பரசு (ஆயுதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரசு
பரசுவினை தாங்கி நிற்கும் பரசுராமர்
வகைகோடரி
அமைக்கப்பட்ட நாடுதெற்காசியா

பரசு (சமக்கிருதம்: Paraśu) என்பது தெற்காசிய நாடுகளில் போரின் போது பயன்படுத்தப்பட்ட கோடரி ஆயுதமாகும். இவ்வாயுதமானது இருபுறமும் வெட்டும் வடிவிலும், ஒருபுறம் மட்டும் வெட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்து தொன்மவியலில் இந்த பரசு ஆயுதத்தினை தாங்கியபடி இருப்பதாக பரசுராமர் கதாப்பாத்திரம் உருவாக்கப் பெற்றுள்ளது.[1] திருமாலின் அவதாரங்களில் ஒன்றாக பரசுராமர் அறியப்படுகிறார்.[2] பரசுராமரை படிமக்கலையில் வடிக்கப்பெறும் போது வலது கையில் பரசு ஆயுத்தினை வைத்திருக்குமாறு செய்ய வேண்டும்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜெயதேவரின் அஷ்டபதி கீத கோவிந்தம் - இலந்தை சு.இராமசாமி வரம் பதிப்பகம் பக்கம் எண் - 33
  2. [http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/parasurama_avatar.htm விஷ்ணு, கையில் பரசு என்ற ஆயுதத்தை ஏந்திய நிலையில் தோற்றம் பெற்ற அவதாரத் திருக்கோலம் பரசுராமன் அவதாரமாகும். - முனைவர் கந்தன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசு_(ஆயுதம்)&oldid=2733184" இலிருந்து மீள்விக்கப்பட்டது