்கிப்பீடியாப் பகுதியில் இணைக்க வேண்டுமா? அப்படியெனில், பிறமொழியினர் அவர்கள் மொழியில் உருவாக்கவில்லை. தாவரவியல் பெயரில் அப்படியே உருவாக்கி இணைத்துள்ளனர்.நாமும் ஒரு தாவரப்பெயரில் வழிமாற்று உருவாக்கி இணைக்க வேண்டுமா? அல்லது விக்கித்தரவில் தமிழ் பெயரில், ஒரு உருப்படி பக்கம் உருவாக்க வேண்டுமா? குழப்பமாக உள்ளது. விளக்கம் தரக் கோருகிறேன்.--உழவன் (உரை) 11:29, 21 பெப்ரவரி 2017 (UTC)

ஆங்கில விக்கியில் கட்டுரை இல்லாவிடில், விக்கித்தரவில் உள்ள உயிரியல் பெயரைக் கொண்ட உருப்படியுடன் தமிழ் விக்கிக் கட்டுரையை இணைக்கலாம். ஏற்கனவே தமிழ் விக்கிக்கு விக்கித்தரவு உருப்படி இருந்தால், merge செய்யலாம்.--Kanags \உரையாடுக 12:17, 21 பெப்ரவரி 2017 (UTC)
திரினிப்பழத்தின், தற்போதைய விக்கித்தரவு உருப்படி. இது அனைத்து வகை திரினிப்பழத்திற்குமான விக்கித்தரவு உருப்படி இரண்டுமே தானியங்கியால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் எதனுடன் நமது தமிழ் கட்டுரையை இணைக்க வேண்டும்? திரினிப்பழம் என்பது பொதுப்பெயர் ஆகும். வாழைப்பழம் என்பது போல. மொந்தன் பழம், பூவன், கற்பூரவல்லி என வாழையில் வேறுபடுவது போல, திரினிப்பழம் என்பது பொதுப்பெயர். எனவே, தற்போதுள்ள திரினிப்பழ இணைப்பினை நீக்கி, இரண்டாவதாக உள்ள விக்கித்தரவு பொது உருப்படியுடன் இணைப்பது சரியா? மேற்கொண்டு என்ன செய்வது? நமது தமிழ் பெயர்களுக்கு தற்போதுள்ள விக்கித்தரவு சரியாக உள்ளதா என்பதை நாம் ஒருமுறை சரிபார்ப்பது நல்லது என்பதால் இதனை எடுத்துக்காட்டாக கேட்கிறேன்.--உழவன் (உரை) 12:00, 28 பெப்ரவரி 2017 (UTC)