நியூட்டனின் நிறத்தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூட்டன் தட்டு

கதிரவனின் ஒளியானது ஒரு முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும்போது அவ்வொளியானது ஊதாவிலிருந்து சிவப்பு ஈறாக ஏழு வண்ணங்களாகப் பிரிகின்றது. ஒரு திரையில் இதனைப் பெறமுடியும். இவ்வண்ணங்களின் அடுக்கே நிறமாலை (Spectrum) எனப்படுகிறது. வெண்மையான சூரியனின் கதிர்கள் இந்த ஏழு வண்ணங்களின் சேர்க்கையே எனத் தெரிகிறது. ஒரு வட்டமானத் தட்டில் இவ்வண்ணங்களின் செறிவிற்கு தகுந்தவாறு வண்ணங்களை எழுதி, அத்தட்டினை வேகமாகச் சுழற்ற, தட்டு வெண்மையாகத் தோன்றக் காணலாம். இந்தத் தட்டே நியூட்டனின் நிறத்தட்டு எனப்படுகின்றது. ஏழு நிறங்களின் சேர்க்கையே வெண்ணொளி எனக் காட்ட இச்சோதனை உதவுகின்றது. இதை ஐசக் நியூட்டன் உருவாக்கினார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்டனின்_நிறத்தட்டு&oldid=1784638" இலிருந்து மீள்விக்கப்பட்டது