பேச்சு:சிரேயா கோசல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் திரைப்பாடலின் குறிப்பிடத்தக்கச் சிறப்புகள் (விருதுகள் போன்றவை) எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் முழுப் பாடலின் வரிகளும் தேவையற்றது. பிற பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்பாடல்களைக் குறித்து கட்டுரைகளைத் தொடங்கிவிட வாய்ப்பாகிவிடும் என்பதால் ‘notability' வார்ப்புரு இணைத்திருக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 15:47, 14 ஏப்ரல் 2014 (UTC)

இத்திரைப்பாடலுக்கான சிறப்புகள் விரைந்து இணைக்கிறேன். இப்பாடல் ஷ்ரேயா கோஷல் குரலில் பிரபலமான முதல் தமிழ்த் திரைப்பாடல் ஆகும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:41, 14 ஏப்ரல் 2014 (UTC)

தினேசு, பலரும் இந்தப் பாடலுக்கும் சிரேயா கோசலுக்கும் இரசிகர்கள் தாம் :) ஆனால், விருது பெறாத இது போன்ற பாடல்களின் கலைக்களஞ்சியத் தன்மை குறித்து மாற்றுக் கருத்துகள் உள்ளன.

  • http://www.imdb.com/title/tt0439418/soundtrack - குறிப்பிடத்தக்கமைக்குப் போதுமான சான்றில்லை. ஒவ்வொரு படத்திலும் இது போல் ஒரு பாடம் முதல் இடத்தில் இருக்கத் தான் செய்யும்.
  • www.hummaa.com/music/album/7-g-rainbow-colony/22207 - இது போன்ற தளங்களில் ஒவ்வொரு பாடலும் எத்தனை முறை இசைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கப் போனால் பல Youtube படங்களுக்குக் கட்டுரை எழுத வேண்டி வரும்.

இப்பாடல் கலைக்களஞ்சியத்தில் தனிக்கட்டுரை பெறும் அளவுக்கு முக்கியத்துவம் உடையதா என்பதை நிறுவ நீங்கள் தந்துள்ள மேற்கோள்கள் போதுமானதாக இல்லை. நன்றி.--இரவி (பேச்சு) 05:50, 15 ஏப்ரல் 2014 (UTC)

தினேஷ், ’முக்கியத்துவம்’ தலைப்பில் தரப்பட்டவற்றுள்:

  • அமேசான் தளம்-வணிக தளம் என்பதால் நூல்கள் குறித்த கட்டுரைகளுக்கு வெளி இணைப்புகளுக்கு ஆகாது என சில கட்டுரைகளிலிருந்து சமீபகாலத்தில் நீக்கப்பட்டது.
  • ஐஎம்டிபி தள இணைப்பு- ஒரு திரைப்படத்தின் பாடல்களை வரிசையாகத் தரும்போது அந்த வரிசையில் முதலாவதாக குறிப்பிடப்படுகிறது என்பது (அத்தளம் நம்பகத்தன்மை கொண்டிருந்தாலும்) கலைக்களஞ்சியத்தில் பதிவு செய்யப்படுமளவு முக்கியத்துவமானதா?
  • வலைத்தளங்களில் அதிகமான நபர்களால் கேட்கப்பட்டது என்பதும் கலைக்களஞ்சியத்தில் பதிவு செய்யப்படுமளவு முக்கியத்துவமானதா?

இவை இக் கட்டுரை குறித்து எனக்குள் எழும் சந்தேகங்கள் தான். ஷ்ரயா கோஷலின் கட்டுரையில் இது ஒரு உட்பகுதியாக இருந்தால் போதுமே என்று தோன்றுகிறது. மற்றபடி உங்களது மற்றும் பிற பயனர்களின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.--Booradleyp1 (பேச்சு) 05:56, 15 ஏப்ரல் 2014 (UTC)

வணிகத்தளம் என்று அமேசான் காணாமல் போனது. இப்பாடல் 2004-ம் ஆண்டு வெளிவந்தது, அதனால அப்போது தமிழ் வலைத்தளங்களும், செய்திகளும் இணையத்தில் இல்லை. வலை போட்டு தேடி வருகிறேன், இப்பாடலுக்கான சில ஆதாரங்களை, விரைந்து இணைக்கிறேன். விருதுகள் இப்பாடலுக்கு தரப்படாத முக்கிய காரணம் இது திரைப்படத்தில் இல்லை :-( ஷ்ரேயா கோஷல் தமிழ் திரைப்பாடல்களில் திருப்பு முனையாக அமைந்தது இப்பாடலாகும். ஷ்ரேயா கோஷல் கட்டுரையில் இணைக்காததற்கு காரணம் இப்பக்கத்தினை இன்னும் மேம்படுத்த திட்டமிட்டதே. வொய் திஸ் கொலவெறி பாடலுக்கும் விருதுகள் வழங்கப்படவில்லை, அது விக்கிப்பீடியாவில் பன்மொழிகளில் உள்ளது :D :D :D --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:18, 15 ஏப்ரல் 2014 (UTC)

//வணிகத்தளம் என்று அமேசான் காணாமல் போனது//

புரியவில்லை.

//இப்பாடல் 2004-ம் ஆண்டு வெளிவந்தது, அதனால அப்போது தமிழ் வலைத்தளங்களும், செய்திகளும் இணையத்தில் இல்லை. //

தமிழ் திரையிசை பற்றிய அலசிய ஆங்கிலத் தளங்கள் நிறைய இருந்ததாகவே நினைவு. அச்சு இதழ் ஆதாரங்களையும் தரலாம்.

//வொய் திஸ் கொலவெறி பாடலுக்கும் விருதுகள் வழங்கப்படவில்லை,//

அது ஒரு புதுப்போக்காக உலகெங்கும் (!) பார்க்கப்பட்டது. ஏராளமான ஊடகக் குறிப்புகள் உள்ளன. பாடல்களின் குறிப்பிடத்தக்கமையைப் பற்றிய தொடர்ந்து உரையாட இங்கு வாருங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 11:06, 21 ஏப்ரல் 2014 (UTC)

திரையிசை பற்றி அலசிய தளங்களுக்கு இணைப்பு தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:19, 21 ஏப்ரல் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிரேயா_கோசல்&oldid=1776942" இலிருந்து மீள்விக்கப்பட்டது