விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு101

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Grants to improve your project[தொகு]

Apologies for English. Please help translate this message.

Greetings! The Individual Engagement Grants program is accepting proposals for funding new experiments from September 1st to 30th. Your idea could improve Wikimedia projects with a new tool or gadget, a better process to support community-building on your wiki, research on an important issue, or something else we haven't thought of yet. Whether you need $200 or $30,000 USD, Individual Engagement Grants can cover your own project development time in addition to hiring others to help you.

On the English Wikipedia, we started a project called TAFI. Each week we identify underdeveloped articles that require improvement. Our goal is to use widespread collaborative editing to improve articles to Good article, Featured article or Featured list quality over a short time frame.

This is all about improving important articles in a collaborative manner, and also inspiring readers of Wikipedia to also try editing. We think it is a very important and interesting idea that will make Wikipedia a better place to work. It has been very successful so far, and the concept has spread to the Hindi Wikipedia where it has been well received.

We wanted to know if your Wikipedia was interested in setting up its own version of TAFI. Please contact us on our talk page or here if you are interested.--Coin945 (talk) 17:48, 2 September 2014 (UTC)

மேலுள்ளது பேச்சு முதற்பக்கத்தில் இருந்து வெட்டி ஒட்டியது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:16, 2 செப்டம்பர் 2014 (UTC)

நன்றி தென்காசியாரே! இத்திட்டம் நமக்கும் பயனுள்ளதாகவே இருக்கும். பிற பயனர்களின் கருத்துகளை அறிந்தபிறகு அவர்களுடைய உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:27, 3 செப்டம்பர் 2014 (UTC)
நமக்கு இருக்கும் பங்களிப்பாளர் வளத்துக்கு இவ்வார கூட்டு முயற்சி தான் ஒத்து வரும். அதுவும் கடந்தமுறை, போதிய பங்களிப்புகள் இல்லை என்ற காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் மீண்டும் முயன்று பார்க்கலாம்.--இரவி (பேச்சு) 19:07, 8 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள், தமிழ் விக்கிப்பீடியா மூலமாக உலகப் பயன்பாட்டுக்கு வரவிருப்பது குறித்து தி இந்து நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை[தொகு]

படிக்க: Tamil Wikipedia to publish two seminal works --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 3 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 06:05, 3 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் --இரா.பாலா (பேச்சு) 11:11, 3 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ்நாட்டில் வந்த முதல் கலைகளஞ்சியம் அபிதான சிந்தாமணி. 1910ல் இது வந்தாலும் இலக்கியத்துக்கு மட்டுமே இது கலைக்களஞ்சியம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:49, 3 செப்டம்பர் 2014 (UTC)

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்கழகத்தின் கலைக்கழஞ்சியம் போலவே இலங்கையில் இந்து சமய கலாசார அமைச்சு வெளியிட்ட இந்துக் கலைக்கழகத்தையும் தமிழ் விக்கிப்பீடியா இத்திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என்று திரு. பத்மநாப ஐயர் அவர்கள்'தி இந்து நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை குறித்த தனது விமரிசனத்தில் கருத்திட்டார். இது குறித்து ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாமா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:20, 11 செப்டம்பர் 2014 (UTC)

விக்கி யோசனை[தொகு]

[இப்பக்கத்தினை] பார்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:58, 4 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:36, 8 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:24, 8 செப்டம்பர் 2014 (UTC)

60 ways to help new editors[தொகு]

https://blog.wikimedia.org/2014/09/04/sixty-ways-to-help-new-editors/ - இவற்றில் நிறைய விசயங்களை ஏற்கனவே செய்து வருகிறோம் :) எஞ்சியவற்றைக் கவனிக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 20:12, 6 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:31, 8 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:35, 8 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:24, 8 செப்டம்பர் 2014 (UTC)
கடந்த ஒரு மாதத்தில் பதிவு செய்த புதுப்பயனர்கள் பட்டியளை எங்கே பெறலாம் ? --Commons sibi (பேச்சு) 16:06, 8 செப்டம்பர் 2014 (UTC)
புதிதாக பங்களிக்கும் பயனர்கள் பட்டியல். இதற்கான இணைப்பு அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் இருக்கிறது.--இரவி (பேச்சு) 18:59, 8 செப்டம்பர் 2014 (UTC)
மிக்க நன்றி இரவி --Commons sibi (பேச்சு) 16:23, 9 செப்டம்பர் 2014 (UTC)

தன்னியக்க முதற்பக்க இற்றைப்படுத்தல்[தொகு]

தற்போது ஒரு மாதத்திற்கு மேல் முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. இவ்வாரம் தான் கனக்ஸ் இற்றைப்படுத்தினார். என்னுடைய விக்கிநுட்ப அறிவை அடிப்படையாகக் கொண்டு முதற்பக்கக் கட்டுரையை தன்னியக்கமாக இற்றைப்படுத்தும் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். (இது வேறு விக்கிப்பீடியாக்களிலோ அல்லது ஏனைய விக்கித்திட்டங்களிலோ இருந்து திருடப்பட்டதல்ல பிரதியெடுக்கப்பட்டதல்ல (not copied) எனது சொந்த ஆக்கமே) இதனால் முதற்பக்கத்தில் இடப்படுவதற்கான கட்டுரை உருவாக்கப்பட்ட பின்னரும் நிர்வாக்கிகள் இற்றைப்படுத்தாததால் கட்டுரை இற்றைப்படுத்தப்படாத சந்தர்ப்பம் ஏற்படாது. இத்தேவைக்க்காக முன்னரே Module:Main page உருவாக்கப்பட்டதை நான் அறிவேன். ஆனால் அந்த Module இல் சில அறியப்படாத குறைபாடுகள் உள்ளன.

Module:Main page இன் சில குறைபாடுகள்[தொகு]

  1. இந்த Module இன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு நாளாகக் கழித்து எந்த நாளுக்குரிய முதற்பக்கக் கட்டுரை உள்ளதோ அதனை முதற்பக்கத்தில் இட்டுவிடும். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் உதாரணத்திற்கு 7.9.2014 ஒரு ஞாயிற்றுக் கிழமை. அதற்குப் பதிலாக விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 9, 2014 என்று உருவக்கினாலும் முதற்பக்கத்தில் அதை எடுத்து இட்டுவிடும். இது Vandalism இற்கும் ஏதுவாகலாம்!

தீர்வு[தொகு]

இவற்றைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இவ்வார்ப்புருவானது Module:Main page ஐப் போல் ஒவ்வொரு நாளாகத் தேடாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாகத் தேடி உள்ள கட்டுரையை எடுத்து திங்கட்கிழமை முதற்பக்கத்தில் இடும். இவ்வார்ப்புரு தற்போதைய வாரத்தைத் தவிர்த்து 35 வாரங்கள் முன்சென்று உரியபக்கத்தை இடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் Lua பற்றி தேடியறிந்து கற்றுவருகின்றேன். விரைவில் முடிந்தால் Module:Main page இல் உள்ள வழுவைச் சரிசெய்யலாம்.

வார்ப்புரு:Mainpage v2 இல் இவ் வார்ப்புருவை {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} என இணைக்குமாறு நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கின்றேன். இது மீடியாவிக்கியின் மாதங்களை உபயோகிக்கின்றது. தன்னிச்சையாக தோன்றாதவிடத்து (மாதப்பெயர் செப்டம்பர் இற்குப் பதிலாக செப்தெம்பர் என்றிருந்தால்) {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை|செப்தெம்பர் 7, 2014}} என மாற்றுவதன் மூலம் அத்திகதிக்குரிய விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்தெம்பர் 7, 2014 ஐ முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம்.

தற்போது மு.ப.கட்டுரை இற்றைப்படுத்தல் பொறுப்பில் நான் உள்ளதால் தவறுதலாக பிழையான உள்ளடக்கம் முதற்பக்கத்திற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்வேன். இதனைப் போல உ.தெ போன்ற பிற முதற்பக்க இற்றைப்படுத்தல்களுக்கும் இதைப் போன்ற வார்ப்புரு தேவையெனில் உருவாக்க முடியும்.

விரைவில் பல சிக்கலான வார்ப்புருக்களில் காணப்படும் பிழைகளைக் களைய எண்ணியுள்ளேன். ஏதேனும் அப்படிப்பட்ட சரி செய்யப்படவேண்டிய உயர் நுட்ப வார்ப்புருக்கள் இருந்தால் கூறுங்கள். இதனைப் பற்றிய பிற பயனர்களின் கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:46, 8 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 20:59, 9 செப்டம்பர் 2014 (UTC)
ஸ்ரீகர்சன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கும் சூரியா, மற்ற பயனர்களின் கருத்துகளைப் பொருத்து தொடர்ந்து செயற்படுங்கள். விக்கிப்பீடியா திட்டங்களின் உரை, நுட்பம் அனைத்தும் அனைவரும் பயன்படுத்தத்தக்க காப்புரிமையில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் போது, எங்கிருந்து எடுத்தோம் என்று உரிய குறிப்பைத் தந்தால் போதுமானது. இது திருட்டோ இழிவாக காண வேண்டிய படியெடுத்தலோ அன்று. எனவே, தயங்காமல் ஏற்கனவே உள்ள நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.--இரவி (பேச்சு) 19:05, 8 செப்டம்பர் 2014 (UTC)
மன்னிக்கவும் இரவி தட்டச்சிடும்போது தவறுதலாகத் திருடப்பட்டதல்ல என இட்டுவிட்டேன். தற்போது மாற்றியுள்ளேன். //விக்கிப்பீடியா திட்டங்களின் உரை, நுட்பம் அனைத்தும் அனைவரும் பயன்படுத்தத்தக்க காப்புரிமையில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் போது, எங்கிருந்து எடுத்தோம் என்று உரிய குறிப்பைத் தந்தால் போதுமானது. இது திருட்டோ இழிவாக காண வேண்டிய படியெடுத்தலோ அன்று. எனவே, தயங்காமல் ஏற்கனவே உள்ள நுட்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.//👍 விருப்பம்
இவ்வார்ப்புருவை தற்போது முதற்பக்கத்தில் இணைத்து உதவ முடியுமா?!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:47, 9 செப்டம்பர் 2014 (UTC)
இரவி அவர்களே இவ்வார்ப்புருவை பிழைகள் இன்றி சரியாகவே வடிவமைத்திருந்தேன். இதனை பரிசோதிக்கும் விதமாக நேற்றைய நாளுக்குரிய முதற்பக்கக் கட்டுரையை தற்போது சிறிது நேரத்திற்கு முன்னரே உருவாக்கினேன்.(அதற்கு என் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கின்றேன்) இவ்வார மு.ப. கட்டுரை உருவாக்கப்படாததால் அது கடந்த வாரக் கட்டுரையை மாற்றாமல் அப்படியே வைத்திருந்தது. இது வார்ப்புரு சரியாக வேலை செய்கின்றது என்பதை உறுதிப்படுத்தியது. இவ்வார்ப்புருவை தற்போது வார்ப்புரு:Mainpage v2 இல் இணைக்கலாமா?
இணைக்காவிடில் நிர்வாகியொருவர் வார்ப்புரு:Mainpage v2 இல் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 14, 2014விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 14, 2014 இற்குப் பதிலாக மாற்றி உதவுக.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:38, 15 செப்டம்பர் 2014 (UTC)

வேறு எவரும் மாற்றுக் கருத்து தெரிவிக்காததால் நீங்கள் கேட்டுக் கொண்ட வார்ப்புருவை முதற்பக்கத்தில் சேர்த்துள்ளேன். ஏதேனும் மாற்றம் தேவையெனில் தெரிவியுங்கள். மன்னிப்பெல்லாம் எதற்கு? துணிந்து செயற்படுங்கள் என்பதையே விக்கிப்பீடியா வலியுறுத்துகிறது.--இரவி (பேச்சு) 16:46, 15 செப்டம்பர் 2014 (UTC)

இரவி அவர்களே வார்ப்புரு:Mainpage v2 இல் இவ்வார்ப்புருவை இணைத்து தவியமைக்கு நன்றி. {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} என்பதை {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} <!-- தவறுதலாக இற்றைப்படுத்தப்படாதவிடத்து {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை}} என்பதை {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை|மாதம் திகதி, வருடம்}} (உதாரணம் - {{இவ்வார முதற்பக்கக் கட்டுரை|செப்டெம்பர் 14, 2014}} ) என மாற்றி குறித்த திகதிக்குரிய கட்டுரையை (உதாரணம் - விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 14, 2014 ) உள்ளிடுக --> என மாற்றி உதவுங்கள். தற்செயலாக 100 இல் 1 வீதம் எங்காவது பிழை இருந்தால் மு.ப. கட்டுரையை மாற்ற நிர்வாகிகளுக்கு இந்தப் பிற்குறிப்பு (Comment) உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.
//மன்னிப்பெல்லாம் எதற்கு? துணிந்து செயற்படுங்கள் என்பதையே விக்கிப்பீடியா வலியுறுத்துகிறது//👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:41, 15 செப்டம்பர் 2014 (UTC)
நீங்கள் சொன்னபடி குறிப்புதவியைச் சேர்த்துள்ளேன். --இரவி (பேச்சு) 18:19, 15 செப்டம்பர் 2014 (UTC)
இரவி அவர்களே நன்றி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:44, 15 செப்டம்பர் 2014 (UTC)

Grants:IdeaLab/Tamil Grammar checker[தொகு]

வணக்கம் . தங்கள் கவனத்திற்காக . இதை இங்கும் இட்டுள்ளேன் . --Commons sibi (பேச்சு) 16:29, 8 செப்டம்பர் 2014 (UTC)

நீச்சல் அண்ணனின் கருவியைக் கொண்டும், ஜாவாஸ்கிரிப்டு உதவியுடனும் எழுத்துப் பிழைகளையும், சொற்பிழைகளையும் திருத்தி வந்தோம். கிட்டபிலும் சில திட்டங்கள் இருக்கக் கூடும். அவற்றையும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:35, 8 செப்டம்பர் 2014 (UTC)
கண்டிப்பாக . லிப்ரே ஓபிஸ் தமிழில் Language Tool அருமையாக உள்ளது .நீச்சல் அண்ணே எங்கே இருக்கீங்க . --Commons sibi (பேச்சு) 16:48, 8 செப்டம்பர் 2014 (UTC)
இதைக் காண்க. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:06, 8 செப்டம்பர் 2014 (UTC)
இளஞ்செழியனும் கருவிகள் கொண்டு இவ்வாறான தொகுப்புகள் செய்கிறார். அனைவரின் கருவிகளையும் கூறுகளையும் உள்வாங்கி மேம்படுத்திச் செய்தால் நன்றாக இருக்கும்.--இரவி (பேச்சு) 19:02, 8 செப்டம்பர் 2014 (UTC)
நல்ல முன்னெடுப்பு. நானும் வழிமொழிந்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:39, 20 செப்டம்பர் 2014 (UTC)
கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தியும் இலக்கணப்பிழைத்திருத்தியும்: வளர்ச்சியும் சவால்களும் என்ற கட்டுரையின் எண்ணங்களையும் கொள்க--≈ உழவன் ( கூறுக ) 07:03, 28 செப்டம்பர் 2014 (UTC)

Change in renaming process[தொகு]

Part or all of this message may be in English. Please help translate if possible.

-- User:Keegan (WMF) (talk) 16:23, 9 செப்டம்பர் 2014 (UTC)

VisualEditor available on Internet Explorer 11[தொகு]

VisualEditor will become available to users of Microsoft Internet Explorer 11 during today's regular software update. Support for some earlier versions of Internet Explorer is being worked on. If you encounter problems with VisualEditor on Internet Explorer, please contact the Editing team by leaving a message at VisualEditor/Feedback on Mediawiki.org. Happy editing, Elitre (WMF) 07:29, 11 செப்டம்பர் 2014 (UTC).

PS. Please subscribe to the global monthly newsletter to receive further news about VisualEditor.

சென்னையில் ஒரு சந்திப்பு[தொகு]

வணக்கம் . பேராசிரியர் செல்வா சென்னையில் உள்ளார் என அறிகிறேன் .சென்னையில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரு சந்திப்பு வைக்காலாமே :) நாம் சந்தித்து கிட்டத் தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது --Commons sibi (பேச்சு) 06:55, 12 செப்டம்பர் 2014 (UTC)

சந்திப்பில் உரையாடப்பட்ட விடயங்களை சுருக்கமாகப் பதிவு செய்வது பயன்தருமே!--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:58, 24 செப்டம்பர் 2014 (UTC)

ஆம். 11ம் ஆண்டு விழாவை எளிமையாக் கொண்டாடலாமே. ஒரு சிறு சந்திப்பு கூட போதும். --Tshrinivasan (பேச்சு) 07:57, 30 செப்டம்பர் 2014 (UTC)

சென்னையில் மொசில்லா நிகழ்வு[தொகு]

செப்டம்பர் 14 அன்று சென்னையில் மொசில்லா நிகழ்வு ஒன்று நடைபெறுகிறது. இதில் விக்கிமீடியா கடையும் உண்டு. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம். --இரவி (பேச்சு) 07:38, 13 செப்டம்பர் 2014 (UTC)

Superprotect[தொகு]

விக்கிமீடியா நிறுவனம் எடுக்கவிருக்கும் சில முடிவுகள் (காண்க: Superprotect நமது விக்கியின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன்மூலம் நமது விக்கியின் நிர்வாகிகள் கூட விக்கிப்பக்கங்களின் வெளிப்பாட்டை நமக்கு வேண்டிவாறு வடிவமைத்துக் கொள்ளவோ சமூக ஒப்புதலுடனான கொள்கைகளை கடைபிடிக்கவோ இயலாது போகலாம். ஆனால் இது குறித்த உரையாடல்களில் நமது சமூகத்திலிருந்து யாரும் பங்கேற்கவில்லை. எனவே இதனை இங்கு குறிப்பிட விரும்பினேன். மெட்டா பயனர் Peteforsyth எனக்கு குறிப்பிட்டுள்ள இரு மெட்டா பக்கங்களை இங்கு குறிப்பிடுகிறேன்:

--மணியன் (பேச்சு) 04:07, 16 செப்டம்பர் 2014 (UTC)

இது குறித்து தெரியப்படுத்தியமைக்கு நன்றி. ஏற்கனவே, அவர்களின் கையெழுத்து இயக்கப் பக்கத்தில் ஒப்பம் அளித்திருந்தேன். கூடுதலாக, முக்கியமான கருத்துகள் ஏதாவது விடுபட்டு இருந்தால் சேர்ப்போம். தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை, ஏற்கனவே இதே போல் தான் தட்டச்சுக் கருவி - வலை எழுத்துருக்களைத் தாமாகச் செற்படுத்தினார்கள். பிறகு, நாம் வாதிட்டு அதனை மீளப் பெற வேண்டி இருந்தது. இப்போக்கு தொடர்வது விரும்பத்தக்கதன்று. சிக்கல் என்னவென்றால், விக்கிப்பீடியாவை கூகுள், யாகூ போல் ஒரு வழக்கமான வலைத்தளச் சேவை / மென்பொருள் போல் பார்க்கிறார்கள். ஆனால், அவற்றில் இயங்கும் பயனர் சமூகங்கள் தனித்துவமானவை. தன்னாட்சியைக் கோருபவை. --இரவி (பேச்சு) 06:02, 16 செப்டம்பர் 2014 (UTC)
ஆம், நானும் இப்போது ஒப்பமிட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:28, 20 செப்டம்பர் 2014 (UTC)
என்னைப் போன்ற பிற அணுக்கநிலைப்(sysop) பெற்றவர்களும், அங்குள்ள Post-delivery signatures என்பதில் ஒப்பம் இட வேண்டுமா? --≈ உழவன் ( கூறுக ) 10:11, 20 செப்டம்பர் 2014 (UTC)

இந்திய விக்கிமீடியா கிளையில் திட்ட இயக்குநர் பொறுப்பு ஏற்றுள்ளேன்[தொகு]

இந்திய விக்கிமீடியா கிளையில் திட்ட இயக்குநராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்தச் செய்தியை முதலில் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பங்களிப்புகள் வழமை போலவே இந்தப் பயனர் கணக்கில் இருந்து தன்னார்வப் பங்களிப்பாகவே வரும். இந்திய விக்கிமீடியா கிளை சார்பாக ஏதேனும் முன்னெடுத்தால் அதனை வேறு பயனர் கணக்கில் இருந்து முறைப்படி செய்வேன். இயன்ற அளவு விரைவில் கூடுதல் விவரங்களை அறியத் தருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:19, 21 செப்டம்பர் 2014 (UTC)

  1. வாழ்த்துகள் இரவி.--Kanags \உரையாடுக 20:49, 21 செப்டம்பர் 2014 (UTC)
  2. 👍 விருப்பம் வாழ்த்துக்கள் சகோதரரே மிக்க சந்தோசம் .-- mohamed ijazz(பேச்சு) 23:25, 21 செப்டம்பர் 2014 (UTC)
  3. "மிக்க மிகழ்ச்சி. வாழ்த்துக்கள்." இரவி!--≈ உழவன் ( கூறுக ) 01:54, 22 செப்டம்பர் 2014 (UTC)
  4. வாழ்த்துகள் இரவி. --இரா.பாலா (பேச்சு) 02:38, 22 செப்டம்பர் 2014 (UTC)
  5. இரவி, தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!--பவுல்-Paul (பேச்சு) 03:12, 22 செப்டம்பர் 2014 (UTC)
  6. வாழ்த்துகள் இரவி. - தமிழ்த்தம்பி (பேச்சு) 04:06, 22 செப்டம்பர் 2014 (UTC)
  7. வாழ்த்துகள் இரவி!--நந்தகுமார் (பேச்சு) 07:26, 22 செப்டம்பர் 2014 (UTC)
  8. வாழ்த்துகள் இரவி! தீயா வேலை செய்யனும் சங்கரு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:32, 22 செப்டம்பர் 2014 (UTC)
  9. 👍 விருப்பம் வாழ்த்துக்கள் இரவி அவர்களே!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:11, 22 செப்டம்பர் 2014 (UTC)
  10. இந்திய மொழி விக்கிகளுக்கு நல்ல காலம்தான் ! பொறுப்புடன் பங்காற்றி தமிழ் விக்கி சமூகத்திற்கு பெருமைகள் பல சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்த்துகள் !!!--மணியன் (பேச்சு) 13:06, 22 செப்டம்பர் 2014 (UTC)
  11. 👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 14:29, 22 செப்டம்பர் 2014 (UTC)
  12. 👍 விருப்பம் வாழ்த்துக்கள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:15, 22 செப்டம்பர் 2014 (UTC)
  13. வாழ்த்துக்கள் இரவி அவர்களே!- Vatsan34 (பேச்சு) 16:33, 22 செப்டம்பர் 2014 (UTC)

  14. விக்கி தொடர்பான அனைத்துப் பணிகளிலும் சிறப்பான பங்களிப்பினைத் தந்திட, எனது வாழ்த்துகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:46, 23 செப்டம்பர் 2014 (UTC)
  15. 👍 விருப்பம் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் இரவி! இலங்கையில் தமிழ் விக்கியின் தேவைகளை எவ்வாறு முன்னெடுக்கலாம் என சஞ்சீவியுடன் உரையாடியதைக் கவனித்தேன். உங்கள் சேவை எங்களுக்குத் தேவை! அனைவரும் இணைந்து விக்கிப்பீடியாவை வளர்ப்போம். --சிவகோசரன் (பேச்சு) 13:10, 23 செப்டம்பர் 2014 (UTC)
  16. 👍 விருப்பம்--புதிய பதவியில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்கள். --மயூரநாதன் (பேச்சு) 18:16, 23 செப்டம்பர் 2014 (UTC)
  17. 👍 விருப்பம்--வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:55, 24 செப்டம்பர் 2014 (UTC)
  18. 👍 விருப்பம் வாழ்த்துக்கள் அண்ணா! -ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 15:06, 28 செப்டம்பர் 2014 (UTC)
  19. உங்கள் பணிசிறக்க வாழ்த்துகிறேன், இரவி. -- சுந்தர் \பேச்சு 10:42, 30 செப்டம்பர் 2014 (UTC)
  20. 👍 விருப்பம் வாழ்த்துக்கள் இரவி! :) --செல்வா (பேச்சு) 05:13, 5 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
  21. வாழ்த்துகள் --G.Kiruthikan (பேச்சு) 16:54, 5 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

முக்கிய கட்டுரைப் பட்டியல் கட்டுரை[தொகு]

இவ்வுரையாடல் பகுதி பேச்சு:மின்காந்தவியல் இற்கு நகர்த்தப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 08:14, 24 செப்டம்பர் 2014 (UTC)

பயனர் தடை[தொகு]

தமிழ் விக்கியில் முகம்மது இஜாஸ் தடை செய்யப்பட்டுளதாகக் கூறினார். அது தொடர்பான விளக்கத்தை என்னிடம் கேட்டார். அதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு நிருவாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரா.பாலா (பேச்சு) 07:14, 24 செப்டம்பர் 2014 (UTC)

இது முகநூல் பயனர் குழுமத்தில் உள்ள தடை. எனவே, இதனை அங்கேயே என்ன ஏது என்று கேட்டு சரி செய்ய முனைவோம். முகநூலில் உள்ள ஒரு வசதி காரணமாக தெரியாமல் கை பட்டால் கூட மீளவும் சேர்க்க முடியாதவாறு தடை நேர்கிறது :( --இரவி (பேச்சு) 07:19, 24 செப்டம்பர் 2014 (UTC)
அவரால் தமிழ் விக்கியிலும் புக முடியவில்லை என்கிறார். ஆனால், தடைப் பதிகை ஒன்றும் காட்டவில்லை. முகநூலில் தடுக்கப்பட்ட பயனர்களிலும் அவர் பெயரைக் காணோம். தொழில்நுட்ப மர்மக் குழப்பமாக இருக்கலாம். இதனை நான் பொறுப்பெடுத்து கவனித்துச் சரி செய்ய முனைகிறேன்.--இரவி (பேச்சு) 07:35, 24 செப்டம்பர் 2014 (UTC)
முகநூல் தமிழ் விக்கிக் குழுமத்தில் நான்தான் அவரது தடையை விலக்கினேன். தமிழ் விக்கியிலும் தடை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறினார். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 07:37, 24 செப்டம்பர் 2014 (UTC)

ஜாதிக்கட்டுரைகள் தொல்லை[தொகு]

விக்கியில் பெரும்பாலான ஜாதிக்கட்டுரைகளில் நாங்கள் தான்டா கொம்பர் என்பது போல் எவனப்பாத்தாலும் நாங்கதான்டா மூவேந்தர், வேளிர் அரையர் வெங்காயம்னு கிறுக்கி வச்சுருக்காங்க. இதக்கேக்க யாருமே இல்லயா? பொலபொலன்னு பட்டயத்தின் வரிகள் எல்லாத்தையும் கட்டுரையில் கொடுத்துள்ளார்கள். இதத்தடுக்க என்னா செய்யலாம்? நான் பின்வரும் முறை பரிந்துரைக்கிறேன்.

  1. ஜாதிக்கட்டுரையில் எந்தெந்த அரசமரபுகளுக்கு நூல்கள் மூலம் உரிமை கோருகின்றனரோ அது அத்தனையையும் ஒரு பத்தியில் மட்டும் தாங்கள் எழுதிய நூல்கள் மூலம் தெரிவித்துவிட வேண்டும். அதுக்கு மேல சலம்பக்கூடாது.
  2. அரசமரபுகளின் கட்டுரைகளில் ஜாதி அ, ஜாதி ஆ என அகரவரிசையில் இன்னின்ன சாதி இப்படி அப்படிச் சலம்புறான்னு முடிச்சிரனும். சும்மா அதுக்கு மேல ஒன்றரை பக்கத்துக்கு எழுதி காமெடி பண்ணக்கூடாது. ஓ.கே.வா?

நானும் சிலக்கட்டுரைகளில் அழித்துவிட்டா மீண்டும் மீண்டும் சேக்குரானுங்க. பஞ்சாயத்தக் கூட்டுங்கப்பா. பஞ்சாயத்தக் கூட்டுங்க. நாட்டாமை யாரு இங்க?--நக்கீரன் (பேச்சு) 19:42, 26 செப்டம்பர் 2014 (UTC)

\\நாட்டாமை யாரு இங்க?\\ நாம் தான் நக்கீரரே. சாதிக்கட்டுரைகளை எழுதுகின்றவர்கள், தங்களது பெருமைகளை பறைசாற்றிக் கொள்ளும் நோக்கத்துடனே எழுதுவதால்,. இவ்வாறான மிகைப்படுத்தல்கள் மேல் எழும்புகின்றன. தொகுப்புப் போர்கள், ஆதாரமில்லாதவைகளை குறிப்பிடுதல் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை ஏற்கிறேன். அதற்காக அனைத்து சாதிக் கட்டுரைகளையும் பூட்டி வைத்தல் இயலாது என்பதையும் அறிவேன். பெரும்பாலான கட்டுரைகள் குறுங்கட்டுரைகளாக இருக்கவே தகுதியானவையாக இருக்கின்றன. அவற்றை மேலும் விரிவுபடுத்த மிகுந்த பயனர்களின் உதவி தேவைப்படுகிறது. அரசக் கட்டுரைகள் முக்கிய கட்டுரை அளவுக்கு வந்திருந்தால் அவற்றை உறுதி செய்யப்பட்ட பயனர்கள் மட்டும் தொகுக்கும் வகையில் மாற்றிவிடலாம். எவ்வாறான தொகுத்தல் போர்கள் அங்கு நிலவுகின்றன என்று தெரியவில்லை. இவ்வாறான முறைகேடல் நிகழும் கட்டுரையொன்றினை முன்வைத்தால் மேலும் எவ்வாறு கட்டுரையை பாதுகாக்க இயலும் என்பதை விவாதிக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:52, 3 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நான் இந்த விக்கியை மட்டும் சொல்லவில்லை. ஆங்கில விக்கியையும் நான் ஐ.பி.இல் பங்களித்த பங்களிப்புகளையும் சேர்த்து தான் சொல்கிறேன். பள்ளர் பார்க்கவும். இந்த விதிகளை பின்பற்றினால் கட்டுரைகளை பூட்டி வைக்க வேண்டியதில்லை.--நக்கீரன் (பேச்சு) 04:49, 5 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

எசுப்பானிய விக்கிமீடியா போட்டி[தொகு]

இங்கு விக்கிமீடியா எசுப்பானா எதிர்வரும் அக்டோபர் மாதம் முழுமையும் நடத்தவிருக்கும் போட்டிக்கான அறிவிப்பைக் காணலாம். எசுப்பானியாவிலுள்ள புகழ்பெற்ற கட்டிடங்களைக் குறித்த கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதத் தூண்டுவதற்கான போட்டியாகும் இது. போட்டி விவரங்கள இங்கு காணலாம். அனைவரும் அறிய வேண்டி இங்கு தந்துள்ளேன்.--மணியன் (பேச்சு) 04:19, 29 செப்டம்பர் 2014 (UTC)

Grants:IEG/Easy type tools for wiki source[தொகு]

வணக்கம் . தங்கள் கவனத்திற்காக . தமிழ் விக்கிமூலத்துக்கு தட்டச்சுப் பங்களிப்பை இலகுவாக்கும் மென்பொருளுக்கான நல்கை விண்ணப்பம். உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் தெரிவியுங்கள். இதை இங்கும் இட்டுள்ளேன். --Tshrinivasan (பேச்சு) 08:13, 30 செப்டம்பர் 2014 (UTC)

வாழ்த்துக்கள்Tshrinivasan --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:30, 30 செப்டம்பர் 2014 (UTC)

பத்தாண்டுகள் நிறைவில் நாம்[தொகு]

இது நமது பதினோரம் ஆண்டின் நிறைவு. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:30, 30 செப்டம்பர் 2014 (UTC)

//பத்தாண்டுகள் நிறைவில்//

//இது நமது பதினோரம் ஆண்டின் நிறைவு. //

!!!

ஆச்சர்யக்குறி 2 - முகநூல் நமது ஆலமரத்தடியாக ஆகிப் போனதில்.

ஆச்சர்யக்குறி 3 - அதில் எனக்கும் பங்கு இருப்பதில்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:30, 30 செப்டம்பர் 2014 (UTC)

தென்காசி சுப்பிரமணியன் தாங்கள் கூறுவது சரியே :(இங்கு தான் முதலில் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியிருக்க வேண்டும் :( --Commons sibi (பேச்சு) 01:29, 1 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
ஆச்சரியக்குறி 1- பதினொன்றின் நிறைவை பத்து என்று குறைத்துக் கூறியதற்கா தென்காசி?

புதிய தலைமுறை செய்திக் குறிப்பு[தொகு]

புதிய தலைமுறைத் தொலைக்காட்சி தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட நாள் குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட நாள் இன்று. அறிவு களஞ்சியத்தை கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் விக்கிப்பீடியா. இணையதளத்தில் எல்லா தகவலையும் நேர்த்தியான தொகுப்போடு பெறக்கூடிய வகையில் விக்கிப்பீடியா வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் இயங்கிய விக்கிப்பீடியா, 2003-ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. தற்போது 63,428 கட்டுரைகள் உள்ளன. 69,836 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியக் கலைக்களஞ்சியங்களைப் போலல்லாமல், பொதுமக்களே தொகுக்கும் வண்ணம் விக்கிப்பீடியா வடிவமைக்கப்ப்பட்டுள்ளது. தன்னார்வலர்களை கொண்டு அந்த கட்டுரைகள் சரிபார்க்கபடுகிறது. தமிழ் விக்கிப்பீடியா, இந்திய மொழிகளில் இரண்டாவதாக இடத்தில் உள்ளது. [1]

செய்திக் குறிப்பு நேர்த்தியாக இருந்தமையால், நமது விக்கியிலிருந்தே தகவல்கள் சென்றிருக்கின்றன என நினைத்திருந்தேன். தமிழ் விக்கி தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்துவர உழைத்துக் கொண்டிருக்கும் சக விக்கிப்பீடியர்களுக்கு வாழ்த்துகள் :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:04, 3 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:54, 4 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 06:48, 4 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
  1. http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-23-173460.html இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 30) புதிய தலைமுறை

Grants:IEG/Tamil OCR to recognize content from printed books[தொகு]

வணக்கம் நண்பர்களே, தமிழ் விக்கிமூலத்துக்கு உதவக்கூடிய எழுத்து வடிவ உணரி(OCR) தருவிப்பதற்க்கு உதவும் Tesseract பயிற்சி முகப்பை உருவாக்குவதற்கான விண்ணப்பம் . உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி. --Balavigneshk (பேச்சு) 17:52, 30 செப்டம்பர் 2014 (UTC)

Trainer GUI தமிழ் எழுத்துணரி உருவாக்க நேரடியாக உதவுமா என்பதில் தெளிவில்லை. en:Tesseract (software), https://code.google.com/p/tesseract-ocr/wiki/AddOns போன்ற கருவிகளுடன் முன்மொழிவு எவ்வாறு வேறுபடும். இந்த அணுகுமுறைத் தேர்வுக்கான பின்புல விபரம் தேவை. ஒரு பொது நடைமுறைக்குப் பயன்படக் கூடிய (general purpose practical Tamil OCR) கிடைக்கும் என்றால் விரிவான ஒரு முன்மொழிவை முன்வைக்க உதவ முடியும். உத்தமம், நூலக நிறுவனம், யாழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆதரவைத் திரட்ட முடியும். எமக்கு, அவர்கள் (grant தருபவர்கள்) குறிப்பாக எவற்றை எதிர்பாக்கிறார்கள் என்று அறிய வேண்டும். அப்பொழுதுத்தான் முன்மொழிவை மிகவும் பலமானதாக முன்வைக்க முடியும். --Natkeeran (பேச்சு) 18:30, 30 செப்டம்பர் 2014 (UTC)

Tesseract OCR தமிழை ஓரளவு உணரும். ஆனால் பிழைகள் அதிகம் இருக்கும். OCRக்கு பயிற்சி அளிக்க ஒரு எளிய இணைய மென்பொருளை உருவாக்கும் திட்டம் இது. இதன் மூலம் பலரும் OCR க்கு பயிற்சி தர முடியும்.

தற்போதைய பயிற்சி வழி விவரம் - http://printalert.wordpress.com/2014/04/28/training-tesseract-ocr-for-tamil/

இதை எளிமைப் படுத்தும் திட்டம் இது. --Tshrinivasan (பேச்சு) 18:46, 30 செப்டம்பர் 2014 (UTC)

கூடிய விபரங்களுக்கு நன்றி. இந்த முன்மொழிவு தமிழ் தொடர்பான சிறப்பான என்ன development செய்யும் என்று கூற முடியுமா. இதனை ஒரு எல்லா மொழுகளுக்கும், அல்லது இந்திய மொழிகளுக்கு ஆன ஒரு கருவியாகப் (மிகக் தேவையான) பார்க்கலாம். training methods இல் தமிழுக்கான algorithms எதாவது உருவாக்கப்படுமா. --Natkeeran (பேச்சு) 19:44, 30 செப்டம்பர் 2014 (UTC)

பயனர்:Natkeeran தமிழ் இணையக்கல்விக்கழகம் விக்கிக்கு வழங்கிய கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் போன்றவை படவகை பிடிஎப்களாகத்தான் உள்ளது. அதை எழுத்துக்களாக மாற்ற இதை செயல்படுத்தி சோதிக்கலாம். இன்னும் பல படவகை கோப்புகள் தமிழ் இணையக்கல்விக்கழகம் மூலம் விக்கிக்கு வரும். அதனால் மிக முக்கியத்துவம் பெறுகிறது இது. FYI பயனர்:செல்வா, பயனர்:Ravidreams --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:02, 30 செப்டம்பர் 2014 (UTC)

இதன் முக்கியத்துவத்தை நன்கு அறிவே தென்காசி. எனது கேள்வி, இந்தச் செயற்திட்டத்தின் விடயப்பரப்பு (scope) தொடர்பாகவே. ஏற்கனவே சில முயற்சிகள் இவ் வகையில் உள்ளது போல் தெரிகிறது: http://vietocr.sourceforge.net/training.html, https://code.google.com/p/parichit/. ஏற்கனவே பல தமிழ் எழுத்துணரி முயற்சிகள் முழுமை பெறாமல் உள்ளன. பரிசோதனைக்குத் தேவையான உள்ளீடுகள், பரிசோதனையாளர்கள், மாணவர்(கள்) போன்ற வளங்கள் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியும். அனால் தெளிவான இலக்குத், ஓரளவாவது பயன்படக் கூடிய தமிழ் எழுத்துணரி நோக்கி நகர முடியும் என்றால் நாம் இந்தச் செயற்திட்டத்தை பலமானதாக முன்வைக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 13:38, 1 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. சிறிய விளக்கம்,

பயனர்:Natkeeran தற்போது பல்வேறு எழுத்துரு வகைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் பழைய பதிப்புகளில் உள்ள புத்தக எழுத்துக்கள் சற்றே வித்தியாசப்படும். இவை அனைத்திற்கும் ஒரே வகையான பயிற்சி என்பது பொருந்தாது. ஒவ்வொரு விதமான எழுத்துக்கும் பயிற்சி என்பது கடினமானது மற்றும் அதிக உழைப்பு தேவைப்படுவது. இதற்கு தீர்வாக பின்வரும் குறிப்புகள் அமையும்,

1.) பலர் கூட்டாக பயிற்சி செய்யும் வகையிலான இணைய முகப்பு.

2.) எழுத்து வடிவ உணரியை (OCR), பயன்படுத்தும் போது தவறுகள் நேர்ந்து நாம் திருத்துகையில் , அதை பயிற்சியாக எடுத்து கொள்ளுதல். (feedback based continuous training).

3.) ஒரு குறிப்பிட்ட பதிப்பக எழுத்துகளுக்கு, ஒரே விதமான பிழை திருத்தம் தேவைப்படும். எனவே எழுத்துகளை தேவைக்கேற்ப வகைப்படுத்தி பயிற்சி மற்றும் பிழை திருத்தங்களை கொடுத்து பகிர்வது.

ஏற்கனவே உள்ள கருவிகள் பெரும்பாலனவை மேற்கண்ட வகையில் இல்லாமல் எழுத்துகளை கட்டம் போட்டு பிரிக்க மட்டுமே உதவும். இது பயிற்சியின் ஒரு பகுதி மட்டுமே. எனவே ஒரு முழுமையான தீர்வை உருவாக்கும் முயற்சியே இந்த கருவி. --Kbalavignesh (பேச்சு) 18:35, 4 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நன்றி Kbalavignesh. உங்கள் பதில்கள் ஊக்கம் தருபவையாக அமைகின்றன. சில நல்ல எண்ணக் கருக்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.
  • பயன்படுத்தும் போது கிடைக்கும் பின்னூட்டம் அல்லது கற்றல்கள் (2), வலை இணைப்பு முகப்பில் போன்று கூட்டாக்கம் பெறுமா (will the feedback based on continuous training be accumulated similar to web based training)
  • தமிழ் எழுத்துணரி தொடர்பான முன்னைய ஆய்வுகள், முயற்சிகள், கருவிகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டனவா? அவ்வாறு ஆயின், அது தொடர்பான ஆவணப்படுத்தல் எங்கேயும் உண்டா?
  • Tesseract எழுத்துணரிப் பொறி, ஏன் சிறந்த திறந்த மென்பொருள் எழுத்துணரி பொறியாகக் கருதுகிறீர்கள்?
  • செயற்திட்ட அணி, எந்தளவுக்கு தமிழ் விக்கி சமூகத்துக்கு responsive ஆக இருக்கும்?
  • நூலக நிறுவனம் சார்பாக செயற்திட்ட பகுதி அல்லது முழுக் காலத்துக்கு ஒர் ஊழியரை வழங்க முடியும். நாம் பயிற்சி வளங்களையும் (test files) வழங்க முடியும். கணினியியல் மாணவர்களின் உதவியையும் பெறக் கூடியதாக இருக்கலாம். இவற்றை நீங்கள் திறனாகப் பயன்படுத்த முடியும் என்று கருதுகிறீர்களா?
  • INFITT இல் இருந்து வளங்கள் அல்லது token ஆதரவு கிட்டினால் உங்கள் முன்மொழிவிற்கு உதவுமா?
  • இந்தச் செயற்திட்டம் முடிந்த பின்பு, இது எங்கு புரவல் செய்யப்படும்? தொடர்ச்சியாக விருத்தி செய்யப்படுமா?

--Natkeeran (பேச்சு) 01:27, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நற்கீரன் , இந்த உரையாடல்களை இங்கு மேற்கொண்டால் உள்ளூர் சமூகத்தின் ஆர்வம் இருப்பதை நல்கை வழங்கல் குழுவினர் உணர்வார்கள். @ Kbalavignesh அதே போல், இந்த உரையாடலால் எழும் தெளிவையும் நல்கைப் பக்கத்தில் இற்றைப்படுத்த வேண்டும். இது மிகவும் நுட்பமான நல்கை வேண்டல் என்பதால் எவ்வளவு விரிவாக தகவலைத் தருகிறோமோ அவ்வளவு நல்லது. --இரவி (பேச்சு) 03:02, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

கேள்விகளை அங்கு இட்டுள்ளேன். --Natkeeran (பேச்சு) 17:51, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் உள்ள வார்ப்புருக்களில் கணப்படும் பிழைகளைக் களைந்து அவற்றைச் சீராக்கவும், பயன்மிக்க புதிய வார்ப்புருக்களை உருவாக்கவும், சிக்கல் மிக்க வார்ப்புருக்களை Module மூலம் இலகுபடுத்தவும் SEPTEMPLATE என்ற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளேன். உங்கள் கவனத்திற்காக இங்கு குறிப்பிடுகின்றேன். ஏதாவது வார்ப்புருக்களில் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீங்கள் நினைத்தால் பயனர் வேண்டுகோள்கள் என்ற பகுதியில் தெரிவிக்கவும். நேரமிருக்கும்போது பிழைகளைக் களைய முயற்சிப்பேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:51, 5 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --செல்வா (பேச்சு) 03:46, 7 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 04:05, 7 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

என்ன கொடும சார் இது[தொகு]

விக்கிபீடியாவில் சூரத்துல் பகராவின் எனது 18 +மணிநேர உழைப்பை (4,82,227 பைட்டுக்களை) பயனர்:Vatsan34 என்னை அறியப்படுத்தது நீக்கி விக்கிமூலத்தில் புதிய பக்கம் உருவாக்கியமை என்னக்கு மிகவும் கவலையளிக்கிறது!-- mohamed ijazz(பேச்சு) 06:37, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஆம் அது தவறு. கட்டுரையாளர் ஒருவர் விக்கியில் இருக்கும் போது அப்பகுதியை விக்கிமூலத்தில் தனது சொந்த ஆக்கமாக சேர்ப்பது எவ்வகையிலும் விரும்பத்தக்கதல்ல. வத்சன், அக்கட்டுரையை நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 06:57, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சூரத்துல் பகராவின் உள்ளடக்கம் தொடர்பாக அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவிலுள்ள ஆனால் விக்கிமூலத்திற்குப் பொருத்தமான உள்ளடக்கத்தை எடுத்துவிட்டு அதனை s:குர்ஆன் (அரபு, ஆங்கிலம் மற்றும் தமிழ்)/பசு மாடு என்ற விக்கிமூலப் பக்கத்தில் இயாஸ் அவர்கள் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதே பொருத்தமானதாகும். விக்கிமூலப் பக்கத்தை நீக்கிவிட்டு இயாஸ் அவர்களை அப்பக்கத்தில் உள்ளடக்கத்தை சேர்க்கச்சொல்லிக் கேட்கலாம்.
அல்லது விக்கிமூலத்திலுள்ள நிர்வாகியொருவர் சூரத்துல் பகரா பக்கத்தை ஏற்றுமதி செய்து விக்கிமூலத்தில் இறக்குமதி செய்யாலாம் அப்போது வரலாற்றுடன் பக்கம் விக்கிமூலத்தில் சேர்க்கப்படும். உள்ளடக்கமும் இயாஸ் அவர்கள் சேர்த்ததாகவே இருக்கும். பின்னர் விக்கிப்பீடியாவிலுள்ள பொருத்தமற்ற உள்ளடக்கத்தை எடுத்துவிடலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:16, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும். நான் அந்த உள்ளடக்கத்தை விக்கிமூலத்திற்கு நகர்த்த கோரி, மார்ச் மாதமே அதன் பேச்சுப் பக்கத்தினில் பதிவு செய்தேன். இத்தனை நாட்கள் அதனை செய்யாததாலும், அதனை மறுக்காததாலும், நானே அந்த காரியத்தை செய்தேன். விக்கிப்பீடியாவில் சூராக்களின் அர்த்தம், அதன் பின்கதை மட்டுமே இருத்தல் வேண்டும். இஜாஸ் அவர்களின் உழைப்பை வீண் செய்யாமல், அந்த உள்ளடக்கத்தை விக்கிமூலத்திற்கு மாற்ற எண்ணினேன். எனினும், அது எனது பெயரில் அங்கே பதிவாகும் என்பதனை மறந்து தவறு செய்துவிட்டேன். மன்னிக்கவும் இஜாஸ் அவர்களே. எனது கோரிக்கை, விக்கிமூலத்தில் இந்த பக்கத்தை நீக்கிவிட்டு இஜாஸ் அவர்கள் இந்த உள்ளடக்கத்தை அங்கே சேர்க்கலாம். உங்களது உழைப்பும் வீணாகாது, விக்கிபீடியாவின் கட்டுரை விதிகளும் அடிபடாது. நன்றி! - Vatsan34 (பேச்சு) 16:55, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

இலங்கைப் பயனர்களுக்கு[தொகு]

இம்மாத இறுதியில் ஒரு தனிப்பட்ட அலுவலுக்காக எனக்கு யாழ்ப்பாணம் வரும் வாய்ப்பு உள்ளது. பயனர்கள் யாருக்காவது கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்தில் தனியாகவோ கூட்டாகவோ சந்தித்துப் பேசுவதில் விருப்பம் உண்டாயின் அறியத்தரவும். -- மயூரநாதன் (பேச்சு) 06:19, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டாக சந்திப்பொன்றை மேற்கொள்ளலாம். நான் வருவேன். :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:35, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் யாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியர்களைச் சந்திப்பதற்கு ஆவலாக உள்ளேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:29, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம். யாழ்ப்பாணத்தில் கூட்டாக சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்யலாம். திகதிகள் முடிவானதும் அறியத்தாருங்கள். எல்லோருக்கும் வசதியான ஒரு நாளைத் தெரிவுசெய்யலாம். --சிவகோசரன் (பேச்சு) 15:03, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:02, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி மயூரநாதன். யாழ்ப்பாணத்தில் பல முனைப்பான இளம் பயனர்கள் இருப்பதால் தங்கள் வருகையும் கலந்துரையாடலும் அங்கு பயனுள்ளதாயிருக்கும். அத்துடன் பல தடவைகள் விக்கிச் செயலரங்குகளை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு படுத்த முடியாமல் போனது. இதன் மூலம் விக்கி பயிற்சிப் பட்டறை சாத்தியமாகும் எனின் சிறப்பு. தங்களை மீண்டும் சந்திக்க அவா. திட்டமான பயணத் திகதி தெரிந்தபின் எனது வசதியைக் கூறுவேன்.சிவகோசரன்,ஸ்ரீகர்சன்,ஆதவன் ஆகியோருக்கும் நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:20, 11 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் நான் தற்போது தான் இப்பக்கத்தைப் பார்வையிட்டேன், ஆம்! தமிழ் விக்கித் தந்தையையே நேரில் பார்க்கப்போகின்றோமென்றபோது சந்தோசமாக உள்ளது. எமக்கும் உங்களுக்கும் ஏதுவான கலந்துரையாடலுக்கான ஒரு திகதியை கலந்தாலோசித்து தெரிவு செய்யலாம் என்பது எனது கருத்து!... யாழ்த்தமிழ் விக்கீப்பீடியன்களே!.. தயாராகுங்கள், நம் விக்கித் தந்தையோடு கலந்துரையாட!...--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:16, 12 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நன்றி யாழ்ஸ்ரீ. ஆனால், நான் உன்னைத் தம்பி என்று அழைத்து அண்ணன் ஆகலாம் என்று பார்த்தால் தந்தை ஆக்கப் பார்க்கிறாயே. என்னை உங்களுடைய உடன் தன்னார்வலனாக மட்டும் கருதிக்கொண்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். உங்களையெல்லாம் பார்ப்பதற்கு நானும் ஆவலாக உள்ளேன். -- மயூரநாதன் (பேச்சு) 03:06, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

எனக்கு அக்டோபர் 26,27,28, நவம்பர் 2,3,4 ஆகிய தேதிகள் வசதியாக இருக்கும். எல்லோருக்கும் சனி அல்லது ஞாயிறு நாட்கள் தான் வசதியாக இருக்கும் என எண்ணுகிறேன். மேற்படி தேதிகளில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளும் அடங்குகின்றன. பின்நேரமாக இருந்தால் சில வேளை அக்டோபர் 25 ஐயும் கவனத்தில் கொள்ளலாம். --மயூரநாதன் (பேச்சு) 03:16, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம். உமாபதி, குணேசுவரன் இவர்களும் கவனிக்க.--Kanags \உரையாடுக 08:36, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

அண்ணா! மயூரநாதன் அவர்களே! எனக்கு எந்தநாளெனினும் ஆட்சேபனம். ஆனால் இதற்கிடையில் ஒரு அகில இலங்கைப் பரீட்சை (சைவ-பரிபாலன சபை) வரவுள்ளது, அது எப்போது என்று தெரியவில்லை தெரிந்தால் எனக்கு வசதியான திகதியைக் குறிப்பிடுவேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:24, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

அக்டோபர் 26 ஞாயிறு மாலை 3 மணியளவில் யாழ். நகருக்கு அண்மையான ஓரிடத்தில் ஒன்றுகூட முன்மொழிகிறேன். மயூரநாதன் அவர்களுக்கு இது சம்மதம். ஆதவன், ஸ்ரீகர்சன், யாழ்ஸ்ரீ, உமாபதி, குணேசுவரன் - உங்களுக்கு இந்நாள்/நேரம் சம்மதமா? பொருத்தமான இடங்களை யாராவது முன்மொழிந்தால் நன்று. சஞ்சீவி சிவகுமார், யாழ் வரும் எண்ணம் உள்ளதா? யாராவது மயூரநாதன் அவர்களுக்குப் பொருத்தமான வேறொரு நாளைத் தெரிவுசெய்ய விரும்பினால் முன்மொழியுங்கள். ஓரிரு நாட்களில் நாம் நேரம்/இடத்தைத் தீர்மானிக்க வேண்டும். --சிவகோசரன் (பேச்சு) 08:52, 20 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நன்றிகள் சிவகோசரன். யாழ்ப்பாணம் வருவது சாத்தியம் குறைவாகவே உள்ளது. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:31, 20 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
அக்டோபர் 26 ஞாயிறு மாலை 3 மணிக்கு யாழ். பொது நூலகத்தில் யாழ். விக்கிப்பயனர்கள் மயூரநாதன் அவர்களைச் சந்திப்போம். சிவகோசரன், ஆதவன், ஸ்ரீகர்சன், யாழ்ஸ்ரீ, யாதவராஜன் ஆகியோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். --சிவகோசரன் (பேச்சு) 14:08, 25 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:17, 25 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
உங்கள் சந்திப்பு சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:12, 25 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நன்றி. பாடசாலை புத்தகவேலை ஒன்றோடு இணைந்திருப்பதால் வருகைதர முடியாமல் இருக்கிறது.S.kuneswaran 10:36, 26 அக்டோபர் 2014 (UTC)


👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 01:48, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சந்திப்புப் பற்றி மேலும் அறிய ---> விக்கிப்பீடியா:அக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு‎ --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:39, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைய வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:56, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

புதிய பதக்கம் தொடர்பாக[தொகு]

வணக்கம் . பல புதிய பயனர்கள் 3-4 மாதங்கள் இடைவெளிவிட்டு , திடீர் என்று தோன்றி அசத்துகிறார்கள் . அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏதேனும் பதக்கம் வேண்டும் என்று தேடிப்பார்த்தேன் , கிடைக்கவில்லை . பதக்கதின் பெயர் என்னவாக இருக்க வேண்டும் என்பது கூட நான் யோசிக்கவில்லை . :) ஆனால் , பதக்கம் இருந்தால் உதவியக இருக்கும் . --Commons sibi (பேச்சு) 06:27, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்று ஒன்று உள்ளது.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:17, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

சிபி , தேவைப்படும் பதக்கத்தின் பெயர், பதக்கப் படிமத்துக்கான இணைப்பு ஆகியவற்றை இங்கு குறிப்பிடுங்கள். வார்ப்புரு:மீண்டும் வருக என்பதனையும் பயன்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 07:39, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்[தொகு]

விக்கிக் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 03:44, 22 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:35, 22 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.-- மயூரநாதன் (பேச்சு) 07:50, 22 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
தீபாவளி வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 11:52, 22 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Meta RfCs on two new global groups[தொகு]

Hello all,

There are currently requests for comment open on meta to create two new global groups. The first is a group for members of the OTRS permissions queue, which would grant them autopatrolled rights on all wikis except those who opt-out. That proposal can be found at m:Requests for comment/Creation of a global OTRS-permissions user group. The second is a group for Wikimedia Commons admins and OTRS agents to view deleted file pages through the 'viewdeletedfile' right on all wikis except those who opt-out. The second proposal can be found at m:Requests for comment/Global file deletion review.

We would like to hear what you think on both proposals. Both are in English; if you wanted to translate them into your native language that would also be appreciated.

It is possible for individual projects to opt-out, so that users in those groups do not have any additional rights on those projects. To do this please start a local discussion, and if there is consensus you can request to opt-out of either or both at m:Stewards' noticeboard.

Thanks and regards, Ajraddatz (talk) 18:05, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்[தொகு]

அனைவருக்கும் வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் தொடங்கப்பட்டுள்ளது . அது துவக்க நிலையில் உள்ளது . வலைவாசல் வடிவமைப்பாளர்கள் அதை வடிவமைக்க உதவவும் . கட்டுரைகள் , உள்ளடக்கங்கள் , என்னவெல்லாம் இருக்கலாம் என்று அனைவரும் அதன் பேச்சு பக்கத்தில் தங்கள் கருத்துகளைக் கூறவும் . --Commons sibi (பேச்சு) 06:18, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு[தொகு]

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இம்மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் இருப்பைப் பதிவு செய்வது சிறப்பாக இருக்கும். ஆய்வுக் கட்டுரைகளுக்கான சுருக்கத்தை அனுப்பி வைக்க இறுதி நாள் 30 அக்டோபர் நவம்பர் 2014. தமிழும் கணினியும் என்ற ஆய்வுப் புலத்தின் கீழ்] நாம் கலந்து கொள்ளலாம். சுந்தர் எழுதிய Tamil Wikipedia: A Case study கட்டுரையை இற்றைப்படுத்தி நம் சார்பாக யாராவது கட்டுரையை முன்வைத்தால் நன்றாக இருக்கும். --இரவி (பேச்சு) 13:57, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:38, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:56, 28 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
நல்ல ஆலோசனை. அது ஒரு சிறப்பான கட்டுரை. இதை சுந்தரே செய்தால் நல்லது. அதுவே முறையாகவும் இருக்கும். நானும் இரண்டு கட்டுரைகளுக்குச் சுருக்கம் அனுப்ப எண்ணியிருந்தேன். அவற்றில் ஒன்று விக்கித்திட்டங்கள் சம்பந்தமானது. நான் போலந்தில் சமர்ப்பித்த கட்டுரையின் ஒரு பகுதியை விரிவாக்கி எழுதலாம் என எண்ணியிருந்தேன். "இணையத்தில் தமிழ் உள்ளடங்கங்களின் மேம்பாட்டில் விக்கிமீடியாத் திட்டங்கள் வழங்கக்கூடிய வாய்ப்புக்கள், ஆற்றக்கூடிய பங்கு" என்பவை குறித்ததாக இக்கட்டுரை அமையலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது. இப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருப்பதால். முடிவுத்தேதிக்கு முன் இதைச் செய்யலாம் என்று தோன்றவில்லை. முயன்று பார்க்கலாம். -- மயூரநாதன் (பேச்சு) 05:24, 28 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி இரவி, மயூரநாதன். நானும் பத்தாண்டுக்கொண்டாட்டத்தின்போது அதை இற்றைப்படுத்தத்தொடங்கினேன். முடிக்கமுடியவில்லை. இம்மாத இறுதிக்குள் செய்யமுடியுமா தெரியவில்லை. எப்படியாகினும், கட்டுரையை எழுதும்போது அண்மையில் சுறுசுறுப்பாக இயங்கும் பயனர்களின் உள்ளீடுகள் கட்டாயம் தேவை. வரைவை இட்டு கருத்துக்களைப்பெற முயல்கிறேன். வேறு யாராவது எடுத்து எழுதினாலும் நல்லது, என்னால் இயன்றவற்றைச்சேர்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:52, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
கட்டுரைச்சுருக்கத்தை அனுப்பவேண்டிய கடைசிநாளான இன்று அனுப்பிவிட்டேன். தொடர்ந்து முடுக்கிய/ஊக்குவித்த இரவிக்கு நன்றி. முந்தைய கட்டுரையைக் கிட்டத்தட்ட மொழிபெயர்த்து முடித்துள்ளேன். அதை இற்றைப்படுத்தி விளக்கப்படங்களைச்சேர்க்கும் பணியைத் தொடங்கவுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 13:33, 30 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் சுந்தர்.--Kanags \உரையாடுக 21:27, 30 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் சுந்தர்.--மயூரநாதன் (பேச்சு) 04:12, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் சுந்தர்.--Mohamed ijazz (பேச்சு) 05:40, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி Kanags, மயூரநாதன், Mohamed ijazz. முழுக்கட்டுரையைத்தொகுக்கும்போது நம் பங்களிப்பாளர்களின் பின்னூட்டமும் திருத்தங்களும் மிகவும் தேவைப்படும். ஏற்கனவே மற்றவர்கள் எழுதியுள்ள கற்றுகளையும் தக்க இடத்தில் மேற்கோள் காட்டி பயன்படுத்திக்கொள்வேன். -- சுந்தர் \பேச்சு 13:04, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அங்கிலத்தில் மட்டும் தான் கட்டுரை எழுதனும் என்பது விதியா? இரட்டை மொழிகளில் எழுதக்கூடாதா என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:46, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை ஆங்கிலத்தில் அல்லது தமிழில் எழுதலாம். இரண்டிலும் எழுத முடியுமா என்று தெரியவில்லை. --- மயூரநாதன் (பேச்சு) 14:11, 2 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

வலைவாசல் உருவாக்குவது எப்படி[தொகு]

புதிய வலைவாசல் உருவாகுவது எப்படி புதுச்சேரி ஒன்றிய பிராந்தியத்திற்கு ஒரு வலைவாசல் உருவாக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் .நண்பர்களின் பதிலும் உதவியும் வேண்டுகிறேன் புதுவைபிரபு 10:42, 29 அக்டோபர் 2014 (UTC)

பார்க்க:விக்கிப்பீடியா:வலைவாசல்_அமைத்தல்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:02, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
புதுச்சேரி குறித்த கட்டுரைகள் மிகக் குறைவு, இருக்கும் கட்டுரைகள் பலவும் குறுங்கட்டுரைகளே. புதுச்சேரி பகுப்பிலோ அல்லது அதன் உபபகுப்புகளிலோ சேர்க்கப்படாமல் பல கட்டுரைகள் தேங்கி நிற்கலாம். அவற்றை இனம் காண வேண்டும்.--Kanags \உரையாடுக 19:53, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Hello, Dear wikipedians. I invite you to edit and improve this article and to add information about your and other country.--Kaiyr (பேச்சு) 13:41, 31 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

CIS-A2K PO Selection[தொகு]

Dear Wikipedians,
CIS-A2K is seeking applications for the post of Programme Officer (Institutional Partnerships). The position will be based in its Bangalore office. Programme Officer will collaboratively work with the A2K Team and would report to the Programme Director, Interested applicants are encouraged to deeply engage with the CIS-A2K Work Plan before making the application. The last date of submitting applications is November 14, 2014. You can also find the job posting on our website (http://cis-india.org/jobs/programme-officer-institutional-partnership).
Thank you
రహ్మానుద్దీన్ (பேச்சு)
Program officer, CIS-A2K

விக்கிதரவில் தமிழ் கட்டுரைகளை இணைப்பதற்கான கருவி[தொகு]

விக்கிதரவில் தமிழ் கட்டுரைகளை இணைப்பதற்கான பயனுள்ள கருவி - http://aharoni.wordpress.com/2014/10/31/link-wikipedia-articles-in-different-languages/ . ஒரு விளையாட்டு போல இருப்பதால் தமிழ் தட்டச்சு செய்ய வராதவர்களுக்கும் அறிமுகப்படுத்தி பங்களிக்க வைக்கலாம். --இரவி (பேச்சு) 19:06, 1 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:13, 4 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
இங்கு தரப்பட்டுள்ள கருவி விக்கித்தரவில் இணைப்பதற்கான கருவி அல்ல. ஆனால், ஏற்கனவே தவறாக இணைக்கப்பட்டு இனங்கானப்பட்டுள்ள கட்டுரைகளின் பட்டியலை இக்கருவி தருகிறது. இக்கருவி மூலம் அவற்றை இனங்கண்டு சரியான கட்டுரைகளுக்கான இணைப்பை (இக்கருவி மூலமல்ல) கொடுக்கலாம். தமிழில் இக்கருவி இனங்கண்ட மொத்தம் 46 வழுக்களைக் களைந்துள்ளேன்.--Kanags \உரையாடுக 12:16, 4 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
" a tool that helps people link articles in different languages that are not linked yet. They prepared a list with thousands of pairs of articles in different languages that are supposed to be about the same subject according to their automatic guesswork. The tool only shows such articles, and a human editor must check whether they actually match, and if they do—make the linking automatically" என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் இது வரை இணைக்கப்படாத கட்டுரைகளையும் காட்டும் என்று தெரிகிறது. ஆனால், இதற்கு முன்பு வெறும் "yes / no" அழுத்தினால் போதும் என்று தவறாக நினைத்து விட்டேன் :( வழமை போல் நாம் தான் இணைப்பு கொடுக்க வேண்டும் போல.--இரவி (பேச்சு) 21:49, 4 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இந்திய விக்கிமீடியா கிளை சார்பாக சில செய்திகள்[தொகு]

வணக்கம். இது வரை தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தன்னார்வமாக பங்களித்து வந்தது போக, தற்போது இந்திய விக்கிமீடியா கிளையில் திட்டமிடல் இயக்குநர் பொறுப்பு ஏற்றிருப்பதை முன்னரே தெரிவித்திருந்தேன். இந்திய விக்கிமீடியா கிளை சார்பாக சில செய்திகளைப் பகிர விரும்புகிறேன்.

இந்திய விக்கிமீடியா கிளை என்றால் என்ன?

முதலில், விக்கிப்பீடியா திட்டம் தனி ஒரு வலைத்தளமாகத் தோன்றியது. பின்பு, அதனை நிருவகிக்க விக்கிமீடியா அறக்கட்டளை என்று ஒரு அமைப்பு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டது. விக்கிப்பீடியாவுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்குவதுடன், அதற்கான செலவுகள், விரிவாக்கப் பணிகளுக்கு என ஊழியர்களை நியமிப்பது ஆகிய பணிகளையும் அறக்கட்டளை பார்த்துக் கொள்ளத் தொடங்கியது.

கூகுள், முகநூல் போன்ற வழமையான வணிக நிறுவனங்களைப் போல் விக்கிமீடியா அறக்கட்டளையும் நாட்டுக்கு நாடு கிளை திறப்பதில் சிக்கல் உள்ளது. 1. இது தேவையற்றது. 2. சட்டம், நடைமுறை சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வரும். 3. உள்ளூர் நிலவரங்களை அமெரிக்காவில் இருந்து புரிந்து கொண்டு இயங்க முடியாது.

எனவே, ஒவ்வொரு நாட்டில் உள்ள விக்கிமீடியர் சமூகங்களும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பைப் பதிவு செய்தால் அதனை முறைப்படி ஏற்று ஆதரவு வழங்குவது என்னும் முறையை விக்கிமீடியா அறக்கட்டளை பின்பற்றத் தொடங்கியது.

இதன்படி, தற்போது உலகெங்கும் 40க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இவற்றில், செருமனி விக்கிமீடியா நிறுவனம் முன்னோடியானது. 50+ ஊழியர்களைக் கொண்டு இயங்குகிறது.

இந்தக் கிளைகள் தத்தம் நாட்டில் விக்கிமீடியா பங்களிப்புகளை ஊக்குவிப்பது, அரசு, கல்வி நிறுவனங்களுடன் உறவாடி பங்களிப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவது ஆகிய பணிகளில் கவனம் செலுத்துகிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டின் காப்புரிமைச் சட்டத்தை கட்டற்ற இயக்கங்களுக்குத் தோதாக மாற்ற முனையலாம். பல பயனுள்ள ஆக்கங்களை பல்கலைகளிடம் பேசி பொது உரிமத்தில் கொண்டு வரலாம். உள்ளூரில் விக்கிமீடியர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்கலாம்.

பல இந்திய விக்கிமீடியர்களின் முனைப்பின் காரணமாக, இந்திய விக்கிமீடியா கிளை 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, விக்கிமீடியா அறக்கட்டளை ஏற்பு பெற்றது.

நம் சுந்தர், இந்திய விக்கிமீடியா கிளையின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். சோடாபாட்டில் அதன் செயற்குழுவில் பணியாற்றி இருக்கிறார். User:Logicwiki உறுப்பினராக இருந்து செயற்பட்டிருக்கிறார். 2011 இந்திய விக்கிமீடியா மாநாட்டின் போது சோடாபாட்டிலும் Logicwikiயும் சிறப்பான பணி ஆற்றினார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பெருமளவு தன்னார்வலர் பங்களிப்பைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, சௌமியன் பகுதி நேரப் பணி ஆற்றி வந்தார். நான் தற்போது முழு நேரப் பொறுப்பில் உள்ளேன்.

இந்தப் பின்புலக் கதையை ஏன் சொல்கிறேன் என்றால் :)

இந்திய விக்கிமீடியா கிளை என்றால் என்ன, அது என்ன செய்கிறது, தமிழ் விக்கிமீடியர்களைப் போன்ற சமூகங்கள் ஏன் அதற்குப் பங்களிக்க வேண்டும் என்ற புரிதல் குறைவாகவே உள்ளது.

கடந்த தமிழ்விக்கி10 கொண்டாட்டங்களின் போது, எங்கெல்லாம் அலுவல் முறை கடிதங்கள் தேவைப்பட்டனவோ அவற்றை இந்திய விக்கிமீடியா கிளையே வழங்கியது. நமது கொண்டாட்டங்களுக்கான செலவின் ஒரு பகுதியை இந்திய விக்கிமீடியா கிளை வழங்கியது. வருங்காலத்தில் நாம் பெரிய திட்டங்களை முன்னெடுத்தால், ஒரு சில இலட்சங்களுக்கு மேல் தனிநபர் மூலம் நிதியைக் கையாள முடியாது. அது போன்ற வேளைகளில், இந்திய விக்கிமீடியா கிளை நமக்கு நடைமுறை ஆதரவு தரும். இது நாம் இந்திய விக்கிமீடியா கிளையிடம் பெறக்கூடிய பயன்களுக்கான சில எடுத்துக்காட்டுகள்.

நாம் ஏன் பங்களிக்க வேண்டும்?

பல்வேறு விக்கிமீடியா திட்டங்கள் ஏறத்தாழ 20 மொழிகளில் இந்தியாவில் இயங்குகின்றன. எனினும், தமிழ், மலையாளம், வங்காளம் போல் ஓரளவு நிலைத்தன்மை பெற்ற திட்டங்கள், சமூகங்கள் குறைவே. இந்தியாவில் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பதற்கான பல சட்ட மாற்றங்கள், அரசு ஆதரவைப் பெற இக்கிளை மூலம் முனைவது கூடிய வலுவைத் தரும். அப்படிச் செயற்படும் முன் இக்கிளையை வலுவான ஒரு அமைப்பாக உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. இக்கிளை எவ்வளவு வலுவாகச் செயற்படுகிறதோ அதற்கேற்ப தான் விக்கிமீடியா அறக்கட்டளையும் நிதி ஆதரவு தரும்.

தற்போதைய நிலையில் இந்திய விக்கிமீடியா கிளையில் மிகச் சில உறுப்பினர்களே இருக்கிறார்கள். திறமையும் அனுபவமும் மிக்க உறுப்பினர்களும் விரைவில் களைத்து விடுகிறார்கள். அடுத்த தலைமுறை உறுப்பினர்களும் நிறைந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களும் தேவை.

இவ்வமைப்பை வலுப்படுத்த நீங்கள் இந்திய விக்கிமீடியா கிளையில் உறுப்பினராகச் சேர விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பிய, இந்திய குடியுரிமை உள்ளோர் உறுப்பினர் ஆக சேர விண்ணப்பிக்கலாம். உறுப்பினராகச் சேர்ந்த பின் இந்திய அளவிலும் தமிழ் சார் மட்டங்களிலும் விக்கிமீடியா திட்டங்களை முன்னெடுக்க திட்டங்கள் தீட்டிச் செயற்படலாம். செயற்குழுவுக்கான தேர்தல்களில் கலந்து கொண்டு கொள்கை முடிவுகள் எடுத்து அமைப்பை சரியான பாதையில் செல்ல வழி காட்டலாம்.

இச்செயற்பாடுகள், உங்கள் தனிப்பட்ட வேலை, ஆளுமையிலும் பயனுள்ள அனுபவங்கள், தொடர்புகளைத் தரும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு நாட்டின் அரசியல் நிலவரம் போல் இந்த அமைப்பின் நலமும் ஒவ்வொரு விக்கிப்பீடியரின் பங்களிப்பின் மூலமாகவே உறுதி செய்ய இயலும்.

தற்போது மும்பை, கருநாடகம், கேரளம் போன்ற பகுதிகளில் இருந்து கூடுதல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழ் உறுப்பினர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இவ்வெண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலம் தமிழ் சார் செயற்பாடுகளைக் கூட்டலாம்.

இன்னொரு முக்கியமான குறிப்பு: இலங்கை, மற்ற நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், இங்கிருந்து புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றோர் இந்திய விக்கிமீடியா கிளையில் சேர முடியாது. ஆனால், ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகளில் உள்ள கிளைகளில் சேர்ந்து அவற்றின் மூலம் தமிழ் சார் திட்டங்களை முன்னெடுக்கலாம். அதே போல் இலங்கை தமிழ் விக்கிப்பீடியர் என்பது போன்ற முறையான பயனர் குழுமங்களையும் தொடங்கலாம். இவற்றுக்கும் உலகளாவிய விக்கிமீடியா அறக்கட்டளை ஆதரவு தரும்.

இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன் :) ஏதேனும் ஐயங்கள் இருந்தால் இங்கோ தனிமடலிலோ என்னிடம் கேட்கலாம். நன்றி.--Ravidreams (WMIN) (பேச்சு) 09:47, 3 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

  1. உங்களது உரை எக்காலத்திலும் பலருக்கும் பயன்படும்படி இருக்கிறது. பயிற்சிப் பட்டரைகளிலும், நண்பர்களிடமும் கலந்துரையாடும் போது, பயன்படும் வகையில் நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படுத்தும். மிக்க நன்றி--≈ உழவன் ( கூறுக ) 00:45, 4 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:14, 4 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

New Wikipedia Library Accounts Now Available (November 2014)[தொகு]

Apologies for writing in English, please help translate this into your local language. Hello Wikimedians!

The TWL OWL says sign up today :)

The Wikipedia Library is announcing signups today for, free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for:

  • DeGruyter: 1000 new accounts for English and German-language research. Sign up on one of two language Wikipedias:
  • Fold3: 100 new accounts for American history and military archives
  • Scotland's People: 100 new accounts for Scottish genealogy database
  • British Newspaper Archive: expanded by 100+ accounts for British newspapers
  • Highbeam: 100+ remaining accounts for newspaper and magazine archives
  • Questia: 100+ remaining accounts for journal and social science articles
  • JSTOR: 100+ remaining accounts for journal archives

Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
--The Wikipedia Library Team.23:19, 5 நவம்பர் 2014 (UTC)

You can host and coordinate signups for a Wikipedia Library branch in your own language. Please contact Ocaasi (WMF).
This message was delivered via the Global Mass Message to The Wikipedia Library Global Delivery List.

Global AbuseFilter[தொகு]

வணக்கம்,

AbuseFilter is a MediaWiki extension used to detect likely abusive behavior patterns, like pattern vandalism and spam. In 2013, Global AbuseFilters were enabled on a limited set of wikis including Meta-Wiki, MediaWiki.org, Wikispecies and all the "small wikis". Recently, global abuse filters were enabled on "medium sized wikis" as well. These filters are currently managed by stewards on Meta-Wiki and has shown to be very effective in preventing mass spam attacks across Wikimedia projects. However, there is currently no policy on how the global AbuseFilters will be managed although there are proposals. There is an ongoing request for comment on policy governing the use of the global AbuseFilters. In the meantime, specific wikis can opt out of using the global AbuseFilter. These wikis can simply add a request to this list on Meta-Wiki. More details can be found on this page at Meta-Wiki. If you have any questions, feel free to ask on m:Talk:Global AbuseFilter.

நன்றி,

PiRSquared17, Glaisher17:36, 14 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

Invitation to Bengali Wikipedia 10th Anniversary Celebration Conference 2015[தொகு]


Hi Community members,

Bengali Wikipedia community is organizing its 10th Anniversary Celebration Conference at Kolkata on 9 & 10 January 2015.
You can see our Official event page and the Facebook event page.

We are planning to invite our friends and well-wishers from different language wiki communities in India to this most auspicious occasion hosted by Bengali Wikimedia community! We are also planning to arrange few 30 scholarships for non-Bengali Indic Wikimedians who are interested in participating in this event. Please select your Five (5) scholarship [1] delegates from your community member for this conference and announce it here before 10th December 2014.


We look forward to see you at Kolkata on 9 & 10 January 2015

1) Scholarship included with Travel reimbursement upto 2000/- + dormitory or shared accommodation + meals during the conference hours

On behalf of Bengali Wikipedia Community (Sorry for writing in English)

Commons sibi[தொகு]

  • English : I express my willingness to participate in the conference as a Tamil Wikipedia community nomination with Scholarship .
  • தமிழ் : இக் கூடலில் அவர்கள் தரும் உதவித்தொகையுடன் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக நான் பங்கேற்கலாம் என்று விரும்புகிறேன் .சக விக்கிப்பீடியர்களின் கருத்தும் ஆதரவும் தேவை .--Commons sibi (பேச்சு) 06:14, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  1. ஆதரவு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:45, 21 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  2. வங்கத்துக்குச் செல்ல விரும்பும் பொதுவுடைமைச் சிங்கத்துக்கு ஆதரவு :)--இரவி (பேச்சு) 05:35, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு!--நந்தகுமார் (பேச்சு) 08:04, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  4. ஆதரவு ! --மணியன் (பேச்சு) 10:23, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  5. ஆதரவு !!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:27, 26 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  6. ஆதரவு--Kanags \உரையாடுக 11:32, 26 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  7. ஆதரவு--Mohamed ijazz (பேச்சு) 12:07, 26 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  8. ஆதரவு --குறும்பன் (பேச்சு) 19:59, 30 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  9. I have had a lot of positive interactions with this person on English Wikipedia. I would love for this person to get support to attend in-person Wikimedia community events. Blue Rasberry (talk) 15:40, 2 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
  10. 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 02:07, 4 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
  11. ஆதரவு:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:50, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
  12. ஆதரவு :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:44, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பரிந்துரைகள்[தொகு]

தமிழ்க்குரிசில், தகவலுழவன், செகதீசுவரன், சூரியா, நந்தினி - நீங்கள் இதில் கலந்து கொண்டால் தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரு விக்கிச் சுற்றுலா போய் வந்தது போல் நன்றாக இருக்கும். ஆனால், அவர்கள் கொடுக்கும் உதவித் தொகையை வைத்து இரயிலில் போய் வந்தால் அதற்கே ஒரு வாரம் ஓடி விடும். வேறு யாருக்கும் ஆர்வம் இருந்தாலும் தெரிவியுங்கள். வேறு வகைகளில் பயண உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம். --இரவி (பேச்சு) 05:34, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

  • ஒரு குழுவாக சென்றால் நானும் வர விருப்பம் ;) --மணியன் (பேச்சு) 10:25, 22 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  • குழுவாகச் செல்வது தமிழ் விக்கியின் காத்திரமான இருப்பை வெளிப்படுத்துவதாக அமையும், ஆகவே வேறு உதவித்தொகையுடன் அதற்கு முயற்சிக்கலாம். கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:17, 24 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  • பரிந்துரைத்தமைக்கு நன்றி. பொதுவகத்தில், தாவரவியலில்~1000 கோப்புகள் அதிகரிக்க, அதற்குரிய துறை சார்ந்த அறிஞர் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதால் என்னால் இணைய இயலாது.--≈ உழவன் ( கூறுக ) 15:37, 25 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  • வங்காள விக்கிப்பீடியர்களிடம் பேசினேன். ஒரு சமூகத்தில் இருந்து ஓரிருவரை மட்டும் அனுப்புகிறோம் என்றால் அதற்கேற்றவாறு உதவித் தொகையைக் கூட்டித் தர முடியும் என்றார்கள். வேறு எவருக்கும் ஆர்வம் இல்லை எனில், ஒரு உறுப்பினருக்கு மட்டும் விமான உதவித் தொகை தாருங்கள் என்று கேட்டுப் பார்க்கலாம். ஆனால், எதுவும் உறுதி இல்லை. --இரவி (பேச்சு) 14:24, 26 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
சிபிக்கு வானுர்திச் செலவுக்கு உதவித்தொகை பெற்றுத் தருவதற்கு எனது ஆதரவும். --மணியன் (பேச்சு) 17:12, 2 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவிற்கு ஆக்கங்களை அன்பளிப்புச் செய்தல்[தொகு]

ஆ.விக்கு ஆக்கங்களை அன்பளிப்புச் செய்வதற்காக மின்னஞ்சல் அனுப்புவதுபோல் த.விக்கு இதற்கான மின்னஞ்சல் உள்ளதா? இதுதொடர்பில் Abdulbasith27க்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. --AntonTalk 17:06, 25 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]


Anton அவர்களே! அந்த பக்கத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

If you would like to allow Wikipedia or another English Wikimedia site to use your content, be it text or images, but don't want to put a license statement on the website, you still must release it under the free licenses noted above and can do so in the following ways

அதாவது, அந்த வாசகத்தை இணையதளத்தில் வெளியிட விருப்பமில்லை என்றால் மின்னஞ்சல் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இரண்டாவது கட்டுரைக்கே இத்தனை நாள் கடத்தப்பட்டால் விக்கிபீடியாவில் எழுதும் ஆர்வமே போய்விடும். விரைவாக முடிவெடுங்கள். --Abdulbasith27 (பேச்சு) 18:40, 29 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

அங்கு தரப்பட்டுள்ள மின்னஞ்சல் ஆங்கில விக்கிக்கு மட்டுமா அல்லது சகலத்திற்குமா என்பதில் எனக்குத் தெளிவில்லாமல் உள்ளது. எனவே இங்கு கேட்டுள்ளேன். இதுவரை பதில் இல்லாததால் ஆங்கில விக்கியிலும் கேட்டுள்ளேன். பதில் கிடைத்ததும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். சிலவேளை கருத்துக் கேட்க மற்ற பயனர்களில் தங்கியிருப்பதால் இது போன்ற தாமதங்கள் தவிர்க்க முடியாதவை. அதுவரை நீங்கள் வேறு கட்டுரைகளை எழுதுவது ஆர்வத்தை தூண்டக்கூடும். --AntonTalk 20:12, 29 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
அங்கு தரப்பட்டுள்ள மின்னஞ்சல் OTRS அமைப்பு ஏற்படுத்தப்படாத அனைத்து விக்கிப்பீடியாக்களுக்குமே ஆகும். தமிழ் விக்கியில் OTRS நிர்வாகிகள் யாரும் இல்லை என்பதால் அந்த மின்னஞ்சலுக்கே அனுப்பலாம். அங்குள்ள நிர்வாகிகள் மொழி தெரியாமையால் நமக்கு அனுப்பி கருத்துக் கேட்டு அனுமதி வழங்குவர். இதுவே எனக்குள்ள தெளிவு. --மணியன் (பேச்சு) 01:40, 30 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

மின்னஞ்சல் அனுப்புவது ஒரு விருப்பமாக தான் உள்ளது. அதாவது அந்த குறிப்பிட்ட வாசகத்தை இணையதளத்தில் பதிய இயலாவிட்டால் மின்னஞ்சல் அனுப்புமாறு தான் கூறப்பட்டுள்ளது. அந்த வாசகம் பதிந்தால் மின்னஞ்சல் தேவையில்லை என்றே கருதுகிறேன். தயவு செய்து ஆக்கங்களை அன்பளிப்புச் செய்வதற்கான வழிகளை மீண்டும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --Abdulbasith27 (பேச்சு) 04:02, 30 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

நிர்வாகிகளின் கவனத்திற்கு[தொகு]

இங்கு கொஞ்சம் வரவும்.

  1. விக்கிப்பீடியா பேச்சு:தவறான வழிமாற்று நெறிப்படுத்தல் கொள்கை
  2. பயனர் பேச்சு:Jaivanth--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:42, 25 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
தென்காசி சுப்பிரமணியன், குறிப்பாக நிருவாகிகள் மட்டும் நடவடிக்கை எடுக்கக்கூடிய விசயங்களில் கவனம் ஈர்க்க இங்கு குறிப்பிடலாம். மற்ற இடங்களில் பொதுவாக கவனம் ஈர்ப்பது வரவேற்கத்தக்கது. அப்போது, அனைத்துப் பயனர்களுக்குமான பொறுப்பினை உணர, உணர்த்த முடியும்.--இரவி (பேச்சு) 06:03, 30 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

நிர்வாகிகள் கவனத்திற்கு[தொகு]

விக்கி புகுபதிகை பக்கத்தில் (புகுபதியும் முன்) இப்பக்கத்தை நீங்கள் மாற்றி எழுதலாம், மேலுள்ள தொகு பொத்தானை அழுத்தவும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.. சரிபார்க்கவும். https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு:UserLogin ---இரத்தின சபாபதி (பேச்சு) 14:20, 27 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

புகுபதியாத பயனர்களைப் பங்களிக்கத் தூண்டும் வகையில் எல்லா பக்கங்களிலும் இந்த அறிவிப்பு வருகிறது. தொகுக்க முடியாத பக்கங்களில் இதனைக் காட்டாமல் மறைக்க வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.--இரவி (பேச்சு) 05:56, 30 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

உடனடியாக உதவி தேவை[தொகு]

முதற் பக்கத்தில் இன்றைய நாளில் பகுதியின்கீழ் Lua error in package.lua at line 80: module `Module:Namespace detect/data' not found என வருகிறது. உடனடியாக திருத்த வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:08, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

  • நிர்வாகிகள் கவனத்திற்கு பயனர்:AntanO இன்று உருவாக்கிய Module:Location map என்ற வார்ப்புரு மீதும் , வார்ப்புரு:Location map பக்கத்தின் இன்றைய திருத்தங்கள் மீதும் எனக்கு சந்தேகமாக இருக்கு.இந்த தொகுப்புகளின் பின்னர் பல கட்டுரைகளில் Lua error in Module:Location_map/multi at line 13: The name of the location map definition to use must be specified என வருகிறது.இதனை உடனடியாக திருத்த வேண்டும். --Mohamed ijazz (பேச்சு) 07:49, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
ஆம், அவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள ஊர்களின் பக்கங்களில் அந்தந்த நாடுகளின் வரைபடங்களுக்குப் பதிலாக, உலக வரைபடம் வருகிறது. அன்ரன் கவனிக்க.--Kanags \உரையாடுக 08:08, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்களில் இற்றையின்மை, புதிய கட்டுரைகளில் உள்ள வார்ப்புருக்களுக்கு பழைய வார்ப்புருக்களின் ஒத்திசைவின்மை (லூவா, Module) என்பன இச்சிக்கலுக்குக் காரணம். அவற்றை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து களைய வேண்டும். தொழினுட்ப ஆற்றல் உள்ளவர்கள் உதவினால் விரவாக சிக்கலைத் தீர்க்கலாம். --AntonTalk 08:24, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

Kanags சில கட்டுரைகளின் ஒரு பகுதியே இல்லை.(என்ன கொடும சார் இது??) --Mohamed ijazz (பேச்சு) 09:21, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
ஓர் உதாரணக் கட்டுரை இணைப்புத் தாருங்கள் இஜாசு.--Kanags \உரையாடுக 09:46, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
கவனிக்க கனகரத்தினம் சிறீதரன்இலங்கைத் துடுப்பாட்ட அணி கட்டுரையின் கட்டுரயில் சர்வதேச அரங்குகள் பகுதி மேலும் 300+ அதிகமான கட்டுரைகள் இதனால் இன்று பாதிக்கப்பட்டுள்ளன

கவனிக்க --Mohamed ijazz (பேச்சு) 11:08, 1 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Location mapலிருந்து Module:Location mapலுக்குள் arguments செல்லாமல் இருப்பதால் ஆங்காங்கே பிழைகள் வருகின்றன.(ஆங்கில விக்கியில் எப்படி செல்கிறது என்று தெரியவில்லை) சில மாறுதல்கள் செய்து சில வழுக்களை மட்டுப்படுத்தியுள்ளேன்--நீச்சல்காரன் (பேச்சு) 03:50, 4 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]


Community Participation Support at Swatantra 2014[தொகு]

Dear Wikimedians,

ICFOSS, Govt of Kerala in collaboration with FSF-India, CIS, SFLC.in, Swatantra Malayalam Computing and other like minded organisations is celebrating Swtantra-2014, fifth international free software confrence of Kerala. This is scheduled during 18-20 December 2014 at Thiruvananthapuram. More details about the event can be seen at : http://icfoss.in/fs2014/ .

CIS-A2K will be providing limited travel and stay scholarships to interested Wikimedians from various language communities to attend this event and benefit from it. Upto 10 scholarships are available for Wikimiedians applying from Kerala. Upto 3 scholarships will be considered from other Indic Wikimedians and India based English Wikipedians. If you are interested please register your name here on Meta.

Eligibility: You should have been a Wikimedian with a minimum of 200 edits on Wikimedia projects as on June 1, 2014.

Important dates: Nominate yourself by December 8, 2014 (many apologies for this delay and short notice). We will confirm support by December 9, 2014.

Travel & Stay information: (applicable only once the support is confirmed)

  • Low fare flight costs will be considered if your travel by bus/train is more than 24 hours to Thiruvananthapuram.
  • Stay in budget hotels, preferably on twin sharing basis.
  • All costs of the selected Wikimedians will be reimbursed on actual basis upon submission of original bills to CIS Office in Bangalore within 10 days of receipt.
  • It is essential to submit boarding passes along with tickets if you travel by a flight.
  • CIS could help book flight tickets upon request. Those interested to avail this support need to fill a form that we will circulate

Queries and correspondence:

  • For all queries, please write to rahim{at}cis-india.org and vishnu{at}cis-india.org

Expectations from selected Wikimedians:

  • Please see if you could utilize this opportunity to find solutions to some of the technical/other problems your community may be facing.
  • Do consider giving back the learning to your respective communities.
  • We would appreciate if you could share your experience and learning publicly. CIS-A2K will be happy to publish your write-up on our blog

If you know of a Wikimedian in your community who could benefit from this event and also could bring back learning to benefit your community, please encourage them to apply.--రహ్మానుద్దీన్ (பேச்சு) 11:32, 4 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]


வேற்றுமை உருபுகளின் தனித்த பயன்பாடு[தொகு]

ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்றவை வேற்றுமை உருபுகள் எனப்படுகின்றன. அவ்வாறே இல், ஆம், உடைய போன்றவையும். இவற்றை ஒரு சொல்லுடன் சேர்த்து எழுதுகையில் அவற்றுடன் புணர்த்தியும் இலக்கங்கள் முதலியவற்றுடன் சேர்க்கும் போது பிரித்தும் எழுதுவதே வழமை. மாறாக, ஒரு சிலர் எழுதுவது போன்று 86-ன், 98-கு, 21-ம் என்ற வழக்குகள் முற்றிலும் பிழை. இவ்வழக்கம் விக்கிப்பீடியாவிலும் இருப்பதைக் காண்கிறேன். இது தொடர்ந்து தமிழில் என்று எழுதுவதற்குப் பதிலாக தமிழ்'ல் என்றவாறும் தமிழுக்கு என்று எழுதுவதற்குப் பதிலாக தமிழ்'க்கு என்றவாறும் எழுதப்படுவதையும் காண்கிறேன். இது இப்படியே தொடர்ந்தால், இதையே சரியென்று எண்ணும் நிலையும் வரலாம். எனவே, இத்தகைய பிழையான வழக்குகளை விக்கிப்பீடியாவிலிருந்து அகற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:46, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--AntonTalk 07:40, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:04, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் பாஹிம் அவர்களே 86-ன், 98-கு, 21-ம் என்பவற்றுக்குப் பதிலாக 86 இன், 98 இற்கு, 21 ஆம் என எழுதுவது பொருத்தமானதா? உங்கள் கருத்தறிய ஆவல்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:39, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
ஆம், பொருத்தமானவையே. தமிழில் மெய்யெழுத்துக்கள் தனித்து வழங்குவதோ மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்குவதோ இல்லை.--பாஹிம் (பேச்சு) 11:20, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:27, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:33, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --கோபி (பேச்சு) 02:12, 11 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 00:42, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Mohamed ijazz (பேச்சு) 01:43, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் இவ்விலக்கணத்தின் மேன்மையால் தான், ஜி. யு. போப், தான் ஒரு தமிழ் மாணவன் என்றார்.--≈ உழவன் ( கூறுக ) 02:41, 14 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

நகர்த்தலுக்கு எதிர்ப்பும், தூய தமிழும்[தொகு]

நான் பதித்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் கட்டுரையை Kanags என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முசுலிம்கள் என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணத்தை அறியப்படுத்தவும்.

ஒருவேளை "ஸ்" என்பது வடமொழி என்பதால் மாற்றியிருந்தால் , விக்கியில் உள்ள மற்ற கட்டுரைகளை ஏன் மாற்றவில்லை?--Abdulbasith27 (பேச்சு) 13:17, 15 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

இணைப்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததே அப்போது நீங்கள் ஏன் கருத்திடவில்லை? ஒரு நாளில் திருத்தம் செய்ய முடியாது. புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைகள் அதிகம் கவனிக்கப்படுகின்றன. மேலும், இவ்வாறான உரையாடல்களை இங்கல்ல அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள். --AntonTalk 13:35, 15 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

முசுலிம் என்பதை விட இசுலாமியர் என்பதே தமிழில் சரி. ஆனால் தலைப்பு மாற்றம் பற்றி நான் கருத்தளிக்கவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:09, 16 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

உரையாடல் நயம் குறித்து கவனம் எடுக்கவும்[தொகு]

மற்றைய பயனர்களைச் சுட்டிப் பேசும்போது சிவகுமார் என்பவர் எனக்குறிப்பிடுவது நமக்கிடையில் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவது போல் உள்ளது. ஆகவே நேரடியாகவே சிவகுமார் எனக் கூறுவது சிறந்தது. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:45, 16 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Mohamed ijazz (பேச்சு) 04:30, 16 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

active user[தொகு]

கடைசி முப்பது நாட்களில் தொகுப்புக்கள் செய்திருந்தும் என் பெயரை இங்கு காணவில்லை. ஏதும் கோளாறா??? இந்த புள்ளிவிபரத்தை நம்பமுடியாது போல் உள்ளதே :) , யாராவது கூறவும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:56, 17 திசம்பர் 2014 (UTC) [பதிலளி]

ஆமாம் உங்களைக் காணவில்லை என்ன பிரச்சினையென்றும் தெரியவில்லை?!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:08, 17 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
நான் பார்த்தபோதும் காட்டவில்லை. பின்னர், தானியங்கிகளையும், நிர்வாகிகளையும் மறைத்துப் பார்த்தபோது தெரிந்தது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:44, 17 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித்தரவுகள்[தொகு]

விக்கித்தரவுகள் எப்படி இணைப்பது என்பது பற்றிய விளக்கம் எங்காவது உள்ளதா? இல்லாதவிடத்து இங்கு அதுபற்றிய குறிப்பினை இடலாமா? சிலர் பயனர் பக்கங்களில் விளக்கியிருந்ததைப் பார்த்துள்ளேன். அவற்றை பிரதி செய்தாலே போதுமாக இருக்கும். --AntonTalk 16:25, 17 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]