அடிப்படை வாதங்களின் மோதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிப்படை வாதங்களின் மோதல்
நூலாசிரியர்தாரிக் அலி
நாடுபாகிஸ்தான்
மொழிஆங்கிலம்
வகைநாவல்
வெளியீட்டாளர்தாரிக் அலி / வெர்சோ பதிப்பகம் 2002 (தமிழில்:கே.ரமேஷ்)
வெளியிடப்பட்ட நாள்
2002
ஊடக வகைஅச்சு (தடித்த, நூல் அட்டை)
பக்கங்கள்528 பக்கங்கள்

அடிப்படை வாதங்களின் மோதல் (The Clash of Fundamentalisms: Crusades, Jihads and Modernity) ISBN 978-1-85984-679-7 என்ற நூலை 2002ஆம் ஆண்டு தாரிக் அலி எழுதியுள்ளார். தாரிக் அலி [1] பாகிஸ்தானில் பிறந்த லண்டனில் வசித்த வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர். செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத்தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்து. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குதலை ஆதரித்தனர், அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்பும் நிலையில் அமெரிக்காவின் செயல்பாடுகள் தான் இவற்றுக்குக் காரணம் என்றால் மிகையல்ல என்பது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இஸ்லாமின் வரலாறு, கலாச்சாரம் அதன் செல்வங்கள் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தாரிக் அலி இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சி மற்றும் மேற்கத்திய காலனித்துவத்தின் புதிய வடிவங்கள் ஆகிய இரண்டிற்கும் ஒரு விளக்கத்தை வழங்கும் வகையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. [2]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Book Review by Versobooks [1]
  • Book Review by WRMEA [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tariq Ali Biography, Contemporary Writers, accessed 31 October 2006
  2. goodreads. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help); Text "https://www.goodreads.com/book/show/142009.The_Clash_of_Fundamentalisms" ignored (help)