கும்பகோணம் ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானையடி அருகேயுள்ள கோயில்
மகாமகக்குளத்தருகேயுள்ள கோயில்

கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1] கும்பகோணத்தில் இப்பெயரில் இரு கோயில்கள் உள்ளன. இது யானையடி அருகே இருப்பதால் யானையடி ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் என்றழைக்கப்படுகிறது.

இருப்பிடம்[தொகு]

கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில், யானையடி அருகே இக்கோயில் அமைந்துள்ளது. முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில், யானையடி அய்யனார் கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில், பகவத் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.

மற்றொரு கோயில்[தொகு]

கும்பகோணத்தில் மற்றொரு ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் மகாமகக்குளத்தின் அருகே ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது.[1] இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992